தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டாப் ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
எனவே, இப்படங்களின் டிவி உரிமை, வெளியீட்டு உரிமை, இசை உரிமை ஆகியவற்றிற்கு பலத்த போட்டி நிலவும்.
தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னணி டிவி நிறுவனம் தனுஷின் ’கொடி’ படத்தின் சேனல் ரைட்ஸ் மற்றும் ஆடியோ ரைட்ஸை பெற நினைத்தது.
ஆனால் ஆடியோ ரைட்ஸ் முன்பே விற்கப்பட சேனல் ரைட்ஸை மட்டுமே பெற்றது.
தற்போது விஜய்யின் ’பைரவா’ படத்தின் இரண்டு உரிமைகளையும் பெற அந்நிறுவனம் முயற்சித்து வருகிறதாம்.
பெரும்பாலும் அந்த நிறுவனத்திற்கு இது சாதகமாகவே முடியும் என சொல்லப்படுகிறது.
இதுநாள் வரை இசை உரிமைக்கு போட்டி போடும் நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.