விஜய்-சூர்யாவை பழித்து கோட்டை கட்டாதே; மீரா & நடிகர் சங்கம் & மீடியாவுக்கு பாரதிராஜா கண்டனம்

விஜய்-சூர்யாவை பழித்து கோட்டை கட்டாதே; மீரா & நடிகர் சங்கம் & மீடியாவுக்கு பாரதிராஜா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja slams Meera Mithun Nadigar Sangam and Media 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனையடுத்து ஓரிரு படங்களில் நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.

கடந்த சில நாட்களாக நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யாவை விமர்சித்து வந்தார். மேலும் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை படு கேவலமாக விமர்சித்தி இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா அவர்கள் மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்…

என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்!

சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.

புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.

இதோ,

நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்..

கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்?

திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!

அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.

திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி… எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.

வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல்,

இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்… பசியைப் போக்கும்… அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்.

நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்… நடிகர் சங்கம்
மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.

தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது?

யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்… அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??

சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்… ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை … எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே..

இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை… தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன்.

நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்… ??!நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட…

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன.

ஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது.

உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே…

என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது.

ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

Bharathiraja slams Meera Mithun Nadigar Sangam and Media

நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை..; வாழ வைத்த தெய்வங்களை நெகிழ வைத்த ரஜினி

நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை..; வாழ வைத்த தெய்வங்களை நெகிழ வைத்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Neenga illama Naan illa Rajinis thanks note for 45 Years of Rajinism45 வருடங்கள்…. ஒரு துறையில் ஒருவர் இத்தனை வருடங்களாக முன்னணியில் இருப்பது எல்லாம் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.

அதுவும் பலத்த போட்டிகள் நிறைந்த சினிமா உலகில்.. அதுவும் சினிமா ஹீரோவுக்கு உரித்தான சிவப்பான முகம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை தகுதியும் இல்லாத ஒருவர் 45 வருடங்கள் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா?

எல்லாவற்றையும் செய்து காட்டி இன்றளவும் மங்காத நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் ரஜினிகாந்த் என்று பெயரிடப்பட்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. இந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டனர்.

இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன், சௌந்தர்யா ரஜினி, அர்ச்சனா, ராகவா லாரன்ஸ் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கிட்டதட்ட 100க்கும் மேற்பட்டபிரபலங்கள் இதை வெளியிட்டனர். இதை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்த வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ரஜினி பதிவிட்டுள்ளதாவது…

“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை”.

என பதிவிட்டுள்ளார்.

Neenga illama Naan illa Rajinis thanks note for 45 Years of Rajinism

அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்

அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thanigai new movie launchSri Devi Entertainment சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.

பல தமிழ் படங்களுக்கு finance செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.

பாகுபலி,கபாலி, கத்தி,விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார்.

தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக நடித்தவரும் அருள்நிதியின் டைரி படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் தணிகை இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

மருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினாள் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும் படியாகவும் இந்த படம் உருவாகிறது.

ரான்,எழுமின் போன்ற படங்களில் பணியாற்றிய வியன் ராஜா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

உறியடி படத்தின் கலை இயக்குனராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இப்படத்திற்கு கலை அமைகிறார்.

ப்ரெண்ட் ஷிப் படத்தின் இசையமைப்பாளரும் சமீபத்தில் வெளியான Rajini anthem பாடலுக்கு இசையமைத்த DM உதயகுமார் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

எழுமின், My Dear Lisa, அலேகா படத்தில் பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்தின் editor ஆக பணியாற்றுகிறார்.

கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரி chairman Dr. மக்கள் G இராஜன் பங்கேற்க அரசாங்க விதிமுறை படி எளிதாக நடைபெற்றது.

படபிடிப்பு துவங்குவது சம்பந்தமான அறிவிப்பு வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள வழி காட்டுதலின் படி படபிடிப்பு நடைபெறும்.

படபிடிப்பு துவங்கும் முன் இப்படத்தின் tittle ஐ வெளியிட முடிவு செய்துள்ளோம்.

விஜய் படத்தை அடுத்து அஜித் பட ரீமேக்கிலும் சிரஞ்சீவி..?

விஜய் படத்தை அடுத்து அஜித் பட ரீமேக்கிலும் சிரஞ்சீவி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith chiranjeeviசிவா இயக்கத்தில் அஜித், சூரி, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘வேதாளம்’.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

‘பில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த மெஹர் ரமேஷ் இந்த படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே விஜய்யின் கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் (Khaidi No. 150) சிரஞ்சீவி நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆன்மிக அரசியல் யுக்தி ஆரம்பம்.; உண்ணாவிரதமிருந்து மக்களை கவர ரஜினி ப்ளான்.!

ஆன்மிக அரசியல் யுக்தி ஆரம்பம்.; உண்ணாவிரதமிருந்து மக்களை கவர ரஜினி ப்ளான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் இந்த 2 1/2 ஆண்டு இடைவெளியில் தன் அரசியல் கட்சி பணிகளை கட்டமைத்து வருகிறார்.

வருகிற 2021 ஆம் ஆண்டில் தேர்தலை சந்திக்க ரஜினிகாந்த் தயாராகி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராகி விட்டதாகவும் பிரச்சார கூட்டம் குறித்த யுக்திகள் அனைத்தையும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது நேரில் சந்திக்கும் அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதில்…. ’தேர்தல் பிரச்சாரங்களில் ரஜினிகாந்த் பல்வேறு யுக்திகளை கடைபிடிப்பார்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் அந்த உண்ணாவிரதத்தில்…

நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.

மக்கள் தயவு செய்து பணத்திற்காக ஓட்டு போட வேண்டாம்.. ஜாதி மதம் பார்த்து ஓட்டு போட வேண்டாம் என வலியுறுத்த போகிறாராம்.

இதுபோல பல யுக்திகளை ரஜினி வகுத்து இருப்பதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவை தலைவராக ஏற்க முடியாது.; தாணு சொல்வதை கேட்க முடியாது.. சிங்காரவேலன் சீற்றம்

பாரதிராஜாவை தலைவராக ஏற்க முடியாது.; தாணு சொல்வதை கேட்க முடியாது.. சிங்காரவேலன் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer singaravelanஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விநியோகஸ்தருமான தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து ஆடியோ பதிவிட்டுள்ளார்.

அதில்…. தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

பாரதிராஜா கிட்டதட்ட 100 தயாரிப்பாளர்களுடன் புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் தாணு புகார் தெரிவித்தார்

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் தாணு பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்திற்கு வாருங்கள்… உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்.

தாணுவின் சொந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிய அணியாக களமிறங்க இருக்கிறோம்” என்றார் சிங்காரவேலன்.

More Articles
Follows