*அட்டு* பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga‘அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்’ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக உள்ளது .

அண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் ‘அட்டு’. ரத்தின் லிங்கா இப்படத்தை இயக்கியிருந்தார்.

திறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான, ‘உக்ரம் ‘படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
.
இப்படத்தின் நாயகனாகப் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு துரை K.C. வெங்கட், இசை – பூ பூ சசி, கலை இயக்கம் – சுரேஷ் கேலரி, படத்தொகுப்பு – ப்ரவீன் உள்ளிட்டோர் இயக்குநருடன் கைகோர்த்துள்ளனர்.

தயாரிப்பு: ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga

Overall Rating : Not available

Latest Post