மெர்சல் தயாரிப்பாளருக்காக ரஜினியை இயக்குகிறாரா அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கரின் உதவியாளராக ரஜினியின் எந்திரன் படத்தில் பணிபுரிந்தவர் அட்லி.

அப்போதே சூப்பர் ஸ்டாருக்கு அறிமுகமாகி விட்டார் அட்லி.

இதனையடுத்து ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார்.

எனவே அட்லி படத்தின் அடுத்த ஹீரோ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து அட்லி கதை சொன்னதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை மெர்சல் தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உறுதியானால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

காதலர் தினத்தில் ரசிகர்களுக்காக மோதும் சிம்பு-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் காதலர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

அதுபோல், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமோ’.

அனிருத் இசையமைத்திருநத இப்படத்தை அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த இரு படங்களை காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் திரையிட உள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.

உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்கள் இல்லாமல் கூட ஒரு சில சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் பெண்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியுமா? என்பது பெரும் சந்தேகம்தான்.

ஆனால் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு என்பதே நிதர்சன உண்மை.

அண்மைக்காலமாக சில முன்னணி நாயகிகள் நாயகன் இல்லை என்றாலும் கூட தங்கள் கேரக்டர் எப்படி உள்ளது? சம்பளம் எவ்வளவு? என்பதை குறி வைத்தே கதைகளை கேட்டு வருகின்றனர்.

அந்த நாயகிகள் யார் என்பது உங்களுக்கு தெரியும்தானே…?

அந்த டாப் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த ஒரு பார்வை இதோ..

நயன்தாராவும், அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.4 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவின் சம்பளம் தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து நடிகை அமலாபாலும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

த்ரிஷா தற்போது 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சமந்தா. இவரது சம்பளம் 2 கோடியை நெருங்குகிறதாம்.

ரகுல் பிரீத் சிங் கின் சம்பளம் தீரன் அதிகாரம் ஒன்று படம் வசூலுக்கு பிறகு ரூ.1½ கோடியாக உயர்ந்துள்ளது.

ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசி, சினேகா ஆகியோர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியான படம் ‘வேலைக்காரன்’.

ஆர்.டி.ராஜாவின் ‘24AM STUDIOS’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் படமாக அமைந்தது.

‘வேலைக்காரன்’ வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி தொடர்ந்து 50 நாட்கள் ஓடுவது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களும் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படங்களாக அமைந்தன.

எனவே இத்துடன் 3 வெற்றிகளை கொடுத்து ஹிட்டடித்துள்ளார்.

2.0 / காலா.; பர்ஸ்ட் ரிலீஸ் எது..? ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனின் உள்ள தனது இல்லத்தின் அருகே காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரை நிறுத்தி செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவரின் அரசியல் கட்சி பற்றி கேட்டனர். அதன்பின்னர் ‘2.0’ படம் மற்றும் காலா படத்தின் ரிலீஸ் தேதிகள் குறித்தும் எது முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளை கேட்டனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி 2.0 படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை 2-3 நாட்களில் அறிவிப்போம்” என்றார்.

2point0 or Kaala Which movie will release first in 2018

அரசியல் பணியில் கமலுடன் இணைவீர்களா?.; ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

சிஸ்டம் சரியில்லை என்றீர்களே அது தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை நாடு முழுவதுமா? என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், “தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன்” என்றார்.

மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்தார்.

Rajini speaks about his alliance with Kamal in Politics

More Articles
Follows