தீபாவளி ட்ரீட்டை இரட்டிப்பாக தரும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக தெறி படத்தை கொடுத்தார் விஜய்.

எனவே தீபாவளிக்கும் விஜய்யிடம் இருந்து பைரவா விருந்தை எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.

ஆனால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இவ்வருட தீபாவளிக்கு பைரவா டீசரை வெளியிட உள்ளார்.

ஆனால் ஒரு நாள் முன்பாக அதாவது நாளை 28ஆம் தேதி தொடங்கும்போது, நள்ளிரவு 12.01 மணிக்கு பைரவா டீசர் ரிலீஸ் ஆகிறது.

கூடவே இந்த டீசரை தீபாவளி முதல் திரையரங்குகளில் வெளியிடவும் பைரவா படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

 

‘இனி படமே கிடையாது…’ பிரபுசாலமனின் முடிவுக்கு என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொக்கி, மைனா, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.

இவர் காட் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ரூபாய். இப்படத்தை அன்பழகன் இயக்கியுள்ளார்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபு சாலமன் பேசும்போது…

ஒரு நல்ல இயக்குனர் அன்பழகன். மிகவும் அமைதியானர்வர்.

அவர் சொன்ன ஒன்லைன் ஸ்டோரி நிச்சயம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என இப்படத்தை எடுத்தேன்.

ஆனால் படத்தை தயாரித்து வெளியிடுவதற்குள் பெரும் பாடுபடுகிறேன்.

படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகவில்லை. காஸ்மோ வில்லேஜ் சிவா பின்னர் பேரம் பேசாமல் வாங்கி கொண்டார் அவருக்கு நன்றி.

ஆனால் இனி படங்களை தயாரிக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.

‘தனி ஒருவன்’ அரவிந்த் சாமி பாணியில் மிரட்டும் ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணமானவர்களுக்கு முதல் தீபாவளி எப்படி தலை தீபாவளியோ, அதுபோல் தீபாவளி அன்று தங்கள் படங்கள் வெளியானால் அதுதான் நடிகர்களுக்கு தலை தீபாவளி.

தற்போது முதன்முறையாக ஷாம், இந்த தலை தீபாவளியை கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளார்.

அவர் கன்னடத்தில் நடித்துள்ள ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ நாளை தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது.

இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது….

“கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். இதை இயக்கியிருப்பவர் மகேஷ் ராவ். ஒளிப்பதிவு ஆண்ட்ரூ. கே. மஞ்சு என்பர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நான் இதுவரை நடித்ததில் மோஸ்ட் பவர்புல் ரோல் இந்த படத்தில் அமைந்துள்ளது.

இதில் நான் கேங்ஸ்டராக வருகிறேன்.. தேவ் எனது கேரக்டர் பெயர்.

எனக்கு ஒரு தனியாக தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும்.

‘தனி ஒருவன்’ அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.

இதுவரை நான் சேர்ந்து நடித்தவர்களில் யஷ் சிறந்த கோ ஆர்ட்டிஸ்ட் என்பேன்.

பொதுவாக நடிப்பவர்கள் தன் பாத்திரம், தோற்றம், ஸ்டைல்,உடைகள், வசனங்கள், நடிப்பு போன்றவை தங்களுக்கு மட்டும் நன்றாக சிறப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; நினைப்பார்கள்.

ஆனால் யஷ் மாறுபட்டவர். அவருக்கு படத்தில் எப்படி முக்கியத்துவம் கொடுத்தாரோ அதே போல எனக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தன் நாயகன் பாத்திரம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் எதிராளியான வில்லன் பாத்திரமும் நன்றாக வர வேண்டும் என விரும்பினார்.

உங்களிடமுள்ள பெஸ்ட்டைக் கொண்டு வாருங்கள் என்று என்னை நன்றாக ஊக்கப்படுத்தினார். நடிப்பதற்கு எனக்கான இடத்தை விரிவாக்கிக் களம் அமைத்துக் கொடுத்தார்.

அது மட்டுமல்ல என் உடைகளை வடிவமைத்ததே அவர் தான். என் சூட் இப்படி இருக்க வேண்டும்., ஜாக்கெட் இப்படி ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொடுத்தார்.

எனக்கு வேறு மொழிகளில் வந்த “கிக்’, ‘ரேஸ் குர்ரம்’ போன்ற படங்கள் எல்லாமே என் , ‘6’ படம் பார்த்து விட்டுத்தான் வந்திருக்கின்றன. இந்தப்படமும் அப்படித்தான் வந்தது.

என்ற ஷாம் தமிழில் ‘காவியன்’ என்கிற படத்தில் நடித்து வருவதாகவும் தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

விடைபெறும் முன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் கூறினார்.

வெங்கட் பிரபு டீம் அடித்த மூன்று செஞ்சுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த ஒரு கேள்வி, “கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா..” தற்போது அந்த கேள்விக்கு தன்னுடைய டீசர் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதுகுறித்து வெங்கட் பிரவு கூறியதாவது….

“எங்கள் சென்னை 28 – II படத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக தெரிவித்தார் இந்த டீம் கேப்டன்.

தீபாவளியுடன் திருவிழா காணும் ‘பைரவா’ ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையதளபதி விஜய் நடித்த எந்த படங்களும் இந்த தீபாவளிக்கு வரவில்லை.

ஆனால் தற்போது தயாராகி வரும் பைரவா படத்தின் சர்ப்ரஸை தீபாவளி அன்றே தரவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திருவிழா என்ற பாடலை வரிகளின் வீடியோவை தீபாவளி தொடங்கும் சமயத்தில் அதாவது வழக்கம்போல இரவு 12.00 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

இது பிரபல தொலைக்காட்சியின் வழியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது இணையங்களில் பைரவாவின் ஒரு சர்ப்ரைஸ் வரவிருப்பதாக வைரலாகி வருகிறது.

ஒருவேளை அது திருவிழா பாடலாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமா சான்ஸ் தேடுபவர்களுக்கு ‘முன்னோடி’யான எஸ்.பி.டி.ஏ.குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.

சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இப்படத்திற்கு இயக்குனர் ஆகியிருக்கிறார் எஸ்.பி.டி.ஏ.குமார்.

சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு வாய்ப்பு தேடுபவர்கள் இவரையே முன்னோடியாக வைத்துக் கொள்ளலாம் போல. அதான் தன் படத்திற்கும் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்.

இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர்.

‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார்.

நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது…

“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்.

இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.

நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார்.

போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.

தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்றார்.

இந்த முன்னோடி டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows