கண் மூடி திறப்பதற்குள் ஒரு சினிமா..; அமெரிக்கர் சாதனையை முறியடித்த தமிழர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

‘Be Pretty’ என்ற உலகின் மிகச் சின்ன படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் டைரக்ட் செய்துள்ளார்.

குறும்படம் தெரியும்.. அது என்னப்பா.? சின்ன படம் எனக் கேட்கிறீர்களா.? நீங்கள் கண் மூடி திறப்பதற்குள் அந்த படம் 5 நொடிகளில் முடிந்துவிடுமாம்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நொடிகள் கொண்ட ‘சோல்சர் பாய்’ என்ற சிறிய படத்தை அமெரிக்கர் ஒருவர் இயக்கியிருந்தார்.

அந்த படம் உலக சாதனை செய்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை தமிழர் ஒருவர் முறியடித்துள்ளார்.

இவர் கோலிவுட்டில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவர் இயக்கிய, ‛பி பிரிட்டி’ (Be Pretty) என்ற இந்த சிறிய திரைப்படம் கொரோனா காலத்தில் முககவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு் பாராட்டியுள்ளார்.

இந்த உலக சாதனை படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட வேண்டும் என அன்பு ராஜசேகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Be pretty first look released by education minister Anbil Mahesh

Overall Rating : Not available

Related News

Latest Post