விஜய்ஸ்ரீ தொடங்கி வைத்தார்.; இன்று மீண்டும் இணைந்த பாக்யராஜ் & ஐஸ்வர்யா ஜோடி

விஜய்ஸ்ரீ தொடங்கி வைத்தார்.; இன்று மீண்டும் இணைந்த பாக்யராஜ் & ஐஸ்வர்யா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு மாதங்களுக்கு முன் மோகன் – குஷ்பூ ஜோடி இணையும் ‘ஹரா’ பட அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

இந்த ஜோடி தமிழில் இணைவது முதன்முறை என்றாலும் 33 வருடங்களுக்கு முன்பு 1988ல் வெளியான ‘ஆத்ம கதா’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்து இருந்தனர்.

தற்போது தமிழில் அது போல 30 வருடங்களுக்கு பிறகு பாக்யராஜ் – ஐஸ்வர்யா ஜோடி இணைந்து நடிக்கின்றனர்.

அதன் விவரம் வருமாறு…

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் பல வித்தியாசமான படைப்புகளை தயாரித்து வருகிறார்.

அவரது அடுத்த தயாரிப்பாக உருவாகும் “Production No.4” படத்தினை கணேஷ் K பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ‘ராசுக்குட்டி’ (1992) என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.

‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

Bhagyaraj and Aishwarya joins for a new film

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி.; ஏன் தெரியுமா.?

முதல்வர் முக ஸ்டாலினை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் பிப்ரவரி 28ல் நடைபெற்றது.

இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

‘பூம்புகார் பதிப்பகம்’ இந்த நூலை வெளியிட்டது.

இந்த நிலையில் இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் படித்து இன்று மார்ச் 23ல் பாராட்டியுள்ளார்.

இதனை குறிப்பிட்டு ரஜினிக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அந்த பதிவில்…

‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!..

என பதிவிட்டுள்ளார்.

Rajinikanth wishes to Tamil Nadu CM Mk Stalin

மாமனிதனாக உயர்ந்த மக்கள் செல்வன்.; ஒரு லட்சம் குடும்பத்துக்கு விஜய்சேதுபதி உதவி

மாமனிதனாக உயர்ந்த மக்கள் செல்வன்.; ஒரு லட்சம் குடும்பத்துக்கு விஜய்சேதுபதி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு
கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம்.

சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களது
தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில்
இறங்குவார்கள் என்பதற்காகவே இச்செய்தி.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக் கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ,’கடைசி
விவசாயி’என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது உண்மையில் சிலிர்ப்பாக இருந்தது.

இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை.

யெஸ்… கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் இந்த ‘மாமனிதன்’.

அச்செயல் இன்னும் பல்கிப்பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

எப்படி சாத்தியமானது இப்படி ஒரு வேள்வி என்று கேள்வி எழுகிறதல்லவா? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பாக்கலாம் வாங்க…

பெயர் இ.பா.வீரராஹவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறார்.

2019 வரை அப்படி அவரால் வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,345ஐத் தொடுகிறது. சாதனை சின்னது என்றாலும் பொன்னது அல்லவா?

இத்தகவலை அறிந்த சன் டி.வி சமூக செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் ’நம்ம ஊரு ஹீரோ’ நிகழ்ச்சியில் அவரை சிறப்பித்து கவுரவிக்கிறது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நவீன வள்ளலார் நம்ம விஜய் சேதுபதி.

இனி வீரராஹவனே தொடர்கிறார்…

’’நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சாரை தற்செயலாக சந்தித்தது என் வாழ்வில் நடந்த அற்புதம் என்றே சொல்வேன்.

பொருளாதாரரீதியாக வலுவாக இல்லாத நான், அப்போது மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு பகுதிநேர சமூக சேவையாகவே அதைச் செய்து வந்தேன்.

அந்நிகழ்ச்சியின்போதும் அது முடிந்தபிறகும் என்னிடம் மிகவும் அக்கறையாகப் பேசிய விஜய் சேதுபதி….

,” நீங்க செய்யிற இந்த சேவையை முழு நேரமாகத் தொடர என்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்யிறேன்’ என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார்.

அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மந்திரச் சொற்கள் மாதிரியே பட்டது. அவர் வார்த்தைகளை நம்பி, உடனே என் வேலையை ராஜினாமா செஞ்சேன்.

அந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி மார்ச் மாதம் 2019 ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பல பகுதியில் இருந்து – வேலை அளிக்கும் நிறுவனங்கள்கிட்ட இருந்து, வேலை தேடுபவர்களிடமிருந்து அழைப்புகள் தொலைபேசி & வாட்சப் மூலமாகவும் அதிக அளவில் வந்து சேர்ந்தது.

அந்தத் தகவலை சார் கிட்ட சொன்னபிறகு பயங்கர உற்சாகமாகிட்டார். அதற்குத்தானே ஆசைப்பட்டார் விஜய் சேதுபதி? உடனே புதுச்சேரி-தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து இந்த சேவையை விரிவாக செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட உதவினார் .

உதவினார் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. எனக்கும் என்னைச் சார்ந்த ஊழியர்கள் அத்தனை பேருக்கும் சரியான தேதியில் சம்பளப்பட்டுவாடா செய்துகொண்டே இருந்தார்.

சாரோட ஸ்ட்ராங்கான சப்போர்ட்டால, 14 மார்ச் 2019 ல் புதுச்சேரியில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் – அலுவலகம் என்னை நிறுவனர் & நிர்வாக அறங்காவலராகக் கொண்டு செயல்படத்துவங்கிச்சு.

அதை தொடர்ந்து தமிழ்நாடு & புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் இருந்து சிறு, குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வேலை தேடும் நபர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார்.

அந்த வேலைவாய்ப்பு தகவல்களை வாட்சப் & YOUTUBE மூலம் கொண்டு சேர்த்ததன் பயனாக பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் அதிக அளவின் வர துவங்கியது ,

அந்த சேவை முற்றிலும் கட்டணமின்றி கிடைக்கப்பெற்றது இரு தரப்பினரும் பயனடைந்தனர்.

இன்னொரு பக்கம், இந்த சேவை மூலம் பயன்பெற்ற நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி, மனித வள குழுக்களில் (HR FORUM) பகிர துவங்கினர்.

அதன் பயனாக தமிழநாடு & புதுச்சேரியில் உள்ள பல HR FORUM களில் இருந்து அழைப்பும் வந்தது சேவையும் பலருக்கு பயனடைய வாய்ப்பாக அமைந்தது இதன் அடிப்படையில் தினம்தோறும் அதிக எண்ணிக்கையிலான வேலை தேடும் நபர்களுக்கும் பயனடைந்தனர்.

தொடர்ந்து மார்ச் 20 – 2022 வரையில் நிறுவனங்களில் இருந்து தினம்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1,00,133 படித்த தகுதியான நபர்கள் வேலை பெற்று பயனடைந்து உள்ளனர்.

தற்போதைய தகவல்களின் அடைப்படையில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்தி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்கள் மற்றும் YOUTUBE [VVVSI CAREER GUIDELINES ]
சேனல் வாயிலாக பின்பற்றி வருகின்றனர் .

மேலும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கமானது இதனுடன் சேர்த்து, தினமும் அரசு வேலை வாய்ப்பு தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும், அரசு வேலை தேடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளிப்பது , அரசின் சுயதொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து சுயதொழில் முனைவோரை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்து 73 சுயதொழில் முனைவோர்களை உருவாக்கியும் உள்ளது மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு & வழிகாட்டுதல் முகாம்களையும் நடத்தியுள்ளது.

இத்துடன் 17 வேலைவாய்ப்பு முகாம்களை தனியாகவும், 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தி உள்ளது. முதலில் பாண்டிச்சேரியில் துவங்கப்பட்ட சத்மில்லாத இந்த யுத்தம் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களை, குறிப்பாக குக்கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

நீங்களோ உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வேலை தேடும் பட்சத்தில் https://www.vvvsi.com இணைய தளத்தில் பதிவு செய்து வாட்சப் லிங்க் ஐ பெற்று வேலை வாய்ப்பு தகவல்களை தினமும் பெறலாம் | வேலை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் [email protected] மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.

இந்த சேவை வாயிலாக வேலைதேடும் நபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் பயனடைய தொடர்ந்து முழு உதவி செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கும், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தன்னார்வலர்கள், மனிதவள வட்டார அமைப்புகள் (HR FORUM) அனைவரும் தங்களின் நன்றியை உரித்தாக்குகின்றனர் “ என்று உணர்ச்சி ததும்ப முடிக்கிறார் வீரராஹவன்.

“ஒரு நிமிஷம்…மிஸ்டர் வீரராஹவன்… உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி…இப்படி ஒரு பத்திரிகை செய்தியை நீங்க குடுக்கிறது விஜய் சேதுபதிக்குத் தெரியுமா?

“ நிச்சயமா இல்லை சார். இந்தத் தகவலை வெளிய சொல்ல முயற்சித்தபோதெல்லாம் ரொம்ப கண்டிப்பான முறையில என்னைத் தடுத்துட்டே வந்துருக்கார். இந்த முறையும் அதையேதான் செய்வார்னு நினைச்சிதான் நானே வெளியிடுறேன். அவர் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.

அவரோட மனசு எவ்வளவு பெருசுன்னு, தான் சம்பாதிக்கிற செல்வம் அத்தனையும் மக்களுக்குத்தான்னு நினைக்கிறதாலதான் அவருக்கு மக்கள் செல்வன்னு பொருத்தமா பேரு வச்சிருக்கோம்னு எல்லாருக்கும் தெரியட்டும்.

1 lakh people have got employment opportunity through Vijay Sethupathi

‘மன்மதலீலை’.. விதை நீங்கள் போட்டது.; கலாய்த்த எஸ்ஜே சூர்யாவுக்கு வெங்கட் பிரபு பதிலடி

‘மன்மதலீலை’.. விதை நீங்கள் போட்டது.; கலாய்த்த எஸ்ஜே சூர்யாவுக்கு வெங்கட் பிரபு பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மன்மத லீலை’.

நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே இணைந்து நடித்துள்ளனர்.

அடல்ஸ் ஜானரில் ‘மன்மத லீலை’ படம் உருவாகியுள்ளது.

இந்த படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது.

இதனைப் பார்த்த இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா… “இது வெங்கட்பிரபுவின் சேட்டைகள்” என கமெண்ட் அடித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு..

“இதற்கெல்லாம் விதை நீங்கள் போட்டது தான் சார் என தேவர் மகன் படத்தில் சிவாஜி கூறுவதுபோல பதில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு சிரித்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் அஜித் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்ஜே. சூர்யா.

அதன் பின்னர் ‘நியூ’ என்ற அடல்ஸ் ஒன்லி படத்தை இயக்கி நடித்தார் எஸ்.ஜே சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu reply to director SJ Suryah

தேர்தல் முடிந்தது.. பசுத்தோல் உதிர்ந்தது.. கோடிகளை வைச்சு சரிக்கட்டுங்க..; மோடியை சாடிய கமல்

தேர்தல் முடிந்தது.. பசுத்தோல் உதிர்ந்தது.. கோடிகளை வைச்சு சரிக்கட்டுங்க..; மோடியை சாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஓரிரு தினங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை அதிகளவில் உயர்ந்துள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது..

‛மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள்.

அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…’

என கமல்ஹாசன் கடுமையாக மத்திய அரசு பாஐக.வை விமர்சித்துள்ளார்.

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தான் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan criticises increase in prices of fuel and LPG

ரூ 21 கோடி தேவை.. ரஜினி-கமலை சந்திப்போம்..; நாசர் விஷால் கார்த்தி அறிவிப்பு

ரூ 21 கோடி தேவை.. ரஜினி-கமலை சந்திப்போம்..; நாசர் விஷால் கார்த்தி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா ?

அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி…

“தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும்.

நடிகர் சங்கத்திற்கான கட்டடம் பணிகள் மூன்று மாதத்தில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அனைவருக்கும் 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.

அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதில் பேசிய நடிகர் நாசர்…

“இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விஷால்…

நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர்.

தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எங்கும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான்,
நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம்.

அது நல்லபடியாக நடக்கும் என விஷால் தெரிவித்தார். அத்துடன் நடிகர் சங்க கட்டடத்தை அப்போதைய விட தற்போதைய நிலவரப்படி இருபத்தி ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

30% விலை உயர்ந்துள்ளது. அதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம்.

நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். இந்த நேரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் நடிகர் சங்கத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் விஷால் கூறினார்.

நடிகர் கார்த்தி..

நாங்கள் செய்த வேலைக்கு தேர்தலை நடக்காது போட்டியின்றி தேர்வு ஆகும் என நினைத்து இருந்தோம். ஆனால் தேர்தல் நடைபெற்று தற்போது வெற்றி அடைந்து உள்ளோம்.

தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது என்பது சவாலான பணியாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டும் அதற்கு திட்டமிடுதல் வேண்டும் எனவே கட்டட வேலைகளை மூன்று மாதத்திற்குள் தொடங்க உள்ளோம் என கூறினார்.

அத்துடன் நடிகர் சங்கத்தில் தற்போது கடன்கள் எதுவும் கிடையாது. நிதிகள் அனைத்தும் கட்டடத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இறுதியாக பேசிய பூச்சி முருகன் நடிகர் சங்கத்திற்கு பையனூரில் அரசு ஏழு ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது அதில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தனி மண்டபம் கட்டி அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Rock fort தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்கள் நடிகர் சங்கத்திற்கான கட்டிட பணிகளுக்காக ₹5 லட்சம் காசோலை நன்கொடை அளித்தார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக ₹10 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது. அத்துடன்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவர் முன்பாகவும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

புதிய நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், மற்றும் பலர் சால்வே அணிவித்து மரியாதை செய்தனர்.

Nadigar Sangam team wants to meet with Rajinikanth and Kamal Haasan

More Articles
Follows