தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலர்ஸ் டிவி என்ற தனியார் தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் கலந்துக் கொள்ளும் 17 பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை தேர்வு செய்யவிருக்கிறார் நடிகர் ஆர்யா.
தற்போது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோரி கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கு பெறும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா தேர்வு, நீக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்.
பெண்களை காட்சிப்பொருளாக இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கின்றனர்
இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் சமத்துவம் மீறப்பட்டுள்ளது.
பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் தவறான கருத்தை புகுத்தும் வகையில் உள்ளது.
இவை தொடர அனுமதித்தால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரும், எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவிட்டுள்ளனர்.
Aryas Enga Veetu Maappillai show issue Colors TV into trouble