கவுதம் மேனனுடன் கைகோர்த்த ஜோடி அதர்வா-ஐஸ்வர்யா ராஜேஷ்

bodhai kodhaiஇயக்குனராக அறியப்பட்டாலும் கவுதம் மேனன் தயாரிப்பாளராக படங்களை தயாரித்தும் வருகிறார்.

ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மூலம் படங்களை தயாரிக்கும் அவர் அண்மைகாலமாக பாடல் ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் `கூவா’, `உளவிறவு’ உள்ளிட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் `உளவிறவு’ பாடலில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தொலைக்காட்சி பிரபலம் திவ்யதர்ஷினி ரொமான்ஸ் செய்யும்படியாக அந்த பாடல் உருவாகி இருந்தது.

இந்நிலையில், `போதை கோதை’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அடுத்த ஆல்பத்தை வெளியிடவுள்ளனர்.

இதில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.

Overall Rating : Not available

Latest Post