அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் 7 வது தயாரிப்பாக உருவாகும் புதிய படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dramedy எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. அதுவும் தமிழில் இந்த வார்த்தை வரும் முன்பாகவே அந்த வகையில் படங்கள் வந்திருக்கிறது. நாம் மிக அற்புதமான குடும்ப படங்களை ஏராளமாக தந்திருக்கிறோம். உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுபூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் நகைச்சுவை பொங்கும் உணர்வுபூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த தயாரிப்பாக தயாரிக்கவுள்ளார். தற்போதைக்கு தலைப்பிடப்படாத “தயாரிப்பு எண் 7 “( Production no 7) ஆகிய இந்த படத்தில் அசோக்செல்வன், நிஹாரிகா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி தனது அறிமுக இயக்கமாக இப்படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் துவக்கம் இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பாடல் வேலைகளை துவக்கியதன் மூலம் இனிதே ஆரம்பித்தது.

கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் கூறியதாவது….

எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய இளம் திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளை தயாரிப்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் பாலிவுட்டில் Rajshri Productions நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் பெரும் வெற்றி தரும் குடும்ப டிராமாக்களை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் தயாரித்த “ஹம் ஆஃப் கே ஹெய்ன் கோன்”, “ஹம் சாத் சாத் ஹெய்ன்” போன்ற படங்கள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் அதே போன்று குடும்ப உணர்வுகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கதையை தேடியபோது இயக்குநர் ஸ்வாதினி அப்படியான ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் என்னை அணுகினார். அதுமட்டுமல்லாமல் அவர் மேலும் ஒரு வருட காலம் தனது திரைக்கதையில் வேலை செய்து, குடும்ப உணர்வுகள் பொங்க, காதல், காமெடி சரிவிகிதத்தில் இருப்பது மாதிரி திரைக்கதையை மெருகேற்றினார். அவரது கடும் உழைப்பு என்னை ஈர்த்தது. “ஓ மை கடவுளே” மூலம் வெற்றியின் உச்சத்தை தொட்டிருக்கும் அசோக்செல்வனுடன் மீண்டும் இணைவது எங்கள் நிறுவனத்திற்கு பெரும் பலம். அற்புதமான திறமை கொண்ட, உணர்வுகளை எளிதில் திரையில் காட்டும் நடிகை நிஹாரிகா படத்தில் இணைந்திருப்பது மேலும் மகிழ்ச்சி. இன்று இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மேற்பார்வையில் பாடல் வேலைகளை துவக்கி, படத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய சூழல் முழுக்க சமநிலையை அடைந்த பின் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகான ஐந்தாவது மாதத்தில், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

படத்தில் மேலும் பணிபுரியவுள்ள நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக AR சூர்யா, படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் பணிபுரிகின்றனர்.

கொரோனா இல்லாத ‘நியூ’சிலாந்து..; பெண் பிரதமரால் கிடைத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீ வல்லராச இரு.. பேரரசா இரு.. எனக்கு எல்லாம் அரசும் ஒன்று தான். என உலக நாடுகளுக்கே சவால் விட்டு உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ்.

உலகளவில் உயிர் பலி எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.

பொது முடக்கத்தால் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் உலகளவில் கொரானாவை முற்றிலும் ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து நாடு பெற்றுள்ளது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் என்ற பெண் பிரதமர் ஆளுகிற இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரானா தொற்று ஏற்பட்டதாம்.

ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 23 மட்டுமே என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் கொரானா இந்த நாட்டில் நுழைந்துள்ளது.

ஆனால் மார்ச் 25-ந் தேதி தான் அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து கடுமையாக பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்னர்.

நியூசிலாந்து மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

இறுதியாக சிகிச்சைக்கு பெற்றவர்கள் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் 48 மணி நேரம் எந்த அறிகுறியும் இன்றி, குணமான நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த 2 வாரங்களாக புதிதாக ஒருவருக்கு கூட அங்கு கொரானா வைரஸ் தொற்று கிடையாது.

இதை பிராந்திய பொது சுகாதார துறை உறுதி செய்துள்ளது.

ஹீரோ அனிருத்.. புரொடியூசர் சிவகார்த்திகேயன்… ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் சிவகார்த்திகேயனின் நட்பு கூட்டணியில் இணைந்தார் அனிருத்.

ஆனால் தற்போது தனுஷ் கொஞ்சம் விலக.. சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.

சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு அனிருத் தான் ஆஸ்தான் இசையமைப்பாளர்.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் உயர்ந்துவிட்டார்.

அனிருத்தும் ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

இந்த நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷ்ஷான ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் பாராட்டித் தள்ள சிவகார்த்திகேயன் ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

அவர் ‘சார்ர்ர்ர், எப்பன்னாலும் சரி, என்னிக்கானாலும் சரி…. நீங்க ஹீரோவா நடிக்கிற ஃபர்ஸ்ட் படம் புரொட்யூசர் நான்தான்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த கமெண்ட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’தலைவன் இருக்கின்றான்’: கமல் – ஏஆர் ரஹ்மான் மீண்டும் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடித்த இந்தியன், பஞ்ச தந்திரம், தெனாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏஆர். ரஹ்மான்.

விரைவில் இந்த கூட்டணி கமல் நடித்து தயாரித்து இயக்கவுள்ள ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்திலும் இணைய வாய்ப்புள்ளாக தெரிகிறது.

’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் சிவாஜி, கமல் நடித்த ’தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

வடிவேலு, விஜய்சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கமல், ரஹ்மான் இணைந்து உரையாடவுள்ளனர்.

இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ’தலைவன் இருக்கின்றான்’ படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் டைரக்சனில் நடிகர் தனுஷ்..; தயாரிப்பாளர் மாற்றம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என கோலிவுட்டையே கலக்கி வருபவர் தனுஷ்.

நடிப்பில் பிசியாக இருந்த போரே ’பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் தனுஷ்.

இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிக்க தனுஷே தயாரித்திருந்தார்.

அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், சில மாதங்களிலேயே தன் அடுத்த பட இயக்கத்தை தொடங்கினார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தொடங்கிய அந்தப் படத்தில் நாகார்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திங்கள் நடிக்க தொடங்கினர்.

‘நான் ருத்ரன்’ எனப் பெயரிடப்பட்ட அப்படம் ஒரு சரித்திர காலத்து கதையாகும்.

ஆனால் சில தினங்களிலேயே பைனான்ஸ் பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது அதே படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.

ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கோலிவுட்டை தாண்டி பாலிவுட் செல்லும் விக்ரமின் ’கோப்ரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் ’கோப்ரா’.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரே இதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்பட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போது கொரோனா ஊரடங்கால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

உடனடியாக படக்குழுவினர் நாடு திரும்பினார். கொரோனா பிரச்சினைக்கு பிறகு இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ’கோப்ரா’ பட ஹிந்தி உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் ஹிந்தி டப்பிங் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐ, ’ராவண்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய படங்களின் மூலம் ஹிந்தியில் விக்ரம் பிரபலமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

More Articles
Follows