பாரதியார் பாடலை இசையமைத்து பாடிய ஏ. ஆர். ரஹ்மான் தங்கை.; கனிமொழி வெளியிட்டார்

பாரதியார் பாடலை இசையமைத்து பாடிய ஏ. ஆர். ரஹ்மான் தங்கை.; கனிமொழி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு A.R. ரஹ்மானின் தங்கையும்
இசையமைப்பாளருமான இஷ்ரத்காதரி இசையமைத்து பாடிய மகாகவி பாரதியார் எழுதிய “எந்தையும் தாயும் – வந்தேமாதரம்” பாடல் இன்று வெளியாக உள்ளது.

நம் நாட்டின் பெருமைகளை கூறவும் தன் தாய் நாட்டின் மீதுள்ள தன் நன்றியை வெளிப்படுத்தவும் இப்பாடலை உருவாக்கியதாக இஷ்ரத்காதரி தெரிவித்து இருக்கிறார்.

மேலு‌ம் இப்பாடலை தன் தாய் நாட்டிற்காக உருவாக்கியதில் பெறு மகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் கூறினார்.

தேசப்பற்றுமிக்க இந்த பாடலை இயக்குனர் மாதேஷ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இப்பாடலுக்கு ஒளிப்பதிவாளர் குருதேவ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாட்டுப்பற்றுமிக்க இப்பாடலின் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர், கனிமொழி கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

Production – Success 11
Music Composed and Sung by – IsshrathQuadhre
Lyrics – Mahakavi Bharathiyar
Direction – Madhesh
Cameraman – Gurudev
Editing – Dinesh PonRaj
Art Director- Iyappan
Stills – Boopathy
Make up – k. S.Venkatesh
Hair stylist – Thenmozhi
Recorded & Mixed – AM Studio
Sound Engineer – Pradeep, A J.Daniel
Set floor – Sasi studio capture lounge
co-ordination – Faiz, Govindan

Bharathiyar song composed and sung by A. R. Rahman’s younger sister

பாடகியும் நடிகையுமான ஷிவாங்கிக்கு ‘குக் வித் கோமாளி’ கொடுத்த புரமோஷன்

பாடகியும் நடிகையுமான ஷிவாங்கிக்கு ‘குக் வித் கோமாளி’ கொடுத்த புரமோஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்ஸ்’ என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி.

தன்னுடைய இனிமையான குரலால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் ஷிவாங்கி அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் செய்த காமெடி கலாட்டாக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனையடுத்து ஷிவாங்கிக்கு சினிமா வாய்ப்புகளும் வர தொடங்கின.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது ஜனவரி 28ம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கவுள்ளது. தற்போது புதிய ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இந்த ப்ரமோவில் கும்பகர்ணன்களாக மாறியுள்ளனர்.

இதுகுறித்து ஷிவாங்கி தன் ட்விட்டரில்…

“முன்னதாக வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை.. தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட் ஆகியுள்ளேன்.. த்ரில்லிங்கான இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை” என பதிவிட்டுள்ளார்.

Promotion for singer and actress Shivangi in ‘Cook with comali’

‘வாரிசு’ வெற்றி விழாவில் நரைத்த தாடி கலைந்த தலையுடன் விஜய்.; நடிக்காமல் பங்கேற்ற பிரபலம்.!

‘வாரிசு’ வெற்றி விழாவில் நரைத்த தாடி கலைந்த தலையுடன் விஜய்.; நடிக்காமல் பங்கேற்ற பிரபலம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவான படம் ‘வாரிசு’.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஸ்ரீமன், வி டிவி கணேஷ், பிரகாஷ்ராஜ், கணேஷ் வெங்கட்ராமன் & கௌரவ வேடத்தில் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி ரிலீசான இந்த படம் பெண்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை உலகளவில் ரூ. 250 கோடியை இந்த படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படத்தின் வெற்றி விழாவை விஜய் கொண்டாடியுள்ளார்.

நரைத்த தாடி கலைந்த தலைமுடி என இந்த விழாவில் பங்கேற்றார் விஜய்

இதில் இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், எடிட்டர் பிரவீன் கே எல், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜூ, சரத்குமார், பிரபு, ராஸ்மிகா சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த படத்தில் பணியாற்றாத நடிகையும் சரத்குமார் மனைவியுமான ராதிகாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

A celebrity who participated Varisu success party without acting in it

வீட்டு முதியவர்களை கொலை செய்யும் தமிழின குடும்பச் சடங்கு ‘தலைக்கூத்தல்’

வீட்டு முதியவர்களை கொலை செய்யும் தமிழின குடும்பச் சடங்கு ‘தலைக்கூத்தல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் எஸ். சஷிகாந்த்.

இவர் தலைமையிலான YNOT ஸ்டுடியோஸ், சிறந்த அறிமுக இயக்குநருக்காக தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் இந்திரா காந்தி விருது மற்றும் சிறந்த வசனத்திற்காக தேசிய விருது ஆகியவற்றை வென்ற ‘மண்டேலா’ படத்தை தயாரித்ததன் மூலம் தேசியளவில் கவனம் பெற்றது.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘தலைக்கூத்தல்’ என்கிற புதிய படத்தை YNOT ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ளது.

இந்த வரிசையில் அடுத்த நேர்மையான படைப்பாக தலைக்கூத்தல் வெளியாகவுள்ளது.

அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ், அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற்ற ‘லென்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

எந்த இயக்குநரிடமும் உதவியாளராக இவர் பணியாற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘லென்ஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘தி மஸ்கிடோ பிலாஸபி’ என்ற படத்தை இவர் இயக்கினார். பல்வேறு திரைப்பட விழாக்களில் இது இடம் பெற்றது. அதற்கு பிறகு தேசிய அளவிலான தொடர் திரைப்படம் (ஆந்தாலஜி) ஒன்றில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது.

“தலைக்கூத்தல்’ பற்றி ஜெயப்பிரகாஷ் கூறுகையில்….

“2018-ல் இந்தப் படத்திற்கான யோசனை தோன்றியது. வயது முதிர்ந்தவர்களை சொந்த குடும்பத்தினரே கொல்லும் இது போன்ற ஒரு பழக்கம் தென் தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளில் நடைபெறுவது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

அதை பற்றி பல்வேறு தளங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். இது சரியா தவறா என்பதை விவாதிப்பதை விட. எந்த சூழலில் குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை யோசித்த போது நிறைய கேள்விகள் தோன்றின.

இந்த கேள்விகளுக்கான விடையை தேடுவதே இந்த படத்தின் நோக்கம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“நடுத்தர குடும்பம் ஒன்று இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்கிறது. அப்போது அந்த குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கிறார்கள், எவ்வாறு அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படம் விவரிக்கும்,” என்றார்.

இந்த கதையை தயாரிக்க முன்வந்த YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் மற்றும் இதில் நடிக்க ஒப்புக்கொண்ட சமுத்திரக்கனிக்கு எனது நன்றி என்று இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

வையாபுரி, கதிர், முருகதாஸ், வசுந்தரா, கதாநந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தலைக்கூத்தல் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழ்ப் படம் – 1 மற்றும் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

யுகபாரதி இரண்டு பாடல்களுக்கு உணர்வுப்பூர்வமான வரிகள் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை மார்ட்டின் டான்ராஜும், படத்தொகுப்பை டேனி சார்லசும் மேற்கொண்டனர்.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில் YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கூடுதல் தகவல்…

வீட்டில் செயலற்று கிடக்கும் முதியவர்களை கொலை செய்யும் ‘தலைக்கூத்தல்’ என்ற சடங்கு முறையை மையப்படுத்தி உருவான படம் தான் ‘பாரம்’

இதை மையப்படுத்தி 2018-ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமா ‘பாரம்’ அந்தாண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.

Samuthirakani Kathir and Vasundhara starrer Thalaikoothal produced by YNOT Studios

நாடாளுமன்றத்தில் இளையராஜா வாங்கிய பூஜ்யம்.; நெட்டிசன்கள் கிண்டல்

நாடாளுமன்றத்தில் இளையராஜா வாங்கிய பூஜ்யம்.; நெட்டிசன்கள் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2022 டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத் தொடர் 2 வாரங்கள் நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில்.. நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். அவர் ஒரு விவாதத்திலும் கலந்துகொண்டார்.

அதுபோல வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளது.

எனவே நெட்டிசன்கள் இளையராஜாவை கிண்டல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட பதவியை அவர் மதிக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rajya Sabha MP Ilaiyaraja attendance details

எந்தக் கடவுள் அப்படி சொல்லுச்சு.?? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெத்தியடி பதில்

எந்தக் கடவுள் அப்படி சொல்லுச்சு.?? நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில சபரிமலையில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

பெண்களின் மாதவிடாய் பிரச்சினை காரணமாக இக்கோயிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஐதீக மரபு இது என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மகளிர் அமைப்புகள் பெரும் போராட்டங்கள் நடத்தினர்.

மக்களில் ஒரு பிரிவினர் இதற்கு ஆதரவு அளித்தாலும் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மலையாளத்தில் அண்மையில் வெளியான ‘மாளிகாப்புரம்’ என்ற படத்தில் பெண்கள் கோயிலுக்குள் செல்வது குறித்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பிரச்சனை தொடர்பாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது..

“பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்.

ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை.

அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது தான்.”

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

Which god said that.? Actress Aishwarya Rajesh bold reply

More Articles
Follows