பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்தார் தெய்வத் திருமகள்..?

baby sarah‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளவர் பேபி சாரா.
விக்ரமுடன் இவர் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படம் பலரின் பாராட்டையும் பெற்றது.
மும்பையைச் சேர்ந்தவர் சாரா என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மணிரத்னத்தின் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.,
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏஆர் ரஹ்மான் இசையமைக்க மிகப்பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்பட முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post