நவீன கால கணவன்-மனைவி உறவை சொல்லும் *அதையும் தாண்டி புனிதமானது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அதையும் தாண்டி புனிதமானது ‘ என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன்.

இவர் தான் ‘அப்பா ..வேணாம்ப்பா..’ என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.

கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது.

நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால், குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமானகதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறார் இயக்குனர்.

வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைக் கொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும், வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி, வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.

இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Athaiyum Thaandi Punidhamanadhu movie set to release on September

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் ரூ. 5 லட்சம் நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

நடிகர்கள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.

மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Nadigar Sangam donates Rs 5 lakhs to Kerala flood relief fund

தமிழில் பேசினால் கிளம்பிடுறாங்க…; பேராசிரியர் கு ஞானசம்பந்தம் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கு ஞானசம்பந்தம் அவர்கள் பேசுகையில்…

‘இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம் பெண்..என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள்.

இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.

தமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான்.

ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.

நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார்.

‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார்.

இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.’ என்றார்.

Professor Ku Gnanasambandam speaks at Aaruthura Audio launch

செட்டப் பாக்ஸ் பிரச்சினைகளை சொல்லவரும் *ஓடு ராஜா ஓடு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பது கதை.

ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்கள். படத்தை பற்றி இருவரும் கூறியதாவது:-

“இது ஒரு நகைச்சுவை-திகில் படம். செல்லும் இடமெல்லாம் கதாநாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்கிற திரைக்கதை, இது.

‘ஜோக்கர்’ பட கதாநாயகன் குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா ஆகியோருடன் பல புது முகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார் நிஷாந்த் மற்றும் ரவீந்திரன்.

தோஷ் நந்தா இசையமைக்க, விஜய் மூலன் தயாரித்துள்ளார்.

‘இரும்புத்திரை’ படத்தை அடுத்து பி.டி.செல்வகுமார் வெளியிடும் படம், இது.

இந்த படத்தை அடுத்து மாதவன் நடிப்பில், மிக பிரமாண்டமான ஒரு படத்தை தயாரிக்க விஜய் மூலன் திட்டமிட்டு இருக்கிறார்.

Odu Raja Odu movie deals with Set up box issues in family

ரஜினி-கமல் படங்களை போல் பாக்யராஜ் படங்களை ரீமேக் செய்ய முடியாது. – பா. விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் பா. விஜய் இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா.

இப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குநர் பா விஜய் பேசியதாவது…

‘ இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன்.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன்.

அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன்.

கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல.

இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்லமுறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும்.

அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரீமேக் செய்துவிடலாம். ரஜினி கமல் படங்களை ரீமேக் செய்து யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம்.

ஆனால் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது.

சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார்.

அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறேன்.

எஸ் ஏ சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்த கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.

இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல.

அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள்,நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும்.

இந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்.

அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.

இந்த படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.

இன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன்.

ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ்அப்வை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.

இந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம்.

அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூ ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்ற கேட்டேன்.

எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள்.

ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.’என்றார்.

Rajini and Kamal movies can be remade but Bhagyaraj movies cant be remake says Pa Vijay

அமெரிக்காவின் சூதாட்ட நகரத்தில் போட்டி போடும் சர்கார்-காவியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவியன்’.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.

இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம்.

எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

அதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காவியன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
இயக்கம் – சாரதி

Sarkar and Kaaviyan movie shooting happens at Las Vegas

More Articles
Follows