விஜய்சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் இமயம்.; கனவு நிறைவேறுமா.?

விஜய்சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் இமயம்.; கனவு நிறைவேறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathiraja vijay sethupathi20 வருடங்களுக்கு முன்பே பிரபல கதாசிரியர் ரத்தினக்குமார் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கவிருந்தார் பாரதிராஜா.

இது இயக்குனர் இமயத்தின் கனவுப்படம் என்றே கூறப்படுகிறது.

அப்போது சிவாஜி கணேசனை அதில் நடிக்க வைக்க விரும்பினாராம்.

ஆனால் பல பிரச்னைகளால் அந்த படம் தொடங்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை கதையை கையில் எடுத்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் பிரச்னை உருவானது.

இதனால் பாலா இந்த கதையை கைவிட்டார்.

அதன்பின்னர் பாரதிராஜா நடிப்பதில் பிஸியாகிவிட்டார். பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குற்றப்பரம்பரை கதையை திரைப்படமாக்க விரும்புகிறாராம்.

இதில் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Bharathirajas dream movie Kutra Parambarai is connected with Vijay Sethupathy

BIG NEWS மக்கள் மன்றம் கலைப்பு..; எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை – ரஜினி

BIG NEWS மக்கள் மன்றம் கலைப்பு..; எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என ரஜினி அறிவிப்பு..

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதால் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருந்தேன்

கால சூழலால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் சாத்தியப்படவில்லை.

வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை.

மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவும் இன்றி ரசிகர் மன்றம் செயல்படும்.

மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினி ரசிகர் மன்றம் செயல்படும்”

இவ்வாறு ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Super Star Rajinikanth has disbanded Rajini Makkal Mandram

பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்க தயாரானார் நடிகர் சூர்யா

பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்க தயாரானார் நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது.

மாறா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாப்பாத்திரமாகவே சூர்யா அவர்கள் படத்தில் வாழ்ந்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தின் வாழ்க்கைப் பயணமே ‘சூரரைப் போற்று’ படமாக உருப்பெற்றது.

ஏழை, எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்தை அடைய ஒரு சாதாரண மனிதன் உலகின் பெரு முதலாளிகளுடன் நடத்திய போராட்டமே சூரரைப் போற்று என கொண்டாடப்பட்டது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சூரரைப் போற்று’ திரையாக்கம் செய்யப்பட்டிருந்தது.

78வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில் பத்து இந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் சூரரைப் போற்று திரைப்படமும் ஒன்று. மேலும் 93வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கான போட்டியிலும் ‘சூரரைப் போற்று’ திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IMDB தளம் தொடங்கப்பட்ட கடந்த முப்பது ஆண்டுகளில் 9.1 சதவீதம் அளவிற்கு அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஒரே இந்திய மொழித் திரைப்படம் ‘சூரரைப் போற்று’ மட்டுமே. ‘சஷாங் ரிடம்ஷ்ன்’, ‘காட் பாதர்’ என்ற உலகத் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக ‘சூரரைப் போற்று’ இடம்பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், பிரம்மாண்டத் தயாரிப்பாக இந்தியிலும் வெளிவர இருக்கிறது.

தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க, நடிப்பில் தேர்ந்த பிரபலமான நடிகர் நடிகையர் நடிக்க இருக்கிறார்கள்.

சூரரைப் போற்று இந்தி திரைப்படத்தை: சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் பாண்டியன் தலைமையிலான 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தி ரீமேக் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில்்…

“சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டும் இதுவரை பார்த்திராதது. இந்தக் கதையை நான் கேட்டது முதலே இது தென்னக ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனெனில் அந்தக் கதையில் ஜீவன் அத்தகைய வலிமை வாய்ந்ததாக இருந்தது.

உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உத்வேகம் தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில் தயாரிப்பதும், தரமான படங்களை தொடர்ந்து தந்துவரும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என சூர்யா தெரிவித்தார்.

இந்த படத்தின் நிஜ, நாயகரான கேப்டன், ஜி.ஆர்.கோபிநாத் குறிப்பிடும்போது, “படத்தின் இயக்குநர் சுதா ‘என் கதையைச் சொல்ல வேண்டும்’ என்று என்னை அணுகியபோது நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படத்தை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருக்கு இருந்த அக்கறையும், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணமும் என்னை ஒப்புக்கொள்ள வைத்தன..!

சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தங்கள் கனவுகளைத் துரத்த குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. தற்போது இந்தி ரீமேக்கையும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் “என்றார்.

அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது,

மக்களிடம் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மீது எங்களுக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு.! பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்பதையே எங்கள் நிறுவன திரைப்படங்கள் எப்போதும் முயற்சித்து வருகின்றன.

சூரரைப் போற்று’ திரைப்படம் நிகழ்த்தியுள்ள மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களுக்கும் கொண்டு செல்வதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.!

குறிப்பாக, சூர்யா, ஜோதிகா, ராஜசேகர் ஆகியோருடன் இணைவது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது.! இதுபோன்ற உயர்த்தரமான படைப்புகளை தொடர்ந்து தந்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்று நம்புகிறேன்.

இயக்குநர் சுதாவை இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக நாங்கள் மதிப்பிடுகிறோம். அவருடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தக் கதையை உலகம் முழுதும் இருக்கும் ரசிகர்களுக்கு அவர் எப்போது தருவார் என்பதைப் பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Actor Suriya’s 2D Entertainment and Abundantia Entertainment come together to remake ‘Soorarai Pottru’ in Hindi

Breaking: அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்கிறேன் – ரஜினிகாந்த்

Breaking: அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்கிறேன் – ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தன் உடல்நிலையை காரணம் காட்டியும் தன்னை நம்பியவர்களை கொரோனாவுக்கு பலிகடா ஆக்க மாட்டேன் என கூறி அரசியலுக்கு முழுக்கு போட்டார் ரஜினிகாந்த்.

இந்த அறிவிப்புக்கு பிறகு 6 மாதங்களை கடந்துவிட்ட நிலையில் (சட்டமன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சியும் அமைந்துவிட்டது) இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்து பேசுகிறார்

அதன்படி இன்று தன் வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது..

“மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன்” என்றார் ரஜினிகாந்த்.

Rajinikanth says will reconsider entering politics

புதுச்சேரி அமைச்சரவை : முதல்வர் ரங்கசாமி மற்றும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்

புதுச்சேரி அமைச்சரவை : முதல்வர் ரங்கசாமி மற்றும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவித்து 2 மாதங்களாகிவிட்டன.

அதன்பின்னரே எந்த துறைக்கு அமைச்சர்கள் யார்? என்பதே முடிவானது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

1) க.லட்சுமி நாராயணன் –

பொதுப்பணித்துறை, சுற்றலாத்துறை, விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.

2) தேனி சி.ஜெயக்குமார் –

வேளாண், கால்நடைத்துறை, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்.

3) சந்திரபிரியங்கா – ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாசாரம்.

4) ஏ.நமச்சிவாயம் –

உள்துறை, மின்சாரத்துறை, தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வித்துறை.

5) சாய் ஜெ.சரவணன்குமார் –

நுகர்பொருள் வழங்கல், ஊரக வளர்ச்சித்துறை, சிறுபான்மையினர் நலன், சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Puducherry State Ministers Portfolio Release

POWER IS A STATE OF MIND.; ‘வலிமை’ மோஷன் போஸ்டர் & பர்ஸ்ட் லுக் வெளியானது

POWER IS A STATE OF MIND.; ‘வலிமை’ மோஷன் போஸ்டர் & பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது.

அஜித்மின் “வலிமை”  படத்தைப் பற்றிய  தகவலுக்காக  நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் பேரார்வத்தை தணிக்கும் வகையில் “வலிமை” மோஷன் போஸ்டரை,  படத்தின்  முதல் தோற்றத்தை தற்போது  வெளியிட்டுள்ளனர்.

இத்துடன் மோசன் போஸ்டரில் இடம்பெற்ற POWER IS A STATE OF MIND என்ற வாசகமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இன்று மாலை  மோஷன் போஸ்டர் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே,  படத்தின் தலைப்பு மற்றும் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பிரபலமாகி,  வைரலாக பரவி  வருகிறது.

இது உலகளவில் “வலிமை” படத்தின் மீதான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை எடுத்துக் காட்டும்படி அமைந்துள்ளது

“வலிமை”  படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு இறுதியில் “வலிமை” திரைப்படம்  உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் உலகளவில்  மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் தமிழ் படமான  “வலிமை” படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும்  Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில்  ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.  

இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

படத்தில் மிக வலுவான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து  பணியாற்றியுள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார்.

கே.கதிர்  கலை இயக்கம் செய்ய, அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Ajiths Valimai Motion poster and First look poster released

https://t.co/606Dx9NrY1

Please use the below link to download the HD Poster of Valimai

https://fromsmash.com/ValimaiHDPoster

More Articles
Follows