ஆர்கானிக் உணவு மோசடியை அம்பலப்படுத்தும் *திசை*; பாக்யராஜ் பாராட்டு

ஆர்கானிக் உணவு மோசடியை அம்பலப்படுத்தும் *திசை*; பாக்யராஜ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhisaiலைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்..

படத்தின் இயக்குனர் வரதராஜன் கூறும்போது, “இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம்.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் சரியானது தானா என்பதையம் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம்.

இந்த ஆர்கானிக் பொருட்கள் மோசடியால் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த மோசடி குறித்து ஆய்வு செய்தபோது நிறைய அதிர்ச்சியான தகவல்கள் எனக்கு கிடைத்தன. ஆர்கானிக் உணவுப்பொருட்களின் மீதான மக்களின் நம்பிக்கையை காசாக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும் என நினைத்தே இந்தப்படத்தை இயக்கியுள்ளேன்.

அதுமட்டுமல்ல ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் நடக்கும் சில மோசடிகளையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளோம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் நபர் ஒருவரே இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் அதை பற்றிய நிறைய தக்வல்கள் எங்களுக்கு கிடைத்தன..

இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இந்தப்படம் முக்கோண காதல் கதையாகவே நகரும்.. ஒருவர் ஆர்கானிக் உணவுப்பொருட்களில் நடக்கும் மோசடியையும், இன்னொருவர் ரியல் எஸ்டேட்ட் பிசினஸில் நடக்கும் மோசடிகளையும் இரண்டு ஹீரோக்களுக்கு இணையாக இரண்டு வில்லன்களும் படத்தில் இருக்கின்றனர்.

எனது குருநாதர்கள் காமெடி,ஆக்சன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது” என்கிறார் வரதராஜன்.

சமீபத்தில் தான் இந்தப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.. இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் திருச்சி துறையூர் பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்கள் நடத்தியுள்ளார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jani Chiragjaniகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இதில் சூர்யாவுடன் சாயிஷா, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும், பாலிவுட் நடிகருமான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறாராம்.

இன்று சிரக் ஜானி பிறந்த நாள் என்பதால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ் படம் ‘சூர்யா-37’ என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*

விரைவில்… சிம்புவுக்கு *பெரியார் குத்து*; டி.ஆருக்கு *டாஸ்மாக் பூட்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRரமேஷ் தமிழ்மணி இசையில், சிம்பு பாடி ஆடி நடித்துள்ள ‘பெரியார் குத்து” பாடல் ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது.

சிம்புவை தொடர்ந்து தற்போது அவரது அப்பா டி. ராஜேந்தரும் ஒரு பாடலை வெளியிடவுள்ளார்.

தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார்.

கடந்த ஆண்டு கபிலன்வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார்.

மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடவிருக்கிறார்கள்.

பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.

Breaking அரசியல் முதிர்ச்சியில்லாத ரஜினி..; அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

Breaking அரசியல் முதிர்ச்சியில்லாத ரஜினி..; அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and jayakumarகலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டு பேசும் போது…

கருணாநிதி இறுதி அஞ்சலியில் முதல்வர் கலந்துக் கொள்ள வில்லை என்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது…

ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது; ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை.

மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது.” என பேசினார்.

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாசர்-ராதாரவி-விஷால் பேச்சு

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாசர்-ராதாரவி-விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nassar Radharavi and Vishal speech Kalaignar Karunanidhi Memorial Gathering by FEFSIதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பிறகு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S. துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாசர் பேசும்போது…

ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார்.

பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம். இவ்வாறு பேசினார்.

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,

அதுபோல இந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால் தான் படம் பார்க்கவே வருவார்கள்.
இறுதி காலத்தில் ராமானுஜர் அவர்களுக்கும் வசனம் எழுதினார்கள், கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர் என்று கூறினார்.

விஷால் பேசும்போது,

மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

ராதாரவி பேசும்போது,

கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள் தான் என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார் என்றார்.

அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இடம் காமராஜர் அரங்கம்,சென்னை

Nassar Radharavi and Vishal speech Kalaignar Karunanidhi Memorial Gathering by FEFSI

அதிமுக விழாவில் கருணாநிதி படம்; ரஜினி கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா?

அதிமுக விழாவில் கருணாநிதி படம்; ரஜினி கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunanidhi Photo to be placed at ADMK Annual celebration Rajini request to CMகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது…

கலைஞர் அவர்களால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள்.

யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும்.

அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார்.

அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.” என்று பேசினார்.

இந்த தற்போது ஆளும் அதிமுக அரசு ஏற்றுக் கொள்ளுமா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை ஏற்பாரா? என்பதை பார்ப்போம்.

Karunanidhi Photo to be placed at ADMK Annual celebration Rajini request to CM

More Articles
Follows