கடவுளே ஆசிர்வதித்துவிட்டார்; ரஜினி பாராட்டுக்கு ராஜமௌலி ரியாக்சன்

கடவுளே ஆசிர்வதித்துவிட்டார்; ரஜினி பாராட்டுக்கு ராஜமௌலி ரியாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth SS Rajamouliஒரு சில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகி, ரசிகர்களை திருப்தியடையச் செய்யும்.

அப்படியான அரிதான ஒரு படம்தான் அண்மையில் வெளியான ராஜமௌலி இயக்கிய பாகுபலி2.

இந்திய சினிமாவில் பல சாதனைகளை படைத்து வரும் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியிருந்தார்.

ரஜினியின் பாராட்டை பெற்ற இயக்குனர் ராஜமௌலி தன் ட்விட்டர் பக்கத்தில்…

தலைவா…. கடவுளே ஆசிர்வதித்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்.
இதைவிட வேறு என்ன வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதில் படத்தில் பணியாற்றிய ராணா உள்ளிட்ட கலைஞர்கள் ரஜினிக்கு தங்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

rajamouli ss‏Verified account @ssrajamouli

rajamouli ss Retweeted Rajinikanth
THALAIVAAAA… Feeling like god himself blessed us… our team is on cloud9… Anything couldn’t be bigger…

Baahubali 2 Director SS Rajamoulis reaction to Rajinis Wish

‘பாகுபலி’யை பார்த்த ரஜினி, ராஜமௌலியை எப்படி பாராட்டினார்.?

‘பாகுபலி’யை பார்த்த ரஜினி, ராஜமௌலியை எப்படி பாராட்டினார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After watching Baahubali2 Rajini praises Rajamouli as Gods Own childஉலக சினிமா தரத்திற்கு ஈடாக உருவாக்கப்பட்ட பாகுபலி 2 படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.

ராஜமௌலி இயக்கிய இப்படத்தின் முதல் நாள் வசூலே ரூ. 200 கோடியை தாண்டியதை பார்த்தோம்.

மேலும் திரையரங்குகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் பாகுபலி2 படத்தை பார்க்க விரும்பிய ரஜினிகாந்த், தன் வீட்டில் உள்ள மினி திரையரங்கில் இப்படத்தை பார்த்துள்ளார்.

இதனை பார்த்த ரஜினிகாந்த், இந்திய சினிமாவிற்கு பாகுபலி 2 பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும் கடவுள் குழந்தை ராஜமௌலி என இயக்குநரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Rajinikanth‏Verified account @superstarrajini
Baahubali 2 … indian cinema’s pride. My salutes to God’s own child @ssrajamouli and his team!!! #masterpiece

After watching Baahubali2 Rajini praises Rajamouli as Gods Own child

சூர்யாவின் லுக்கை மாற்றும் இயக்குனர் செல்வராகவன்

சூர்யாவின் லுக்கை மாற்றும் இயக்குனர் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya selvaraghavanசிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தின் சூர்யாவுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் ராகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தன் தோற்றத்திற்காக சூர்யா தன் கெட்டப்பை மாற்றவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மாயாவி, பேரழகன், 24 உள்ளிட்ட படங்களுக்காக தன் தோற்றத்தை மாற்றியவர் சூர்யா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya going to change his get up for Selvaraghavan project

மதுரைக்கு படையெடுக்கும் விஜய்-அட்லி படக்குழு

மதுரைக்கு படையெடுக்கும் விஜய்-அட்லி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay 61 movie next schedule will be happen in Maduraiஅட்லி இயக்கும் படத்தில் விஜய் உடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் சூட்டிங் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டப்படப்பிடிப்புக்காக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதுவரை 50% சதவிகித சூட்டிங் நிறைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் சூட்டிங் முடித்துவிட்டு, அடுத்த கட்ட சூட்டிங்கை மதுரையில் நடத்தவிருக்கிறார்களாம்.

Vijay 61 movie next schedule will be happen in Madurai

சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த மகேஷ்பாபு

சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velaikaran and Spyder movie release updatesமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1ஆம் தேதியும் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியும் வெளியிடவிருந்தனர்.

ஆனால் தற்போது பர்ஸ்ட் லுக்கை ஜூன் 5ஆம் தேதியும், படத்தை செப்டம்பர் 29ஆம் தேதியும் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்டைர் படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Velaikaran and Spyder movie release updates

7 நாட்கள் பட பாடல்களை வெளியிட்டார் தனுஷ்

7 நாட்கள் பட பாடல்களை வெளியிட்டார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush launched 7 Naatkal movie songsமில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள்.

இயக்குனர் P. வாசுவின் மகன் சக்தி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்று அங்கனா ராய் நடிக்கின்றனர்.

உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபு கணேஷன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராஜீவ் கோவிந்தபிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை தனுஷ் அவர்கள் வெளியிட்டார்.

இப்படத்தின் ஒரு பாடலான, புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு மதன் கார்க்கி வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான இசையை நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தை வருகின்ற மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Dhanush launched 7 Naatkal movie songs

Dhanush launched 7 Naatkal songs

More Articles
Follows