சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.

விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்” கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி, நடிகர் அதர்வா முரளி கூறியதாவது..

இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.

நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன்.

இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

“நவரசா” மனித உணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு, ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாகும்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது.

Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

ATHARVAA RECALLS HIS EXPERIENCE WORKING WITH FILMMAKER SARJUN KM FOR THE UPCOMING NETFLIX ANTHOLOGY ‘NAVARASA’

BREAKING ஆகஸ்ட் 9 வரை தமிழகத்தில் ஊரடங்கு..; பள்ளிகள் தியேட்டர்கள் திறக்கப்படுமா.? எதற்கெல்லாம் தடை.? எதற்கெல்லாம் அனுமதி.. ஒரு பார்வை..

BREAKING ஆகஸ்ட் 9 வரை தமிழகத்தில் ஊரடங்கு..; பள்ளிகள் தியேட்டர்கள் திறக்கப்படுமா.? எதற்கெல்லாம் தடை.? எதற்கெல்லாம் அனுமதி.. ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஜூலை 31ஆம் தேதியுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவடைகிறது.

எனவே தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 9 வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.

கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது…

*கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு

சில பகுதிகளில், அதிகளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடலாம்.

விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவு

கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மூட, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும், மாஸ்க் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.

கடைகள், வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயம் வைக்க வேண்டும்.

கடைகளுக்கு வருவோருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிவோரும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.

சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது. அதற்கான தடை தொடரும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin extends TN lockdown till August 9th

தன் மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்.; ‘அப்பாவின் ஆனந்தம்’ வைரலாகும் வீடியோ

தன் மகன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்.; ‘அப்பாவின் ஆனந்தம்’ வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத் முன்னாள் தலைவர் என பன்முகம் கொண்டவர் விஷால்.

இவர் நேற்று, மிக செல்லமாக வளர்த்து வரும் நாய் ஆகஸ்ட் பிறந்த நாளை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

தடபுடல் ஏற்பாடுகளுன், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.

அதனிலும் மேலாக ஆகஸ்ட் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு வீடியோ அவரது பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அந்த வீடியோவில், சாப்பாட்டு மேடையில் அகஸ்டின் அமர்ந்து மனிதன் போல் உடையணிந்து கைகளால் பிஸ்கட் எடுத்து சாப்பிடுகிறது. தண்ணீர் குடிக்கிறது.

இறுதியில் பின்னால் இருந்து நடிகர் விஷால் எழுந்து அந்த மேஜிக்கை நிகழ்த்திய சந்தோஷத்தில் சிரிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தனது பையன் என செல்லம் கொண்டாடும் அகஸ்டின் பிறந்த நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பது, சிறு உயிர்களிடத்திலும் பேரன்பை காட்டும் அவரது நல்ல மனதை வெளிப்படுத்துவதாக இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிராணியிடம் அன்பு செலுத்துங்கள்.

Actor Vishal’s son #August s bday video goes viral

அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

அவர்கள் ஸ்பைடர் மேனோ சூப்பர் மேனோ அல்ல..; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட் அளித்த சுஹாசினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம் கார்த்தி சரத்குமார் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

அது தொடர்பான புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் லீக் ஆனது.

இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவியும் நடிகையுமான சுஹாசினி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில்… “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா மேன்கள், தங்கள் உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Suhasini Mani Ratnam gives Ponniyin Selvan update

திட்டம் இரண்டில் கிடைத்த பாராட்டு.; பரவசத்தில் வி1 இயக்குனரும் நடிகருமான பாவல் நவகீதன்

திட்டம் இரண்டில் கிடைத்த பாராட்டு.; பரவசத்தில் வி1 இயக்குனரும் நடிகருமான பாவல் நவகீதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் பாவல் நவகீதனும் ஒருவர்.

’மெட்ராஸ்’ படத்தில் விஜி
என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

‘குற்றம் கடிதல்’ படத்தில் வில்லத்தனம் கலந்த குணச்சித்திர வேடத்தில்
மிரட்டினார்.

அப்படங்களை தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’ படத்தில் தமிழ் பேசும் வட இந்திய வாலிபராக நடித்து பாராட்டு பெற்றார்.

இப்படி எந்த ஒரு வேடமாக இருந்தாலும், தனது நடிப்பு மூலம், அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடும் நடிகரான பாவல் நவகீதன்,
அடிப்படையில் இயக்குநர் என்றாலும், அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத
நடிகராகியுள்ளார்.

’வட சென்னை’, ‘பேரன்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனது கனவான படம் இயக்குவதில் பாவல் நவகீதன் கவனம் செலுத்தி, ஒரு
படத்தை இயக்கினாலும், நடிகர் பாவல் நவகீதனை தமிழ் சினிமா விடுவதாக இல்லை.

எனவே, ‘வலிமை’, ‘பூமிகா’,
‘டாணாக்காரன்’, ‘திட்டம் இரண்டு’, ‘நவரசா’ இணைய தொடர் என பல படங்களில் நடித்து முடித்திருப்பவர்.

’ஸ்ரீதேவி சோடா
சென்டர்’ என்ற தெலுங்குப் படத்தில் முக்கிய வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘திட்டம் இரண்டு’ படம் வரும் ஜூலை 30 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ்
ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இதில் பத்திரிகையாளர்களும், திரையுலக
பிரபலங்கள் பலரும் படம் பார்த்தனர்.

படம் பார்த்த அவனைவரும் பாவல் நவகீதனின் கதாப்பாத்திரத்தையும், அவருடைய நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருவதோடு, நாசர்,
ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களைப் போல், அனைத்து வேடத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகராக பாவல் நவகீதன்
இருப்பதாக, படத்தின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகைகளின் இந்த பாராட்டினால் உற்சாகமடைந்திருக்கும் பாவல் நவகீதனிடம் படம் குறித்து கேட்ட போது,…

”சிறிய வேடம், பெரிய
வேடம் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஒரு காட்சி வந்தாலும், ரசிகர்கள் பேசும்படி நடிக்க வேண்டும், என்பது தான் என் எண்ணம்.

‘திட்டம் இரண்டு’ படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததோடு, இதுவரை யாரும் சொல்லாத ஒரு கான்சப்ட்டாக இருந்ததாலும், என்
வேடம் படம் பார்ப்பவர்கள் மனதில் நிற்கும் விதத்தில் இருந்ததாலும் நடித்தேன்.

நான் எண்ணியது போலவே இன்று படம் பார்த்த
அனைவரும் என்னை பாராட்டுவதோடு, பத்திரிகைகள் என் கதாப்பாத்திரத்தையும், நடிப்பையும் குறிப்பிட்டு எழுதுவது மகிழ்ச்சியாக
இருக்கிறது.” என்றார்.

’வி1’ என்ற திரைப்படத்தை இயக்கிய பாவல் நவகீதன், மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும்,
நடிகராக கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

’திட்டம் இரண்டு’ படத்தை
தொடர்ந்து, இந்த வருடம் அவருடைய நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருப்பதோடு, பல புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி
வருகிறார்.

எனவே, பத்திரிகைகளில் குறிப்பிட்டது போல், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் வரிசையில் பாவல் நகவகீதன்
விரைவில் இணைவார் என்பது உறுதி.

Critics praises Pavel Navgeethan acting in Thittam Irandu

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கிய ரஞ்சித்துக்கு நன்றிகள்..; நெகிழும் ‘சார்பட்டா பரம்பரை’ பசுபதி

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கிய ரஞ்சித்துக்கு நன்றிகள்..; நெகிழும் ‘சார்பட்டா பரம்பரை’ பசுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.

நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.

ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல.

( நான் எந்த சமூக வலை தளங்களிலும் இல்லை என்பதால் இந்த செய்தியை பிஆர்ஓ ஜான்சன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். )

நன்றி,
அன்புடன்,
பசுபதி
நடிகர்.
30.7.2021

Actor Pasupathy thanked director Pa Ranjith for his role in Sarpatta Parambarai

More Articles
Follows