தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த சித்ரா அண்மையில் தற்கொலை செய்துக் கொண்டார்.
இனி முல்லையாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் நினைத்தாலும் சீரியலை ஓட்டியாக வேண்டுமே.
எனவே முல்லை கேரக்டருக்கு நடிகை தேடும் படலம் தொடங்கியுள்ளது.
சீரியல் நடிகை சரண்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்துள்ளார்.
நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமாராஜ்..
இனி முல்லையாக நடிக்கப்போவது இவரா என ஒரு யூடியூப் வீடியோவையும் இணைத்துள்ளார்.
அதில் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடிக்கும் காவ்யா இனி முல்லையாக நடிப்பது போல கருத்து தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவே (மீனாவே) இப்படி கூறியிருப்பதால் நம்பித்தானே ஆகனும்..
சரி காத்திருப்போம்…
Bharathi Kannamma Kavya as Mullai in Pandian stores?
