‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை.? ரிலீசுக்கு பின் வசூல் விவரங்களை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை அமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை காட்டிய விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி.

அதில்… “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு எதுவும் தெரியாது. அந்த படத்தை பார்த்தது இல்லை என தெரிவித்தார்.

மேலும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் – 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் பட திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில்…

“பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி. அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Ban on the movie ‘Pichaikaran 2’? Court order to submit collection details after release

கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்.; வைரலாகும வீடியோ.. ரசிகர்கள் கமெண்ட்

கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்.; வைரலாகும வீடியோ.. ரசிகர்கள் கமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு அவரின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியானது.

மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று பெயரிட்டுள்ளனர்.

லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அஜித் நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அப்போது சில ரசிகர்கள் அவரை சந்தித்து புகைப்படம் & வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த சமயத்தில் அஜித் கண்கலங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரசிகரின் பாசத்தை கண்டு அஜித் கண்கலங்கியதாக இந்த வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு உருக்கமாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Actor Ajith, who burst into tears; Viral video.. Fans comment

Men cried when… தல 😭😭 https://t.co/DkUPjGrS3A

JUST IN சிவகார்த்திகேயன் – ஜிவி பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கிய கமல்

JUST IN சிவகார்த்திகேயன் – ஜிவி பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவர் 21 வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.

இது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 51வது படமாகும். இந்த படத்தை முருகதாஸின் உதவியாளரும் ரங்கூன் பட இயக்குனருமான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பது இதுவே முதன் முறையாகும் என்ற தகவல்களை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று மே 5ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதற்கான விழா பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் காட்சியை தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#SK21 The Journey begins

#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #RKFIProductionNo_51

@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI

https://t.co/TLTeBaLoeJ

#SK21

#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51

@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh

SK 21 movie kick started today

என் 25 வருட சினிமாவில் பெரும் தோல்வி அது.; ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ ஓபன் டாக்

என் 25 வருட சினிமாவில் பெரும் தோல்வி அது.; ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜூ ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தா – தேவ் மோகன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’.

இதில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்க மணிசர்மா இசையமைத்து இருந்தார்.

குணசேகர் இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவும் தயாரித்திருந்தார்.

கிட்டத்தட்ட ரூ.58 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீசாகி பெரும் தோல்வி அடைந்தது.

ரூ.12 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த சமீபத்திய பேட்டியில்…

“நான் ‘சாகுந்தலம்’ படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ரசிகர்களுக்கு படம் பிடித்தால் சூப்பர் ஹிட்.. படம் பிடிக்காவிட்டால் பெரும் தோல்வி என நினைத்தேன். எங்கே தவறு என தெரியல.

எனக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. நான் தயாரித்த அந்த வருட படங்கள் லாபத்தை கொடுத்தன.

என் 50 படங்களில் சில படங்கள் எனக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது என் 25 ஆண்டு சினிமா பயணத்தில் ‘சாகுந்தலம்’ பெரும் தோல்வி.” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்த ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.

It was a big failure in my 25 years of cinema.; ‘Varisu’ Producer Dilraju Open Talk

மனோபாலாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விஜய்.; தளபதி-க்கு தங்க மனசு

மனோபாலாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விஜய்.; தளபதி-க்கு தங்க மனசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் மே 3ம் தேதி நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார்.

இவரது மறைவை ஒட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர்களில் விஜய், பார்த்திபன், சரத்குமார், விஜய்சேதுபதி, மன்சூர் அலிகான், இயக்குனர்கள் பேரரசு, சுந்தர் சி, ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மே 4ம் தேதி மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் கலந்துக் கொண்டனர்.

தற்போது விஜய் – த்ரிஷா நடித்து வரும் ‘லியோ’ படத்தில் மனோபாலா நடித்து வருகிறார்.

மனோபாலா தன்னுடைய காட்சிகள் வெட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தாராம். அதன்படி மனோபாலா காட்சிகளை வெட்ட வேண்டாம் என விஜய் லோகேஷ்க்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி நட்சத்திரங்களில் ரஜினி கமல் அஜித் ஆகியோர் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்த வராத நிலையில் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay fulfills Manobala’s last wish

‘தி கேரளா ஸ்டோரி’ ரிலீசாகும் தமிழக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

‘தி கேரளா ஸ்டோரி’ ரிலீசாகும் தமிழக தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் & ட்ரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ட்ரைலரில்…

ஒரு கல்லூரியில் படிக்கும் இந்து பெண்ணும் முஸ்லிம் பெண்ணும் தோழிகளாகின்றனர். இவர்கள் ஒரு நாள் பொது இடத்திற்கு செல்லும் போது இந்து பெண்ணின் மீது சில நபர்கள் கை வைக்கின்றனர்.

இதனையடுத்து அந்த இந்து பெண்ணுக்கு முஸ்லிம் தோழி ஒரு அட்வைஸ் சொல்கிறாள்.. ஹிஜாப் அணிந்து தன் உடலை முழுவதுமாக மூடி வந்தால் யாரும் நம்மேல் கை வைக்க மாட்டார்கள் என்கிறார்.

இவர் சிவன் பெரிய கடவுள் என சொல்ல அவள் அல்லாஹ் பெரிய கடவுள் என சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் இந்து பெண்ணின் மனதை மாற்றி முஸ்லிமாக மாற்றுகிறாள். அவளுக்கு திருமணமும் செய்து வைக்கிறாள்.

பின்னர் கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் காட்சிகள் இருந்தது. இதுவே பல சர்ச்சைகளுக்கு வழியை வகுத்துள்ளது.

இப்படம் இன்று மே 5-ந் தேதி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசை மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் என உளவுத்துறை எச்சரித்து இருப்பதால், படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது என்று தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த படம் 25க்கு மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

Police protection in Tamil Nadu theaters where ‘The Kerala Story’ will be released

More Articles
Follows