விஜய்யை போல் அவரது ரசிகர்கள் இல்லையே..; பாக்யராஜ் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கியுள்ள விஜய்யின் சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ல் வெளியாகிறது.

இப்படத்தின் கதை என்னுடையது என செங்கோல் பட கதை உரிமையாளர் வருண் என்கிற ராஜேந்திரன் கோர்ட்டில் வழக்கு போட இது பிரச்சினையானது.

தற்போது கோர்ட்டில் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. மேலும் வருண் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க முருகதாஸ் சம்மதம் சொல்லியிருக்கிறார் என கூறப்படுகிறது-

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே உதவி இயக்குனர் வருணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடியவர் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ்.

இன்று கோர்ட்டில் வழக்கு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பாக்யராஜ் பேசியதாவது :

சர்கார் கதை விவகாரத்தில் முடிந்தவரை வெளியே பிரச்னை தெரியாமல் சுமூகமாக பேசி தீர்க்க முயற்சித்தேன்.

சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை மறுத்த முருகதாஸ் இப்போது கோர்ட்டில் சம்மதம் சொல்லியிருக்கிறார். பிரச்னை சுமூகமாக முடிந்தது மகிழ்ச்சி.

அதேசமயம் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். நான் ஏதோ விஜய் படத்திற்கு தடை ஏற்படுத்துவது போன்று என்னையும், எனது மகன் சாந்தனுவையும் விஜய் ரசிகர்கள் மிகவும் விமர்சித்தார்கள்.

என் மகனும் விஜய்யின் ரசிகன் தான், விஜய்யை எனக்கு நன்றாக தெரியும். அதேப்போல் வருணை விட முருகதாஸை எனக்கு நன்றாக தெரியும்.

அப்படி இருக்கையில் எதற்காக வருண் பக்கம் நிற்க வேண்டும். நான் ஒரு சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறேன், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் படத்தின் கதையை வெளியில் சொன்னேன்.

இதுதொடர்பாக விஜய்யிடம் பேசினேன். அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். எனது படம் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லவில்லை, உங்கள் மனதிற்கு எது நியாயமோ அதை செய்யுங்கள் என்றார்.

விஜய்யின் பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்று பாக்யராஜ் உருக்கமாக பேசினார்.

மீண்டும் அஜித்துடன் இணையும் ஏஆர். ரஹ்மான்; வினோத் இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தற்போது மீண்டும் அஜித் படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித்.

இப்படம் 2019 பொங்கலுக்கு வருகிறது. இதனையடுத்து 2019 பிப்ரவரியில் தன் அடுத்த படத்தை தொடங்குகிறார் அஜித்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் எனவும் இதில் திருமணமான நடிகை நஸ்ரியா ரீ-எண்ட்ரி கொடுக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்கும்… : ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு “சமத்துவம் அறிதல்” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

”உளவியலை கட்டமைக்கும் உட்கூறுகள்”, “தமிழகத்தில் கலையும் இலக்கியமும்”, “கலை இலக்கியத்தில் சாதி”, “பொதுப்புத்தியை உதிர்த்தல்”, “சாதி மறுப்பு சாதி ஒழிப்பின் தேவையும் சாத்தியங்களும்” , “சாதி ஒழிப்பு சமத்துவக்கருத்தியலை கலை இலக்கிய வடிவங்களாக்குதல்” ஆகிய தலைப்புகளின் கீழ் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ், அழகிய பெரியவன், AB.ராஜசேகரன், யாழன் ஆதி, பிரளயன், சுகிர்தா ராணி, வ.கீதா, பாமா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய இயக்குனர் பா.இரஞ்சித்,

”எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்பு அவசியம். வாசித்தலும், எழுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாக இருக்கிறது. புத்தகங்கள் மட்டுமே நம்மை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

இந்த சமூகத்தில் இருக்கும் பாகுபாடுகள், அரசியல், வாழ்வியல் வரலாறுகளை புத்தகங்களே நம்மை கேள்வியெழுப்ப வைக்கும். இந்த மூன்று நாள் நிகழ்வு இளம் எழுத்தாளர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது, நான் இந்த நிகழ்வுக்கு ஒரு மாணவனாகத்தான் கலந்துகொண்டேன். பெரும் பயனுள்ளதாக இருந்தது, கலை இலக்கிய களத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவோம்” என்றார்.

மூன்று நாள் நிகழ்விலும் கலந்து கொண்ட இளம் எழுத்தாளர்கள், “இதுபோன்ற முன்னெடுப்புகள் மிக அவசியமானவை.

எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்களுக்கு பல கதவுகளை இந்த நிகழ்வு திறந்து விட்டிருக்கிறது. இதன் மூலம் எங்களுடைய புரிதலும், சமூகத்தின் மீதான அக்கறையும் கூடியிருக்கிறது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த “நீலம் பண்பாட்டு மையம்” தோழர்களுக்கு நன்றி” எனக் கூறினார்கள்.

மேலும் நிகழ்வின் சிறப்பம்சமாக, மூன்று நாட்கள் இரவிலும் “பேராவூர் ரூபகம் தெருக்கூத்து சபாவின் மதுரை வீரன் நாடகம்”, “சென்னை கலைக்குழுவின் வீதி நாடகங்கள்” போன்ற தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

சர்கார் ரிலீஸ் அப்டேட்ஸ்..: 80 நாடுகள்; 200 கோடி; 1200 தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வருகிற நவம்பர் 6ஆம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் பேச்சு இப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் இதன் வியாபாரம் மட்டும் ரூ. 200 கோடி வரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் சர்கார் வெளியாகிறது.

சுமார் 80 நாடுகளில் 1200 தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் வெளிநாட்டு உரிமையை ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் *கண்ணாடி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான ‘மதுர வீரன்’ திரைப்படத்தை ‘V ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் “ஆடை” எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து “V ஸ்டுடியோஸ்” நிறுவனம் “ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் “உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘கண்ணாடி’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார்.

இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பர்ணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற பல பிரபல வெற்றிபட ஹீரோயின்களை அறிமுக படுத்திய “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ஆன்யா சிங்கை அவர்கள் தயாரித்த ‘கைதி பேண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து “யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்” நிறுவனம் ‘கண்ணாடி’ திரைப்படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்க்கு பரிந்துரைத்து “V ஸ்டுடியோஸ்” உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.

சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா வுடன் இணைந்து ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘திருடன் போலிஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.

ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, திரைப்படங்களை இயக்க வருவதற்க்கு முன் பல படங்களின் VFX காட்சிகளை அமைத்த தன் சொந்த அனுபவங்களை கொண்டு இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முன்னணி VFX ஸ்டுடியோக்களுடன் இணைந்து உண்மைக்கு நிகராக வடிவமைத்து வருகிறோம்.

மேலும் ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு இத்திரைப்படத்தை ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறினார்.

இசை : S.S.தமன்

ஒளிப்பதிவு: P.K.வர்மா

படத்தொகுப்பு: K.L.பிரவின்

கலை: விதேஷ்

ஸ்டண்ட்: ‘ஸ்டன்னர்’ சாம்

பாடல்கள்: யுகபாரதி

நடனம்: ஷெரிஃப்

சவுண்ட் டிஸைன்: சம்பத் ஆழ்வார்

நிர்வாக தயாரிப்பு: கிருபாகரன் ராமசாமி

தயாரிப்பு: விஜி சுப்ரமணியன் & சாந்தி ஸ்ரீனிவாச குரு

வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளிவரவிருக்கிறது.

பாஜகவின் ஊதுகுழல் கமல்.; ரஜினியை சந்தித்த பின் கராத்தே தியாகராஜன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும் ரஜினியுடன் நெருக்கமான நட்பில் உள்ளவர் கராத்தே தியாகராஜன்.

இவர் அடிக்கடி ரஜினிகாந்தை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

விரைவில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ள நிலையில், தற்போதும் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் கராத்தே தியாகராஜன்.

இதனால் தமிழக காங்கிரஸார் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினியை சந்தித்தது குறித்து கராத்தே தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். முரசொலி பத்திரிகையில் ரஜினி குறித்து வந்த கேலிக்கட்டுரைக் குறித்தும் விவாதித்தோம்.

ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் தமிழகத்தில் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். பாஜகவின் ஊதுகுழலாக இருக்கிறார் கமல்ஹாசன்.” என தெரிவித்துள்ளார் கராத்தே தியாகராஜன்.

Karate Thiyagarajan about Rajinikanth and Kamalhassan politics

More Articles
Follows