சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ டீசர் விழாவில் வைபவ் & அதுல்யாவை வாழ்த்திய அருண் விஜய்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ டீசர் விழாவில் வைபவ் & அதுல்யாவை வாழ்த்திய அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ டீசர் விழாவில் வைபவ் & அதுல்யாவை வாழ்த்திய அருண் விஜய்

*பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா*

கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல்
அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார்.

மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் லைஃபை என்று அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிறுவனம் தயாரிக்கும் 2வது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், பிபின், ஹுசைனி,
உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.

அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் டீசர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன.

நடிகர் இளவரசு பேசும் பொழுது…
,”தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர், நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் திரு D.இமான் இன்று வளர்ந்து தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார்.

நடிகர் வைபவ் பார்ப்பதற்கு தான் அமைதியான ஆள் ஆனால் பயங்கர சேட்டைக்காரர். அதுல்யா, நடன இயக்குனர் அஜய் ராஜ் மற்றும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல சினிமாக்களை ஆதரியுங்கள். அவை வெற்றி அடைய உதவும் வகையில் நல்ல விமர்சனங்களை எழுதி தமிழ் சினிமா முன்னேற ஊடகவியலாளர்கள் உதவி புரிய வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும் பொழுது…

,”என்னை அழைத்து வாய்ப்பளித்த மனோஜ் பெனோ மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அவர்களுக்கும், படப்பிடிப்பில் அதிக ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் பட குழுவினருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

நடன இயக்குனர் அஜய் ராஜ்

*நடன இயக்குனர் அஜய் ராஜ்*
“இசையமைப்பாளர் இமான் அவர்களுடன் எனக்கு இது மூன்றாவது திரைப்படம். பாடல்கள் நன்றாக இருந்தால் பணிபுரியும் நாமும் சந்தோஷமாகவும் பணிபுரிவோம். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிறப்பான இசையை தந்துள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்கும். நண்பர் வைபவ் மற்றும் இயக்குனர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

*நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது,…

“பிடிஜி யுனிவர்சலின் முதலாவது திரைப்படம் டிமான்டி காலனி-II சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் வெளியாக உள்ளது. அடுத்து அருண் விஜய் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து, இதேபோன்று நிறைய படம் தயாரிக்க வேண்டும் என வேண்டுகிறேன். தேசிய விருது பெற்ற இமான் சாருக்கு நன்றிகள். நடன இயக்குனருக்கும்,
இயக்குனருக்கும், படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்றார்.

ஜான் விஜய் பேசும் பொழுது,…

” இத்திரைப்படம் சிறந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாகும். நானும் இளவரசு அவர்களும் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. சகோதரர் இமானை நான் நடிக்கவும் வைத்துள்ளேன். அவரை நீண்ட வருடங்களாக தெரியும். இத்திரைப்படத்திற்காக அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”, என்றார்.

நடிகர் ஆனந்தராஜ் பேசும்பொழுது..

இசையமைப்பாளர் இமானுடன் எனக்கு இரண்டாவது படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். தயாரிப்பாளர்கள் சிறிய மற்றும் நிறைய படங்களை தயாரிக்க வேண்டும். இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சக நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நகைச்சுவையான இத்திரைப்படத்தை வெற்றியடைய ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”,என்றார்.

*நடிகை அதுல்யா பேசும்பொழுது…

” தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு நன்றி. எங்களது படக்குழு மிகவும் ஜாலியாக இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி”, என்றார்.

இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது…

,”இந்த வாய்ப்பளித்த பாபி மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் நன்றிகள். சிறந்த பாடல்களை அளித்த, என்னுடைய பள்ளித் தோழர் டி. இமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். படப்பிடிப்பின்போது நன்கு ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் அதுல்யாவுக்கும் மிக்க நன்றி”, என்றார்.

இசையமைப்பாளர் D இமான் பேசும்பொழுது…

,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். வைபவ்,அதுல்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்”, என பேசினார்.

*நடிகர் அருண் விஜய் பேசும் பொழுது,…

“பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில்
டிமான்ட்டி காலனி-II சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நானும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் (ரெட்டை தல ) நடித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

நடிகர் வைபவ் பேசும்பொழுது…

தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட அதுல்யாக்கு மிக்க நன்றி..

இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது. மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும் என நிறைவு செய்தார்.

தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் பேசும்போது…

,”எங்களது நிறுவனத்தின் வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ மற்றும் எங்களது குழுவினர், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த,எங்களது முதல் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி.
சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என தன் பேச்சை நிறைவு செய்தார்.

வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ பேசும்போது..

“பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி அவர்கள் இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.
“டிமான்ட்டி காலனி-II” திரைப்படம் மூலமாக எங்களுக்கு முதல் வெற்றியை அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து மனமார்ந்த நன்றிகள் மற்றும் எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும். அடுத்த படமான ரெட்டதலயும் 75% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதன் ஹீரோ அருண் விஜய் இங்கு வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. விக்ரம் ராஜேஷ்வர் போன்ற புது இயக்குனர்களுக்கு வீட்டில் சார்பில் நிறைய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்”, என முடித்தார்.

இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை..

Arun Vijay wishes Chennai City Gangsters team

GOAT TREAT விஜய் படமானாலும் மோகன் & பிரசாந்துக்கு முக்கியத்துவம்.. – வெங்கட் பிரபு

GOAT TREAT விஜய் படமானாலும் மோகன் & பிரசாந்துக்கு முக்கியத்துவம்.. – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GOAT TREAT விஜய் படமானாலும் மோகன் & பிரசாந்துக்கு முக்கியத்துவம்.. – வெங்கட் பிரபு

*தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு*

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (‘கோட்’) திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஆக்ஷன் எண்டர்டெயினராக தயாராகி செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘கோட்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் 25வது படமாக ‘கோட்’ உருவாகி இருக்கிறது.‌

தளபதி விஜய்யுடன் ‘பிகில்’ படத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.‌‌ இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. எங்கள் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் பணிகள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றன. படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவான படைப்பு. ஏராளமான வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். விஜய் சார் நடிக்கும் படத்தில் அதிகளவு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் இதுதான்.

இந்த தருணத்தில் படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்காக திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்…

”என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம்.‌ இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை முதன்முதலாக சந்தித்து இந்த கதையை விவரித்தேன். அப்போது அவரும் ஆர்வமாகி இந்த படைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க தொடங்கினார்.

பின்னர் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.‌ அதன் பிறகு விஜய் – ஏஜிஎஸ் நிறுவனம் இருவரும் இணைந்தார்கள். கதையைக் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் அவர்கள், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சி. செலவைப் பற்றி கவலைப்படாமல் உலகத் தரத்திலான படத்தை உருவாக்குங்கள் என்றார்.

இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் பெரிதாக யோசிக்கத் தொடங்கினேன்.‌

இந்தப் படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிடுவதற்காகவே இஸ்தான்புல் நகரத்திற்குச் சென்றோம். ஆனால் அங்கு பணியாற்ற முடியாத சூழல் இருந்தது. அதனால் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்தினோம்.

நாங்கள் படப்பிடிப்பை நடத்திய காலத்தில் அந்த நாட்டில் பெரிய பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாதது.

இந்தப் படத்தினை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தான் தொடங்கினோம். இந்த படத்திற்காக உலகத்தில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘லோலா’ உடன் இணைந்தோம். இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது.

இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் முதலில் சற்று தயக்கம் இருந்தது. ஏனெனில் வித்தியாசமாக யோசித்த விசயத்தை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்காக என்னுடைய குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு. இதனால் திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார்.‌ ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா- கலை இயக்குநர் ராஜீவன் – ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர், கதாபாத்திரத்தை வடிவமைத்த மும்பையை சேர்ந்த பிரீத்தி ஷீல் சிங்- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா- என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், அனைத்தும் விஷுவல் ட்ரீட் ஆகவும் இருக்கும்.

படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.‌ இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.

விஜய்யை தவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, யோகி பாபு , மீனாட்சி என ஏராளமானவர்கள் நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் அனைவரும் இணைந்து நடிப்பதற்காக ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே எனக்கு மகிழ்ச்சியையும் தந்தது.

இந்தப் படம் ஒரு நேர்த்தியான, கமர்ஷியலான எண்டர்டெயின்மென்ட் படம். விஜய் சாரை இது போன்றதொரு கமர்சியலான படத்தில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமில்லாமல் கதையும் இருக்கிறது.

‘கோட்’ செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.‌

இது விஜய் சார் படம் என்றாலும் அனைவரும் இதில் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே சமயத்தில் முக்கியத்துவம் இருந்தால்தான் அவர்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அதனால் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தணிக்கைக்காக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முதன் முதலாக வசனகர்த்தா விஜியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான விருந்தாக இருக்கும். ‘கோட்’ பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. எந்த இடத்திலும் முகத்தை சுழிக்கும் காட்சிகள் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு ஆசியையும், ஆதரவையும் வழங்குங்கள்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்தனர்.

Mohan and Prashanth had importance with Vijay in Goat

————-

எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ.. அபிராமி ரசிகன் நான்.. பிரியங்கா கண் அசைவே போதும்.. – நானி

எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ.. அபிராமி ரசிகன் நான்.. பிரியங்கா கண் அசைவே போதும்.. – நானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ.. அபிராமி ரசிகன் நான்.. பிரியங்கா கண் அசைவே போதும்.. – நானி

*’நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும் திரைப்படம் இம்மாதம் 29 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா, நடிகைகள் பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை அதிதி பாலன் பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நான் மிகவும் ரசித்து விருப்பத்துடன் பணியாற்றிய படம் இது.‌ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா திறமையான இயக்குநர். நடிகர்களிடமிருந்து தனக்கு தேவையான நடிப்பை நேர்த்தியாக வாங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நடிகர் நானி சிறந்த மனிதர். சக நடிகர் – நடிகைகளை அன்புடன் நேசிப்பவர். முதலில் அவர் திரையுலகில் படத்தை இயக்குவதற்காக தான் வருகை தந்திருக்கிறார் என்ற விசயம் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளில் நடிக்கும்போது அவர் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார் அது எனக்கு பிடித்திருந்தது.‌

பிரியங்கா மோகனுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதிலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். இந்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன். இருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

படத்தில் நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னை ஆசீர்வதித்தார்.‌ ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். அற்புதமான படத்துடன் வருகை தந்திருக்கிறோம். இந்தப் படத்தில் மட்டுமல்ல.. படப்பிடிப்பு தளத்திலும் நிறைய பாசிட்டிவிட்டி இருந்தது. நானியை ஈயாக பார்த்திருக்கிறோம். புராண கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து பரிட்சார்த்த முறையில் நடித்து வரும் திறமைசாலி.‌ இயக்குநரும் , நடிகருமான எஸ். ஜே. சூர்யாவிடம் ஒரு மேஜிக் இருக்கிறது.‌ அது இந்த படத்திலும் இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
இயக்குநர் விவேக்- இந்த படத்தில் நாயகனுக்கு அழகான அம்மா கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியிருக்கிறார்.‌ திறமையான இயக்குநர். கலைஞர்களிடமிருந்து கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை திறமையாக வாங்கி விடுவார். அனைவரும் ஒன்றிணைந்து ரசிக்கும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், ” தற்போது நான் நடித்திருக்கும் சூர்யாஸ் சாட்டர்டே எனும் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பிற்காக உங்களை சந்திக்கிறேன். ‘கேங் லீடர்’ படத்திற்கு பிறகும் நானியுடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் சாருலதா என்கிற ஒரு அழகான கதாபாத்திரத்தில் பெண் காவலராக நடித்திருக்கிறேன். இயக்குநர் விவேக் இந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் இந்த கதாபாத்திரம் ரசிக்கும் வகையில் இருக்கும்.

எஸ் ஜே சூர்யாவுடன் ‘டான்’ படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நிறைய காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறேன். ஏராளமான சுவாரசியமான திருப்பங்களும் இருக்கும்.‌

அதிதி பாலன் மற்றும் அபிராமியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.

அனைவரும் இந்த படத்திற்காக நேர்மையுடன் உழைத்திருக்கிறோம். ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் எஸ். ஜே. சூர்யா பேசுகையில், ” நானியை முதலில் வரவேற்கிறேன். அவர் ஏற்கனவே தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் என்றாலும் அவரை மீண்டும் மனதார வரவேற்கிறேன். இங்கு உள்ள குடும்ப ரசிகர்கள் அனைவருக்கும் நானி பரிச்சயமானவர். பெருந்தன்மையானவர். அற்புதமான நடிகர். தெலுங்கில் அவருக்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ என பட்டம் வழங்கி இருக்கிறார்கள்.

‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமான அபிராமி சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைத்துக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது. அது வந்து விட்டால்… வாய்ப்புகள் குவியத் தொடங்கும் அது போல் தற்போது அபிராமிக்கு நடந்து கொண்டிருக்கிறது. நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு மனமார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தெலுங்குகாரராக இருந்தாலும் சென்னையில் படித்த பையன். அதனால் அவர் சென்னை வாசி தான். அவருக்கு தமிழ் மக்களை மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா- அபிராமி- பிரியங்கா மோகன் -அதிதி பாலன் -என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். நானி சாரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான்.

நானி சார் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குநராக தொடங்கி.. படிப்படியாக உயர்ந்து இன்று நட்சத்திர நடிகராக வளர்ந்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடம் ஏராளமான அன்பை சம்பாதித்து இருக்கும் ஒரு நட்சத்திர நடிகர்.‌ தமிழ்நாட்டிலும் அவர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வருகிறார்.

எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அண்மையில் ‘ராயன்’ வெளியானது. பெரும் வெற்றியை பெற்றது. எனக்கும் நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படம் வெளியாகிறது.‌

நான் ஏன் இந்த படத்தை ராயனுடன் ஒப்பிட்டு பேசுகிறேன் என்றால்.. அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக்கதை இருக்கிறது.

இதுவரை பல ஆக்ஷன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அனைத்திற்கும் அடிப்படை மாணிக்கம்- பாட்ஷா தான். இதை வைத்து தான் அனைத்து ஆக்சன் படங்களும் உருவாகின்றன. மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’ படத்திலும் இந்த அடிப்படை தான் இருந்தது. அதாவது பாட்ஷாவாக இருப்பார். ஆனால் சூழ்நிலைக்காக தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மாணிக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பார். இது எப்போதும் வெற்றி பெறும் சினிமா சூத்திரம்.

இந்த தருணத்தில் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இந்த ஃபார்முலாவில் வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார். அது என்னவெனில் ஒரு பையன் அதீத கோபக்காரன். அவனது அம்மா ‘கோபப்படாதே’ என்று சொன்னால் அவன் கேட்பதாக இல்லை. அதனால் அவனது தாயார், ‘நீ கோபப்படு.‌ அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோபப்படாதே. வாரத்திற்கு ஏதேனும் ஒரு நாள் மட்டும் கோபப்படு’ என சொல்கிறார். அது என்ன கிழமை என்றால் சனிக்கிழமை அது ஏன் என்பதற்கு நீங்கள் படத்தை பார்த்தால் புரியும்.

அதனால் இந்த படத்தில் கதையின் நாயகனான சூர்யா ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கோபமே படாமல் இயல்பான மனிதனாக இருப்பார். அதாவது மாணிக்கமாக இருப்பார். சனிக்கிழமை மட்டும் அவர் பாட்ஷாவாக மாறுவார். இதுதான் இந்தப் படத்தின் கான்செப்ட்.

இது ஹீரோவின் கோபத்தை உணர்த்துகிறது. அதே போல் இந்த படத்தில் தயா எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் ஒரு கோபம் இருக்கிறது. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விசயம் கிடைக்காததால் நான் அரக்கத்தனமாக நடந்து கொள்கிறேன். இந்த இரண்டு கோபமும் ஒரு புள்ளியில் மோதினால் … என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். இதனை இயக்குநர் விவேக் ஆத்ரேயா நேர்த்தியாகவும் அழகாகவும் அற்புதமாகவும் திரையில் செதுக்கியிருக்கிறார்.

கடந்த காலங்களில் நாகார்ஜூனா நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘உதயம்’ படத்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ… அது போன்றதொரு வித்தியாசமான அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய படம்தான் இது. அதனால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் நானி பேசுகையில்,…

” ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழ் மக்களின் அன்பை வியந்து பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவை நான் தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறேன்.‌ இங்கு மணி சார் ..ஷங்கர் சார்.. பாரதிராஜா சார்.. என ஏராளமான ஆளுமைகள் இருக்கிறார்கள்.

நான் நடித்த படங்களை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தைப் பற்றி பேசும் தமிழ் மக்களின் கருத்துக்களை நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொள்வேன்.‌ குறிப்பாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்ஷனை கவனிப்பேன்.‌

சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அங்கு ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு என்னை பிரமிக்க வைக்கும். என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாகட்டும்.. நலம் விசாரிப்பதாகட்டும்.. அவர்கள் காட்டும் அன்பு சிறப்பானது. தொடர்ந்து என் மீது பாசத்துடன் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ ஸ்பெஷலான திரைப்படம். பொதுவாக இந்த கால ரசிகர்களுக்கு ஆக்சன் படம் என்றால் பிரம்மாண்டமானதாகவும் தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கவேண்டும் . அந்த பாணியில் ஏராளமாக படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களில் இருப்பது போல் எளிமையான ஆக்சன் படங்களை இந்த கால ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். அந்த வகையில் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ எளிமையான ஆக்சன் என்டர்டெய்னர்.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா- தமிழ் மக்களின் உணர்வு… தெலுங்கு மக்களின் உணர்வு … என பாகுபாடு பார்க்காமல் பொதுவாக அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய திரை மொழி தனித்துவமானது. அனைவருக்குமானது. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்தப் படத்தை பொருத்தவரை நான் செகண்ட் ஹீரோ தான். எஸ் ஜே சூர்யா தான் ஹீரோ. இந்தப் படத்தின் டைட்டில் எஸ் ஜே சூர்யாவுக்கு தான் பொருத்தமானது.

என்னைப் பொறுத்தவரை இது எஸ் ஜே சூர்யாவின் சாட்டர்டே. அவர் திரையில் தோன்றும் போது வழங்கும் உத்வேகம் அலாதியானது. படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய உற்சாகம் அனைவருக்கும் பரவும். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதற்காகவும், நடித்ததற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்த போது சில விசயங்களை கற்றுக் கொண்டேன்.

பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கு இறைவன் நவரச பாவங்களையும் வெளிப்படுத்தும் முக அமைப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய சிறிய கண் அசைவே ஏராளமான விசயங்களை சொல்லி விடும். அந்த அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அவர்தான் நேச்சுரல் ஸ்டார். அவருடைய ரியாக்ஷன் நேச்சுரலாக இருக்கும். அவருடன் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது.‌ அவர் இந்தப் படத்தில் ஏற்று நடித்திருக்கும் சாருலதா எனும் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.

அதிதி பாலன்- பத்ரா எனும் கதாபாத்திரத்தில் என்னுடைய சகோதரியாக நடித்திருக்கிறார். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது. அவருடனும் இணைந்து நடித்ததற்காக பெருமிதம் அடைகிறேன்.‌ இந்தப் படத்தில் நான் -அதிதி பாலன்- பிரியங்கா மோகன் -அபிராமி -சாய்குமார் – குடும்பமாக நடித்திருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் அவருக்கு ஏராளமான சிக்கல்கள் இருந்தாலும் சிரித்தபடியே நடித்துக் கொடுத்தார்.

அபிராமி – கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்த தருணத்திலிருந்து நான் அவருடைய ரசிகன். அந்தப் படத்தில் அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட முக்கியமான காட்சியில் அவருடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. இதை ரசிகர்களும் திரையில் பார்த்து பாராட்டினை தெரிவிப்பார்கள்.

சூர்யா சாட்டர்டே தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து விட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் முழுவதும் படத்தை வெளியிடுவம் விநியோகஸ்தர் சுப்பையாவிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

Nani speech about SJ Surya Abirami and Priyanka

4 GIRLS : மருத்துவருக்கு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான பான் இந்தியா படம்

4 GIRLS : மருத்துவருக்கு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான பான் இந்தியா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யூனிக் பிக்சர்ஸ் தயாரிக்கும்
“4 கேர்ள்ஸ்”

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் “4 கேர்ள்ஸ்”.

தெலுங்கான மாநிலத்தில் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையை கருவாக வைத்து உருவாகியுள்ள படம் ” 4 கேர்ள்ஸ்”.

சுருதிகா தன் தங்கையை படாத கஷ்டங்கள் பட்டு மருத்துவருக்கு படிக்க வைக்கிறார். அவரை நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். சுருதிகா தன் தங்கையோடு படித்த மாணவிகளின் துணையோடு அவர்களை பழி வாங்குகிறார் என்பதே படத்தின் மீதி கதை என தயாரிப்பாளர் நரசிம்மலு தெரிவித்தார்.

சஸ்பென்ஸ், திரில்லராக உருவாகியுள்ள “4 கேர்ள்ஸ்” திரைப்படம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

கதை நாயகன் நாயகிகளாக அங்கூர், பிரின்ஸ், சுருதிகா, மரியா, அக்‌ஷனா, பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை ஜெயசந்திரா

ஒளிப்பதிவு ஜெகதீஸ்

வசனம் ரவிக்குமார்

கதை, திரைக்கதை, இயக்கம் சிவா

யூனிக் பிக்சர்ஸ் சார்பாக நரசிம்மலு தயாரித்துள்ளார்.

இணை தயாரிப்பு விக்டர்.

யூனிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அங்கூர் மற்றும் பிரின்ஸ் நடிக்கும் ‘4 கேர்ள்ஸ்’..;

தெலுங்கானாவில் மருத்துவருக்கு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான பான் இந்தியா படம்..

#4GIRLS #FourGirls @rajkumar_pro

Andhagan Success.. : MGR-க்கு பிறகு பிரசாந்த்.. திருமணம் எப்போ.? தியாகராஜன் உருக்கம்

Andhagan Success.. : MGR-க்கு பிறகு பிரசாந்த்.. திருமணம் எப்போ.? தியாகராஜன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhagan Success.. : MGR-க்கு பிறகு பிரசாந்த்.. திருமணம் எப்போ.? தியாகராஜன் உருக்கம்

*’அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா*

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌

இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில்..

”’அந்தகன்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’ தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்.

தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் ‘அந்தகன்’. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது.

இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.‌ பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் பெசன்ட் ரவி பேசுகையில், ”மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரசாந்துடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அந்தகன் எனக்கு ஸ்பெஷல். படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவருடன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.

தியாகராஜன் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது.‌ இருந்தாலும் படத்தைப் பற்றிய சிறிய சந்தேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்காக பிரசாந்த் உடன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை. பிரசாந்த் – தியாகராஜன் ஆகியோர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களுடன் பயணித்தேன்.

அதன் பிறகு ஒரு நாள் தியாகராஜன் என்னை அழைத்து படத்தை காண்பித்தார். அதிர்ச்சியில் உறைந்தே போனேன். படம் மிக அழகாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. படம் வெற்றி பெறும் என்பதை அப்போது உறுதி செய்தேன். இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி மீது எனக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நான், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாக ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இந்த படம் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் முடிவடைந்து விட்டது. அதனால் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று மனித உளவியலே சொல்லிவிட்டது. ஏனெனில் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஏதேனும் ஒரு வகையில் இடையூறு ஏற்படும். ஆனால் அந்தகன் படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இது போன்ற வெற்றி படத்தை வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி நன்றி,” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”அந்தகன் படம் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்திய ஊடகங்களுக்கும், திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ’90ஸ் கிட்ஸ்’ என்ற வார்த்தையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதற்காக பிரசாந்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ’90ஸ் ஸ்டார்ஸ் கம் பேக்’. இதற்காக சிம்ரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.‌

நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அந்த தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எம் மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..! அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில்…

”இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும்.

அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி,” என்றார்.

நடிகை சிம்ரன் பேசுகையில்…

”திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் ‘அந்தகன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.

பிரசாந்த் – என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ரியா ஆனந்த் – படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். உண்மையில் அவர்தான் எனக்கு குரு. நான் இன்று தமிழில் இந்த அளவிற்கு பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். அவருடைய படப்பிடிப்பு தளத்தில் ஒழுக்கமும், நேர்மையும் நிறைவாக இருக்கும். அவர் மிகவும் அன்பானவர், உதவும் குணம் உள்ளவர்.

இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசை போன்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில்…

”அந்தகன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஏராளமான ஊடகங்களை வரவேற்கிறேன். ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பதை காண்கிறேன். இது ஆரோக்கியமானது.

தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை.

பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.

இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார்.

படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சிம்ரனை ‘தர்மசக்கரம்’ எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அர்ஜுன் நடித்த ‘கொண்டாட்டம்’ படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘கொண்டாட்டம்’ தான்.

அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார். அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

ஒரு எல்லைக்கு பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது. நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதி காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.‌

அவர் நடித்த கடைசி படம் ‘தசாவதாரம்’. அப்போது கூட அவருக்கு கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன்.

இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில்…

”அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடைய செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களை சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம்.‌ திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.

பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது. அவருடைய அழகு – சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம்.

இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார்.‌ நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன்.

அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம்.

அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.‌ அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.

சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்.‌ நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.

அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார்.‌ அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் பேசுகையில்..,

‘அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.‌

இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌

சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது.

நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.

குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம்.

60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன்.

இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் ‘அந்தகன்’ படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது.‌ அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார்.‌ என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம்.

நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த ‘ராக் ஸ்டார்’ அனிருத், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும்.‌ என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இறுதியாக நடிகர் பிரஷாந்தின் திருமணம் எப்போது என்று கேஸ் ரவிக்குமார் கேட்டார்.. அதற்கு தியாகராஜன் பதில் அளிக்கும் போது…

“நல்ல குடும்பப்பாங்கான பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம்.. பிரசாந்தின் திருமண வாழ்க்கை குறித்து எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது.. அது பற்றி நானும் என் மனைவியும் நினைக்காத நாள் இல்லை.. பிரசாந்த் மனதுக்கு பிடித்த பெண் கிடைத்தவுடன் திருமணம் நடக்கும்..” என தெரிவித்தார் தியாகராஜன்..

Andhagan Success After MGR Prashanth Soon Prashanth will marry

***

ஆறு மாதத்தில் 5000 செடிகளை நட்டு பராமரிக்க நடிகர் சௌந்தரராஜா திட்டம்

ஆறு மாதத்தில் 5000 செடிகளை நட்டு பராமரிக்க நடிகர் சௌந்தரராஜா திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறு மாதத்தில் 5000 செடிகளை நட்டு பராமரிக்க நடிகர் சௌந்தரராஜா திட்டம்

*நடிகர் சௌந்தரராஜாவின் சமூக அக்கறைக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு…

தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா.

கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார்.

அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினார்.

இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240  மரக்கன்று நட்டார்.

தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மர்க்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Education  Phsycolosit ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.

Soundararaja plans for 5000 trees in tamilnadu

More Articles
Follows