பைரவா பைட்; அஞ்சு வருஷத்துக்கு பிறகும் அதே ஸ்டைல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் இருவேடம் ஏற்று விஜய் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

இதில் முக்கியமான சமூக பிரச்சனைகளை பற்றி அலசி இருக்கிறார்களாம்.

இதற்கு முன்பு வெளியான வேலாயுதம், கத்தி ஆகிய படங்களில் இதே பாணியை விஜய் பின்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பைரவா படத்தின் ஒரு சண்டை காட்சியில், சட்டையில்லாமல் வில்லன்களுடன் மோதுகிறாராம்.

கடந்த 2011 ஆண்டில் வெளியான வேலாயுதம் படத்தின் க்ளைமேக்ஸில் இப்படியொரு சண்டைக்காட்சி இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சரத்குமார்-ராதாரவி-சந்திரசேகர் நீக்கம்; நடிகர் சங்கம் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் பதவி வகித்து வருகிறார்.

இவர் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செயற்குழு கூட்டப்பட்டு, சில நடவடிக்கைகள் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளர்.

இது அவர்களை பழிவாங்கும் எண்ணம் இல்லையென்றும், சங்க சொத்து வாங்கல் விற்றலில் நடந்துள்ள முறைகேடுகளுக்கான நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற முடிவுக்கு பிறகு தொடர் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு தர்மசங்கடம்; காவிரி பிரச்சினை பற்றி பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிஷோர், லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடிகார மனிதர்கள்.

வைகறை பாலன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது…

“காவிரி பிரச்சனை பற்றி பேசினாலும் பிரச்சினை. பேசாமல் இருந்தாலும் பிரச்சினை. கன்னட நடிகர்கள் ஏதோதோ பேசுகிறார்கள்.

அதை கேட்கும் நமக்கே இப்படி இருக்கிறது என்றாலும் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டிற்கு வந்து, சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படியான தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கும்.

இந்த காவிரி நீர் பிரச்சனையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி.” என்றார்.

விஜய்யின் அடுத்த படம் உறுதியானது; அட்லியின் சம்பளம் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைரவா படத்தை தொடர்ந்து, விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் யார்? இயக்குனர் யார்? என கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலம் வருகின்றன.

விஜய்யின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதையும், அதை அட்லி இயக்க வாய்ப்புள்ளதாகவும் முன்பே தெரிவித்தித்து இருந்தோம்.

அது பேச்சுவார்த்தைகள் மூலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் அட்லிக்கு சம்பளமாக இரண்டு இலக்க எண் கொண்ட பெரும் தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ரூ. 10-12 கோடி வரை சம்பளம் இருக்க வாய்ப்புள்ளதாம்.

‘காவிரியில் விளம்பரம் தேடும் ஆள் நானில்லை’ – சிம்பு சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு தண்ணீர் தர கொடுக்க கூடாது என கர்நாடக மாநில மக்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையில் தன்னுடைய படங்களை கர்நாடகாவில் இனி வெளியிட போவதில்லை என சிம்பு கூறியதாக தகவல்கள் வந்தன.

இதுகுறித்து சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அன்பு நண்பர்களே,

“நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன்.

காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.

இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை.

இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே.

அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.

இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன்.

இந்த விவாகரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.”

என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

சூர்யாவை முந்தி, ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி விக்ரமின் இருமுகன் ரிலீஸ் ஆனது.

இந்த நான்கு நாட்களில் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 51 கோடியை வசூலித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.30 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதாவது இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை ஓப்பனிங்கில் இப்படத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

மற்ற இடங்களை பிடித்துள்ள படங்கள்…

  • கபாலி (3 நாட்களில்) ரூ. 3.75 கோடி
  • தெறி (4 நாட்களில்) ரூ. 3 கோடி
  • இருமுகன் (4 நாட்களில்) ரூ. 2.30 கோடி
  • 24 படம் (3 நாட்களில்) ரூ. 1.6 கோடி

இதில் தெறி மட்டுமே தமிழ் புத்தாண்டு பண்டிகை தினத்தில் வெளியானது.

தெறி மற்றும் இருமுகன் படங்கள் வியாழக்கிழமையே வெளியானது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows