அவெஞ்சர்ஸ் பார்த்து கதறி அழுத ரசிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

அவெஞ்சர்ஸ் பார்த்து கதறி அழுத ரசிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avengers endgame fan hospitalised as she cant control cryingமிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது.

ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இணைந்து இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டவுனி, அயர்ன் மேனாகவும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராகவும், மார்க் ருஃபெல்லோ ஹல்காகவும், கிறிஸ் இவான்ஸ் கேப்டன் அமெரிக்காவாகவும், ஸ்கேர்லெட் ஜொஹான்சன் பிளாக் விடோவாகவும், ஜோஸ் பிரோலின் தேனோஸாகவும், பிரே லார்சன் கேப்டம் மார்வெலாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பல சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களும் இப்படத்தில் உள்ளன. உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

சீனாவில் மட்டும் 330 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம்.

இதில் ஐயர்ன் மேன் இறப்பதாக அப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.

இதனால் சியோலி என்ற 21 வயது அயர்ன்மேன் ரசிகை ஒருவர் மிகவும் அழுதபடியே இருந்தாராம்.

அழுது அழுது அவருக்குள்ள என்ன ஆனதோ..? மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு சென்றுள்ளார்.

அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Avengers endgame fan hospitalised as she cant control crying

10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3

10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)காஞ்சனா 3 ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது..இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது…10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறது…ஒரு மாநில மொழிப்படம் இந்தளவு வசூல் வேட்டையாடி இருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே..

பொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி! சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பாகிறது!

பொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி! சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பாகிறது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து ‘தினம்
ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த
நிகழ்ச்சியில் பிரபல இலக்கியப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தினமும் ஒரு
திருக்குறளும், அதற்குரிய பொருளையும் அவருக்கே உரிய எளிய நடையில் இனிமை
ததும்பும் வகையில் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் குட்டிக் கதையின் சாயல் இருக்கும். நகைச்சுவையின் மென்சுவை
மிதக்கும். குழந்தைகளுக்கான மொழியில் அன்புரை இருக்கும்.
ஆறு நிமிட அளவில் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான முயற்சியாகும்.
ஆம், கு.ஞானசம்பந்தன் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களான பொம்மி மற்றும் அதன்
நண்பர்களுடன் உரையாடுவது போல இந்நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.
சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்
இந்த ‘தினம் ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியானது வரும்
29.4.2019 திங்கட்கிழமை முதல் சுட்டி டி.வியில் அரங்கேற உள்ளது.
இதுபோன்ற கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து ஒரு தமிழறிஞர் திருக்குறளை,
குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கும் இது போன்ற நிகழ்ச்சி இதுவரையில்
அரங்கேறியதே இல்லை. இதுதான் முதல் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி பற்றி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசும்போது,

“இது ஒரு புதுமையான அனுபவம் . இது திருக்குறளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. இன்றைய குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் அப்பா அம்மாவை விட கார்ட்டூன் கதாபாத்திரங்களைத்தான் அதிகம் பிடிக்கிறது அதன்வழியாக அவர்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இது இதில் குறள் , அதன் பொருள், சின்னதாக ஒரு கதை இவ்வளவும் 5 நிமிடங்களில் இருக்கும்

திருக்குறளை யாருக்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி இரண்டடி உள்ள திருக்குறளை இரண்டடி உயரம் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் சரியான முயற்சி.

குழந்தைகளுக்குப் பிடித்த அனிமேஷன் உலகத்தில் பிரவேசித்து திருக்குறளைக் கொண்டு செல்கிறோம் .இதற்கு எளிமையாக ஒரு கதையை அமைப்பது, திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் சிரமமான வேலைதான் .ஏனென்றால் குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் கடினமானது . செயலில் இறங்கிப் பார்த்தால்தான் எவ்வளவு கடினமானது என்பது புரியும். ’இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று சொல்லும்போது குழந்தை கேட்கும் ’இன்னான்னா என்னா ?’ என்று.அப்போது அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் .ஒரு முறை செல்வகணபதி அவர்களின் நூலுக்கு முன்னுரை எழுதும் போது குழந்தைகளுக்கு எழுதுவது என்பது ஒரு மாயக் கண்ணாடி போன்றது குழந்தைகளுடன் பேசும்போது பெரியவர்கள் நாம் குழந்தைகள் ஆகிவிடுவோம் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள் இந்த மாயம் நிகழ்வதை உணர முடியும். அப்படி ஓர் அனுபவத்தை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது .
இப்படிக் குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் அவர்கள் வழியில் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சி உண்மையிலேயே புதுமையான சுவையான ரசிக்கத்தக்க நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

தள்ளி போகும் பிரம்மாஸ்திரா ரிலீஸ்

தள்ளி போகும் பிரம்மாஸ்திரா ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அனைத்து சினிமா துறை ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் மற்றும் ஊடகத் துறையினருக்கும்:

இந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான “பிரம்மாஸ்திராவின்” சமீபத்திய முக்கியமான பகிர்வு இது:

இப்படத்தின் கனவானது என்னுள் 2011 இல் உருவானது; 2013இல் Yeh Jawaani Hai Deewani படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை-திரைக்கதையை
உருவாக்கத் தொடங்கினேன்.

கதை, திரைக்கதையாக்கம், கதாப் பாத்திரப்படைப்பு, இசை மட்டுமல்லாமல் vfx துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான-பிரமாண்டமான இமாலய முயற்சி இது.

இப்படத்தின் லோகோவை(Logo) 2019 கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம்.

ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

இதை மனதில் கொண்டு ‘பிரம்மாஸ்திரா’ திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் லிருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

இந்த தாமத காலமானது இக்கனவு திரைப்படத்தை செவ்வன முடிப்பதற்கும், திரைப்படத்தை நேசிக்கும் ஆர்வலர்களையும் ரசிகர்களையும் கொண்ட நமது நாடு பெருமைப்பட்டுக் கொண்டாடும் அளவிற்கு திரைக்காவியமாக உருவாவதற்கு ஏதுவானதாக இருக்கும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம் .

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது ‘மதயானைக் கூட்டம்’ புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் “இராவண கோட்டம்” என்ற படத்தை இயக்குகிறார்.

மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார்.

தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது, “வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு, இந்திய மண்ணின், குறிப்பாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்ந்த மதிப்புகளை வலியுறுத்துகின்ற திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்த போது, அத்தகைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆவலோடு இருந்தேன். அது என் சொந்த ஆர்வத்தின் காரணமாக மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டின் மண் சார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு முயற்சி. இந்த சூழ்நிலையில் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அவர்களை நான் சந்தித்தேன். அவர் ஒரு கதையை சொன்னார். உண்மையில் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையாக அது இருந்தது” என்றார்.

சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பதை பற்றி அவர் கூறும்போது, “நாயகனை தேர்ந்தெடுக்கும்போது தனிப்பட்ட இமேஜ் உடைய ஒரு நட்சத்திர நடிகரை நடிக்க வைக்க விரும்பவில்லை, மாறாக மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இது குறித்து கூறும்போது, “மதயானைக் கூட்டம் வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். நகரத்து பையனாக இருந்து, கிராமத்து பையனாக தோற்றம் உட்பட அனைத்திலும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். இராவண கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். அப்பாவிதனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு குணாதிசயம் தான் நாயகியினுடையது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்றார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

சாரே கொல மாஸ்; கொலைகாரன் ட்ரைலர் சாதனை.; ஏப்.29ல் ரிலீஸ் அப்டேட்

சாரே கொல மாஸ்; கொலைகாரன் ட்ரைலர் சாதனை.; ஏப்.29ல் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kolaigaran trailer records in Youtube Release date announcement on 29th April 2019விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் என இரண்டு ஹீரோக்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’.

ஆண்ட்ரூ லூயிஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

தியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, முகேஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை போப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பெற்றுள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது. இதுவரை சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) பேர் இதனை பார்த்துள்ளனர்.

இதனால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ரீலீஸ் தேதி குறித்த அறிவிப்பை நாளை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Kolaigaran trailer records in Youtube Release date announcement on 29th April 2019

More Articles
Follows