அசுரன் – விரைவில் முன்னோட்டம் & பாடல்கள் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V creations சார்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அசுரன் ‘ .

இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் .

இப்படத்தில் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் G V பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது !

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

இது குறித்து இயக்குனர் கூறுகையில், “எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார்.

சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு,நடனம்,சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுதேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன்,ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது.

படத்தை GDR நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, மக்கள் தொடர்பு வேலைகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

பாசமான விவசாயி… பக்ரீத் விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…?

விக்ராந்த் அவரது அண்ணன் ஜெயச்சந்திரன்.

அண்ணன் தம்பி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

விக்ராந்த அவரது மனைவி வசுந்த்ரா. அவர்களுக்கு ஒரு 5 வயது மகள்.

விவசாயம் செய்து வாழ வேண்டும் என ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்கிறார். ஒருமுறை கடன் வாங்க வேண்டி ஒரு முஸ்லீம் பெரியவரிடம் செல்கிறார்.

அங்கு எதிர்பாரா விதமாக அவரிடம் உள்ள குட்டி ஒட்டகத்தை தன் மகளுக்காக வாங்கி வருகிறார். மகளும் அதை அன்பாக வளர்த்து வருகிறார்.

ஆனால் சென்னையில் உள்ள தட்ப வெப்ப காரணமாக ஒட்டகத்தால் இங்கு வாழ முடியவில்லை. அதன்பின்னர் விக்ராந்த் என்ன செய்தார்? ஒட்டகம் என்ன ஆனது? மகள் ஆசை என்னானது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்.?

இதுவரை ரொமான்ஸ், ஆக்சன் என வலம் வந்த விக்ராந்த் இதில் வித்தியாசமாக வாழ்ந்திருக்கிறார்.

ஒரு யதார்த்த விவசாயியாகவும், அப்பாகவும், நல்ல கணவனாகவும், பாசமுள்ள மனிதராகவும் என பன்முக நடிப்பை காட்டியுள்ளார் விக்ராந்த். சூப்பர் ப்ரோ.

விவசாயியின் மனைவியாக வசுந்த்ரா. கிராமத்து இல்லத்தரசியாக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா அழகு தேவதை. அவரின் கண்களும் அவர் பேசும் மழலை பேச்சும் கொள்ளை அழகு.

விக்ராந்தின் அண்ணன் ஜெயச்சந்திரன். பாசத்திலும் கோவத்திலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.

லாரி டிரைவர், லாரி கிளீனர், போலீஸ்காரர்கள், முஸ்லீம்பாய், பாரீன்காரன் என அனைவரும் கச்சிதம்.

மோக்லி, ரோகித் பதக் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையில் பாடல்கள் ப்ளஸ். ’ஆலங்குருவிகளா …’ பாடலை கெட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது.

விக்ராந்த் ஒட்டகத்தோடு சேர்ந்து செல்லும் ராஜஸ்தான் பயணம் நம்மையும் அழைத்து செல்கிறது. ஒளிப்பதிவும் சூப்பர்.

ரூபனின் எடிட்டிங்கில் தான் ஒரு குறை. 2ஆம் பாதியை சற்று குறைத்திருக்லாம்.

இயக்கம், ஒளிப்பதிவு என இரண்டையும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

ஆடு, மாடு, நாய்களை வீட்டில் ஒரு உயிராகவே சிலர் வளர்க்கின்றனர். அவர்களின் உணர்வுகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.

சில நேரம் அவை மனிதன் உயிரையும் காக்கும் என்பதையும் அழகாக காட்டியுள்ளார்.

பக்ரீத்.. பாசமான விவசாயி..

மீண்டும் சூர்யா & சிவாவுடன் இணையும் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவுடன் மாற்றான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால்.

தற்போது மீண்டும் சூர்யாவின் 39 படத்தில் அவருடன் இணையவுள்ளார்.

சிவா இயக்கவுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கெனவே சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் காஜல் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

சமூகத்திற்கு தேவையில்லாத பிக்பாஸில் சிக்கிய சேரன்.. அமீர் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், உதயா, அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

இங்குள்ள கலைஞர்கள் ஒருவொருவரை எல்லாம் மாற்றி மாற்றி புகழ்ந்து வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இது முதல் மேடை என்பதால் அது சரி.

ஆனால் எதுவும் நிரந்தரமில்லை. அதுதான் சினிமா. நாம் மின்னிவிட்டு மறைந்துவிடுவோம். அதனால்தான் நம்மை நட்சத்திரங்கள் என்கிறார்கள்.

ஆட்டோகிராப் என்ற படத்தை தயாரிக்கும்போது மிகுந்த சிரமத்தில் இருந்தார் சேரன். அது வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.

அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

அதுபோல் தேசிய கீதம் என்ற ஒரு படத்தை இயக்கி அதில் ஒரு முதல்வரை கடத்தி விவசாயம் செய்ய வைத்தார். அதுபோன்ற துணிச்சல் யாருக்கும் இருக்காது.

ஆனால் அப்படிப்பட்ட கலைஞன், இன்று பொருளாதார நெருக்கடியால் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் சிக்கியிருக்கிறார்.

அவர் போகும்போது என்னிடம் கூறிவிட்டு தான் சென்றார். அது அவருடைய விருப்பம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்க மாட்டேன்.

சேரன் அழும் ஒரு காட்சியை நண்பர் காண்பித்தார். எனவே தான் அதை பார்த்தேன். அது இந்த சமூகத்திற்கு தேவையில்லாத ஒன்று.” என்றார் அமீர்.

கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

வாழ்க்கையில் 3 விஷயங்களை எப்போதும் நாம் கேட்டு பெறக் கூடாது. நன்றி.. வாழ்த்து.. கைத்தட்டல்.. இவை மூன்றும் தானாக கிடைக்க வேண்டும்.

பெரியவர்களிடம் வாழ்த்தை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம். அது கூட ஓகே. ஆனால் நன்றியை கேட்டு பெற கூடாது. அதுபோல் கைத்தட்டல்களை கேட்டு பெறவே கூடாது.

சினிமாவில் ஒரு காட்சி நன்றாக இருந்தால் மக்களே கைத்தட்டுவார்கள். இந்த காட்சிக்கு கைத்தட்டுங்க என்று வாசகம் வராது.

அதுபோல் மேடையில் நாம் பேசினால் நன்றாக இருந்தால் மக்களே கை தட்டுவார்கள்.

கை தட்டுங்க.. கை தட்டுங்க.. என்று நாம் கேட்க கூடாது. மக்களுக்கு எப்போ கை தட்டனும் என்று தெரியும்.
ஒருவேளை அவர்கள் கை தட்டவில்லை என்றால் நாம் சரியாக பேசவில்லை என்று அர்த்தம். அதை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அமீர்.

We should not ask for applause says Director Ameer

More Articles
Follows