சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyanகனா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை ஆச்சரியப்படுகிறார்.

சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை.

சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர்.

என் இயக்குனர் ‘கனா’வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை.

குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை.

உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார்.

ஆனால் இறுதியாக அவர் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் என நான் நம்புகிறேன்” என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

‘கனா’வின் மையக்கரு பற்றி அவர் கூறும்போது, ” கனாவை பெண்களை மையப்படுத்திய ஒரு படம் என்று மட்டுமே சொல்ல முடியாது, அது அனைத்துக்குமானது.

‘கனவு’ மற்றும் ஆசைகள் அனைவருக்க பொதுவானது அல்லவா, அதுபோலவே இதுவும் உணர்வுகள் அடங்கிய குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்திருக்கும் இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் தர்ஷன், இளவரசு, முனிஷ்காந்த் என்கிற ராமதாஸ், ரமா, சவரி முத்து, அந்தோணி பாக்யராஜ், பல புதிய நடிகர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கிறார்கள்.

திபு நினன் தாமஸ் (இசை), தினேஷ் கிருஷ்ணன் பி (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), லால்குடி என். இளையராஜா (கலை), மோகன் ராஜா, ஜி.கே.பி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), சதீஷ் கிருஷ்ணன் (நடன இயக்குனர்) , வின்சி ராஜ் (கிரியேட்டிவ் டிசைன்ஸ்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்) மற்றும் பல்லவி சிங் (காஸ்ட்யூம்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணி புரிந்திருக்கிறார்கள்.

Australian Cricket players team up with Sivakarthikeyan in Kanaa

*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா

*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali fame Dhanshika next movie titled Yogi daசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கேரக்டரில் ரஜினி மகளாக நடித்து உலகமெங்கும் பிரபலமானவர் தன்ஷிகா.

ஒரு ஆணுக்கு இனையான கம்பீர தோற்றத்துடன் கிராப் தலையுடன் கையில் துப்பாக்கியுடன் ஒரு புரொஃபஷனல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இதே போல் தான் எடுக்கும் கதாபாத்திரங்களுடன் பொருந்தி நடிக்கும் இயல்பு கொண்ட தன்ஷிகா சினிமா உலகில் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடேயே அதிகரித்துள்ளது.

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் “யோகி டா” என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

கவுதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தின் திரைக்கதை கதாநாயகியை மையப்படுத்தி காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு கவுதம் கிருஷ்ணாவுடன், ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக S.K. பூபதியும், படத்தொகுப்பளராக G.சசி்குமாரும், இசையமைப்பாளராக A. R.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதறியும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் ,கௌதம் கிருஷ்ணா ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர் ஆகியோரும் பணிபுரி்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று, டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தன்ஷிகாவின் “யோகி” கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ‘யோகி டா’ திரைப்படம் ரசிகர்களுக்கான ஆக்ஷன் டீரிட்டாக இருக்கும்.

Kabali fame Dhanshika next movie titled Yogi da

ஆஸ்கர் விருதை விட தலைவர் ரஜினியை இயக்கியதே பெருமை : கார்த்திக் சுப்பராஜ்

ஆஸ்கர் விருதை விட தலைவர் ரஜினியை இயக்கியதே பெருமை : கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directing Thalaivar Rajini is bigger than Oscar awards says Karthik Subbarajரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

சின்ன வயதில் இருந்தே எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார் தலைவர்.

எங்க அப்பா பெரிய ரஜினி ரசிகர். அவரை பார்த்து தான் நானும் பெரிய ரசிகனானேன்.

தலைவருடன் பணியாற்றியது ஒரு கனவு போல இருக்கிறது. எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம்.

நான் படம் எடுத்தால், அதை தலைவர் பார்ப்பாரா, பாராட்டுவாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்திய சினிமாவிலேயே மனதார பாராட்டுபவர் ரஜினி சார் தான்.

பாராட்டனும்னு அவசியமே இருக்காது. ஆனாலும் பாராட்டுவார்.

2.0 படத்தில் சொல்வது போது பாசவிட்டிங் ஆரா தலைவர் தான். 2.0 படத்தில் முனிவருக்கு தான் அதிகமான பாசிட்டிங் ஆரா இருக்குனு சொல்லிருப்பாங்க, ஆனால் அதைவிட தலைவருக்கு நிறைய பாசிட்டிவ் ஆரா இருக்குது

பீட்சா படம் ரிலீசான போது ரஜினி சார் வீட்டில் இருந்து போன் வந்த போது நம்பவில்லை. அவர் பேசிய பிறகு தான் நம்பினேன். சூப்பரா பண்ணியதாக சொன்னார். நாம் படம் பண்ணியதற்கான பலன் கிடைத்துவிட்டது என்று நினைத்தேன்.

அவருடன் படம் பண்ணுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஜிகர்தண்டா படம் பண்ணிய போது கருணாகரன் தலைவருடன் லிங்கா படத்தில் நடித்து வந்தார். அவர் மூலமாக நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பிளான் பண்ணோம். பார்த்துவிட்டோம்.

ஜிகர்தண்டாவை பார்த்த போது என் பரட்டை கேரக்டரை பார்த்த மாதிரி இருந்துச்சி சொன்னார். நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்றேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார்.

அன்னிக்கு அவரைப் பார்த்த சந்தோஷத்துல போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன், ஆட்டோகிராஃப் வாங்க மறந்துட்டேன். அதனால், எப்படியாவது அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும்னு மறுநாள் போனேன்.

அன்னிக்கு அவருக்கு பிரேக் என்பதால், என்னை வரச்சொல்லி பேசினார். அவருடன் உட்கார்ந்து பேசியது என் வாழ்க்கையின் மறக்க முடியாது தருணம்.

‘ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க’னு சொன்னார். அவர் என்கிட்ட ஸ்கிரிட்ப் இருக்கானு கேட்டதையே இரண்டு நாட்கள் கழித்துதான் உணர்ந்தேன்.

2014-ம் ஆண்டு அவர் என்கிட்ட கேட்டார். அந்த மிகப்பெரிய கனவு இன்று நனவாகியுள்ளது.

பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார்.

ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி சொன்னார். அது நிறைவேறிவிட்டது.

ஷூட்டிங்கின்போது அவர் எப்படி நடக்கிறார், எப்படி புத்தகம் படிக்கிறார் என்று பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பேன். என்னோட உதவி இயக்குநர் பாலா தான் அடிக்கடி அவர்கிட்டப் பேசிக்கிட்டுருப்பான்.

என்னைவிட அவன் அதிகமா பேசுறானேனு அவனைப் பார்க்கவே பொறாமையா இருக்கும். என்னைத் தவிர வேற யார் பேசுனாலும் எனக்குக் கடுப்பா இருக்கும். என் மனைவி அவர்கூட பேசுனபோது கூட அவங்ககிட்ட சண்டை போட்டேன்.

அவரை வச்சு ஒரு படத்தையே இயக்கி முடிச்சிட்டேன். ஆனாலும், இப்போ அவர் பக்கத்துல உட்காரும்போது கூட பதட்டமா இருக்கு.

நான் கதை சொன்னபோது, ‘நாம பண்ணலாம்’னு சொல்லிட்டார். இடையில், ‘அரசியலுக்கு வரப்போறேன்’னு சொல்லிட்டார் (இதை அவர் சொல்லியதும் அரங்கத்தில் வெகுநேரம் ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல் ஒலித்தது).

அந்த அரசியல் அறிவிப்பு சந்தோஷமா இருந்தாலும், நம்ம படம் கிடையாதானு கொஞ்சம் சுயநலமாகவும் இருந்தது. ஏன்னா, நான் ஆஸ்கர் விருதே வாங்கினாக்கூட என் வாழ்க்கை முழுமையடையாது. தலைவர் படத்தால் மட்டும்தான் முழுமையடையும்.

கலாநிதி மாறன் சாரும் தலைவரோட ரசிகர்தான். ‘தலைவர் படம் மாதிரி இந்த படத்தைப் பண்ணணும்’னு தான் என்கிட்ட சொன்னார்.” என்றார்.

Directing Thalaivar Rajini is bigger than Oscar awards says Karthik Subbaraj

அனிருத்தான் அடுத்த ஏஆர். ரஹ்மான்.; ரஜினியிடம் சொன்ன தனுஷ்

அனிருத்தான் அடுத்த ஏஆர். ரஹ்மான்.; ரஜினியிடம் சொன்ன தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh will be next AR Rahman said by Dhanush to Rajinikanthபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது அனிருத்தின் இசை மற்றும் அவரது வளர்ச்சி குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

பேட்ட பட இசையமைப்பாளர் யார்? என்று கார்த்திக் சுப்பராஜிடம் கேட்டேன். அவர் அனிருத் என்றார்.

ரொம்ப சந்தோஷப்பட்டேன். சின்ன வயசுல இருந்தே அனிருத்தை பார்க்கிறேன். அவரின் பெற்றோர்கள் அவரை நன்றாக வளர்த்துள்ளனர்.

மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து, அதை சரியாக வளர்த்துள்ளனர்.

3 படத்தில் அவர் இசையமைக்கும்போது அனிருத்தின் இசை எப்படி என்று தனுஷிடம் கேட்டேன். அப்போதே அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று அப்போதே தனுஷ் சொன்னார்.” என்று ரஜினி பேசினார்.

Anirudh will be next AR Rahman said by Dhanush to Rajinikanth

சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

சிம்ரனுடன் நடிக்கும்போது கூச்சம்.; த்ரிஷா அப்படியே இருக்கிறார் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajini talks about Simran and Trishaதமிழ் சினிமாவில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களுடன் சிம்ரன் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துவிட்டனர்.

இவர்கள் முன்னணி நடிகையாக உள்ள போதும் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் இருந்தனர்.

தற்போது பேட்ட படத்தில் ப்ளாஷ்பேக்கில் த்ரிஷாவும் நிகழ்கால கதையில் சிம்ரனும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் மற்றும் த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் பற்றி பேசினார் ரஜினி.

அவர் பேசியதாவது…

சிம்ரனுடன் டூயட் பாடும்போது எனக்கு கூச்சமாக இருந்தது. சிறந்த நடிகை அவர்.

பிளாஷ்பேக்கில் சின்ன கேரக்டர்தான். அதில் த்ரிஷா நடிப்பாரா? என்று சந்தேகம் இருந்தது. அவரது ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்களா? என்ற தயக்கம் இருந்தது.

அவர் அவர் என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டார். 16 வருடங்களாக த்ரிஷா அப்படி இருக்கிறார்.

அவர் யோகா செய்கிறார். அதான் அழகாக இருக்கிறார். யோகா செய்தால் மனதும் உடலும் அழகா இருக்கும். எல்லாரும் யோகா செய்ய வேண்டும்.” என்று பேசினார் ரஜினி.

Super Star Rajini talks about Simran and Trisha

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தாடி மீசை வச்ச குழந்தை சசிகுமார்.; பேட்ட இசை விழாவில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch eventசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் ரஜினியுடன் சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா,சசிகுமார்,சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட சசிகுமார் பேசியதாவது…

“எல்லாப் படமும் சீக்கிரம் முடியனும்னு நினைப்போம். ஆனா பேட்ட பட சூட்டிங் சீக்கிரமா முடிந்ததே என்ற கவலை இருந்தது.

ரஜினி சார் டான்ஸ் வராதுன்னு சொல்வார் ஆனால் அது பொய். அதிகாலை 3 மணிக்கு பணியாற்ற சொன்னாலும் அதை செய்து முடிப்பார்.

ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் மிகவும் பிரமாதமாக வந்துள்ளது.

ரஜினி சார் தொடர்ந்து படம் நடிக்க வேண்டும் . ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என எல்லோருக்கு ஆசை இருக்கும்.

எனக்கும் ஆசை இருக்கிறது” என்றார். அதன்பின்னர் தளபதி படத்தில் உள்ள நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற டயலாக்கை பேசி காண்பித்தார்.

அதன் பின்னர் இறுதியாக ரஜினி பேசும்போது…

சசிகுமாரின் கேரக்டர் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை சிறப்பாக இருக்கும்படியான ஒரு அருமையாக கேரக்டர்.
அவர் ஒரு தாடி மீசை வைச்சக் குழந்தை. அவர் படத்தை தயாரிக்காம நடித்தால் நன்றாக இருக்கும்” என்று வாழ்த்தி பேசினார் ரஜினி.

Sasikumar is like kid says Rajini at Petta Audio launch event

More Articles
Follows