தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லலித் குமார் தயாரித்துள்ளார்.
இந்த படம் பல சர்ச்சைகளை தாண்டி தடைகளை தாண்டி இன்று தமிழக முழுவதும் 1100 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட 4000 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் (முக்கியமான சில) சினிமா செய்தியாளர்களை மட்டும் சந்தித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் பேசும்போது…
“விஜய் படங்கள் என்றாலே எப்பொழுதும் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. நான் இயக்கிய மாஸ்டர் படத்தின் போதும் சில பிரச்சினைகள் வந்தன.
‘லியோ’ பட ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை வந்தது பெரும் சர்ச்சையானது. அதன் பின்னர் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. அந்த வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல. அந்த கேரக்டர் தான் அந்த வார்த்தையை பேசுகிறது” என புது விளக்கம் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Bad words controversy in Leo Movie Lokesh new explanation