தனுஷின் ஹாலிவுட் படம் சிறந்த காமெடி படமாக தேர்வு

தனுஷின் ஹாலிவுட் படம் சிறந்த காமெடி படமாக தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Award for Dhanushs The Extraordinary Journey of the Fakirகோலிவுட்டில் கலக்கிய தனுஷ் பாலிவுட் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

இதனிடையில், தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆப் தி பாகிர் என்ற பிரஞ்சு நகைச்சுவைப் படம் ஒன்றிலும் நடித்திருந்தார்.

அதில் மேஜிக் மேன் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு பார்சிலோனாவில் சண்ட் ஜோர்டி என்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

அந்த விழாவில், தனுஷ் நடித்த, தி எக்ஸ்ட்ராடினரி ஜேர்னி ஆப் தி பாகிர் படமும் திரையிடப்பட்டது.

அந்தப் படத்தினை சிறந்த நகைச்சுவை படமாக தேர்வு செய்துள்ளனர்.

Award for Dhanushs The Extraordinary Journey of the Fakir

Breaking இமான் இசையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் அனு இமானுவேல்

Breaking இமான் இசையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் அனு இமானுவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anu Emmanuel and Imman team up with Sivakarthikeyan with SK16சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

இதனையடுத்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நாயகியாக அனு இமானுவேலும் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Anu Emmanuel and Imman team up with Sivakarthikeyan with SK16

இந்த வாரம் மே 10ஆம் தேதியில் 8 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் மே 10ஆம் தேதியில் 8 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly 9 movies were releasing on 10th May 2019எல்லா ஆண்டிலும் ஏப்ரல் மாதம் சித்திரை திருநாளில் நிறைய படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வருடம் அவெஞ்சர்ஸ் படம் உலகமெங்கும் வெளியானாதால் நிறைய படங்களின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் வருகிற மே 9 மற்றும் 10ம் தேதிகளில் 9 படங்கள் வரை வெளியாகவுள்ளன.

மே 9ம் தேதி அதர்வா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள ‘100’ படம் வெளியாகிறது.

மே 10ம் தேதி விஷால், ராஷி கண்ணா நடிக்கும் ‘அயோக்யா’, ஜீவா, நிக்கி கல்ரானி நடித்த ‘கீ’ ஆகிய படங்களும் மற்றும் ‘பேரழகி ஐஎஸ்ஓ, காதல் முன்னேற்றக் கழகம், சீனி ஓவியாவ விட்டா யாரு, உண்மையின் வெளிச்சம், வேதமானவன்’ ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீயா2 படம் மே 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Nearly 8 movies were releasing on 10th May 2019

ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கடந்த ஏப்ரல் 20ம் தேதி, ஈஸ்டர் வார இறுதியில், உயர் ஆளுமை கொண்ட திருமதி. மேகி அமிர்தராஜ், சென்னையில் தனது இல்லத்தில் காலமானார்.

இவர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான, புகழ்வாய்ந்த இந்திய வம்சாவளி தயாரிப்பாளரும், டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் மற்றும் அவரது சகோதரர்களான இந்திய விம்பிள்டன் நட்சத்திரங்கள், விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜின் தாயார் ஆவார்.

திருமதி அமிர்தராஜ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், கனவு காண்பவராகவும், ஒழுக்கமானவராகவும், நல்ல மனைவியாகவும், சிறந்த தாயாகவும் திகழ்ந்தார்.

ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு சுதந்திரமான பெண்மணி என்ற போதிலும், திருமதி அமிர்தராஜ் தனது குடும்பத்திற்கே எப்போதும் முன்னிரிமை அளித்தவர். தனது இரு குழந்தைகளுக்கும் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து இரண்டு டென்னிஸ் மட்டைகளை வாங்கியவர். 1950/60 களில் எப்படி ஒரு பெண் இத்தனை பெரிய கனவுகளுடன் இருந்திருப்பார்? ஸ்டேர்லிங் சாலையில் காத்தாடிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, மூன்று டென்னிஸ் நட்சத்திரங்களாக, இரண்டு ஐக்கிய நாட்டு சபை தூதுவர்களாக (தற்போது அசோக் அமிர்தராஜ், அதற்கு முன்னர் விஜய் அமிர்தராஜ்), ஒரு ஹாலிவுட் திரையுலகப் பெருமகனாக உருவாக்கியிருக்கிறார். இவையனைத்தும் மேகியின் படைப்புகள், சிறுவர்கள் மூவரும் அதற்கு துணையாக இருந்தனர்.

திருமதி அமிர்தராஜ் தனது மகன்களிடம் குடும்பத்தின் மதிப்பு, முக்கியத்துவம், அதன் வேர்கள் குறித்து உயர்ந்த எண்ணங்களை விதைத்திருந்தார். அதன் காரணமாக மூவரும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பெற்றோருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இத்தகைய ஆழமான குடும்ப பிணைப்பு தற்போது அவர்களது பேரக் குழந்தைகளுக்கும் விதைக்கபடுகிறது. மேகி மற்றும் ராபர்ட் அமிர்தராஜின் மரபுகள், குழந்தைகளின் மூலம் பேரக் குழந்தைகளையும் சென்றடைகிறது.

‘வேள்பாரி’ கதையில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்..?

‘வேள்பாரி’ கதையில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush interested in Historical Epic Velpaari Novelவெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார் தனுஷ்.

இதன் பின்னர் ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படங்களை முடித்துவிட்டு சரித்திர படமொன்றையும் இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்த வேள்பாரி என்ற கதையில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

வெங்கடேசன் என்பவர் இந்த தொடரை எழுதி வருகிறார்.

இயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை தான் இந்த ‘வேள்பாரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush interested in Historical Epic Velpaari Novel

“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன்.. இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.. ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.

அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்.. அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்..

பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை.. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம்.. இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.

More Articles
Follows