பாலுமகேந்திராவின் உதவியாளர் ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

பாலுமகேந்திராவின் உதவியாளர் ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’

Balu Mahendra Asst Arumugam directed Puyalaai Kilambi Varom movie

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்
ஜூலை 28-ல் வெளிவருகிறது.

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி.ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலாய் கிளம்பி வர்றோம்’.
இது மதுரை மண் சார்ந்த கதை.

படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல. அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை.

நாயகனாக தமன், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர், சிங்கம்புலி, திருமுருகன், அழகன் தமிழ்மணி, ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.
இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.

இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும் மதுரை, சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற பல ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.

31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான். இருந்தாலும், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு நாளும் அவர் வந்ததில்லை.

படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன். அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர். ” என்கிறார்.

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி., இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம். எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார், வசனம் கே.நந்தகுமார், கலை இயக்கம் – முத்துவேல், நடனம் -பாலாஜி, தினா, ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.

படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘ புயலாய் கிளம்பி வர்றோம் ‘படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.

Balu Mahendra Asst Arumugam directed Puyalaai Kilambi Varom movie

Puyalaai Kilambi Varom movie stills

 

தொழிலை மாற்றும் நிலையில் சிம்பு; ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி

தொழிலை மாற்றும் நிலையில் சிம்பு; ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி

Actress Kasthuris reply made Simbu fans angryசிம்பு 3 வேடங்களில் நடித்து அண்மையில் வெளியான படம் ‘ஏஏஏ’.

இப்படம் ரசிகர்களின் கோபத்தை அதிகளவில் அள்ளியதால், பலரும் சிம்புவை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையான கஸ்தூரி சிம்பு ரசிகர்களை சீண்டுமளவுக்கு ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

‘தொழில் ரீதியாக சிம்பு மாற்றிக்கொள்ள வேண்டியது என்ன’ என அந்த ரசிகர் கஸ்தூரியிடம் கேட்க, “தொழிலையே மாத்தும்படி ஆவும் போல இருக்கு அவரு நிலைமை” என கஸ்தூரி பதிலளித்துள்ளார்.

Actress Kasthuris reply made Simbu fans angry

நாளை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் அறிவிப்பு

நாளை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் அறிவிப்பு

Mersal Team to make a special announcement on 21st July 2017அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதன் 3வது லுக் என்று வெளியாகும். அதில் விஜய்யின் கெட்டப் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நாளை இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இது 3வது லுக் பற்றிய தகவலா? அல்லது வேறு ஏதேனும் இருக்குமா? என ரசிகர்கள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

Mersal Team to make a special announcement on 21st July 2017

விஐபி2 ரிலீஸில் மாற்றம்; ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

விஐபி2 ரிலீஸில் மாற்றம்; ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்

VIP2 movie release postponed from 28 July 2017சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

ஷான் ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, கஜோல், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், இப்படத்தை தனுஷ் பிறந்தநாளான ஜீலை 28ஆம் தேதியில் வெளியிடவிருந்தனர்.

ஆனால், தற்போது இதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்பட்டாலும் உறுதியான தேதி அறிவிக்கப்படவில்லை.

தனுஷ் பிறந்தநாளில் அவரின் புதிய படத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை அளிக்கும்.

VIP2 movie release postponed from 28 July 2017

ரஜினி-விஜய் மாஸ் அஜித்துக்கு இல்லையா? தெலுங்கு விவேகம் டிசைன் மாற்றம் ஏன்?

ரஜினி-விஜய் மாஸ் அஜித்துக்கு இல்லையா? தெலுங்கு விவேகம் டிசைன் மாற்றம் ஏன்?

Ajith starring Telugu Vivekam first look posterசத்யஜோதி தயாரித்து, சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் டீசரை சற்றுமுன் சரியாக 12.00 மணிக்கு இன்று ஜீலை 20ஆம் தேதி வெளியிட்டனர்.

தெலுங்கிலும் இப்படத்திற்கு விவேகம் என்றே பெயரிட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் விவேகம் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் டிசைன்களில் அஜித் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தார்.

அதற்கு முக்கிய காரணம் அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ்தான் காரணம்.

ஆனால் தெலுங்கு விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித்துடன் காஜல், விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் ஆகியோர் உள்ளனர்.

அப்படியென்றால், தெலுங்கில் அஜித்துக்கு அந்தளவு மாஸ் இல்லையா? என விவரமறிந்தவர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் வெளியான காலா படத்தின் அனைத்து போஸ்டரிலும் எல்லா மொழியில் ரஜினி மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

அதுபோல் மெர்சல் (ADIRINDHI) படத்தின் தெலுங்கு போஸ்டரில் விஜய் மட்டுமே இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith starring Telugu Vivekam first look poster

தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட் தகவல்கள்

தானா சேர்ந்த கூட்டம் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட் தகவல்கள்

Thaana Serndha Kootam first look photo shoot updatesசூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டாலும், இதன் பர்ஸ்ட் லுக்கை சூர்யா பிறந்தநாளில் (ஜீலை 23) வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போட்டோ சூட்டை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா பட்டறையில் நேற்று நள்ளிரவில் நடத்தியுள்ளனர்.

இதில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்துக் கொண்டனர்.

எனவே பர்ஸ்ட் லுக்கில் இருவரும் ஜோடியாக இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Thaana Serndha Kootam first look photo shoot updates

More Articles
Follows