அருள்நிதி நடிக்கும் புது படம் k 13

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நேரங்களில், சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும். அதற்கு சரியான உதாரணமாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படத்தை சொல்லலாம். அது நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய அறிவிப்பாக இருக்கட்டும் அல்லது படம் தயாரிப்பில் இருந்தபோது வந்த முக்கியமான தருணங்களாக இருக்கட்டும், நம் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது. தற்போது K13 என்ற படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, “K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.

K13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்” என்றார்.

இந்த K13 படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை இயக்கிய ரஞ்சித் அதற்கு அடுத்து படங்களை இயக்கவில்லை.

தற்போது படங்களை தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்று பெயரிட்டுள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இப்பட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. கிளாப் அடித்து பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அப்போது `பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜும் உடனிருந்தார்.

மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இந்த படத்தை இயக்குகிறார்.

தினேஷ் நாயகனாகவும், அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாகவும் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

தா.ராமலிங்கம் கலை பணிகளை கவனிக்க, உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

லாஜிக் இல்லாமல் படம் பண்ண சொன்னார் சுந்தர் சி..; மாணிக் பட மார்ட்டின் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மா கா பா ஆனந்த் மற்றும் சூஷா இணைந்து நடித்துள்ள மாணிக் என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

“மாணிக்” திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :-

நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள்.

சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன்.

இயக்குநர் சுந்தர் C அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து ‘மாணிக்’ படத்தை இயக்கியுள்ளேன்.

‘மாணிக்’ என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம்.

இப்படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாக இருக்கும். தரன் படத்துக்கு மிகச் சிறப்பான இசையை தந்துள்ளார். அவர் நான் கேட்டதை சரியான அளவுகோலில் பின்னணி இசையாக தந்துள்ளார்.

அவருடன் விவாதித்து பின்னணி இசை பணியாற்றியது மறக்க முடியாதது. நாயகன் மாகாபா ஆனந்துக்கு அவர் நடித்த படங்களில் இது கண்டிப்பாக பெஸ்ட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் ஒரு ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்ல வேண்டும்.

நாம் சொல்வதை சரியாக கவனித்து அதிகம் சிரத்தை எடுத்து ஒரே டேக்கில் நடிப்பார். அவருடைய மனைவியிடம் நான் நடித்ததில் இது தான் மிகச் சிறந்த படம் என்று அவரே கூறியதாக என்னிடம் கூறியுள்ளார்.

படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் அதிகம் உழைத்துள்ளோம். அது படத்தில் கண்டிப்பாக தெரியும்.

படத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் நான் கேட்டதை கொடுத்தனர். அவர்களுடன் பணியாற்றியது மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த சுதந்திரம் எல்லாம் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியது என்றார் இயக்குனர் மார்ட்டின்.

‘மாணிக்’ என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் உள்ள மைய கதை என்னுடைய கதை என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தை பார்க்கும் போது அது மக்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் மார்ட்டின்.

ராக்கி படத்தில் வசந்த் ரவிக்கு வில்லனாக பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி “ராக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார்.

RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் “இயக்குனர் இமயம்” பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார்.

தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன்

இசை – டர்புகா சிவா

பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி

ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு – நாகூரான்

கலை – ராமு

சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

கதையை விட கார்த்திக்கை நம்பினேன்.. அடங்க மறு வெற்றி விழாவில் ஜெயம் ரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டிகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார்.

அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறனும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம் என்றார் வசனகர்த்தா விஜி.

இந்த படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் மிக ஆழமானவை, மிக முக்கியமானவை. நாட்டில் இன்று பேச வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை பேசியிருக்கிறது, அது மக்களை மிகச்சிறப்பாக சென்றடைந்திருக்கிறது என்றார் நடிகர் அழகம் பெருமாள்.

நான் எந்த படத்துக்கும் இதுவரை தியேட்டர் விசிட் போனதில்லை. இந்த படத்துக்கு இயக்குனரும், ஹீரோவும் அழைத்ததால் நானும் விசிட் போயிருந்தேன்.

மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தில் போலீஸிடம் அடி வாங்கினேன். ஒரு படத்தின் உண்மையான வெற்றி எங்கு தெரியும் என்றால் தியேட்டரில் தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.

இந்த கதையை இயக்குனர் கார்த்திக் 7 வருஷம் முன்பே என்னிடம் சொன்னார். அப்போது சொன்ன கதையை இந்த காலத்துக்கும் ஏற்றவாறு கொடுப்பது ஒரு கலை.

அதை சிறப்பாக செய்திருந்தார் கார்த்திக். ஒரு நல்ல படம் நல்ல நோக்கத்தோடு வந்தால் அதை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்பது இந்த படத்தின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்றார் படத்தொகுப்பாளர் ரூபன்.

முதல் படத்திலேயே என்னை வெற்றிப்பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்த படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

இந்த படம் ஒரு குழு முயற்சி. இந்த கதை மீது என்னை விட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம் தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார்.

என்னை வழிநடத்துகிறார். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம், அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குனர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள், இது தான் படத்தின் உண்மையான வெற்றி என்றார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.

தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது.

அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம்.

நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நாயகன் ஜெயம் ரவி.

இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

எஸ்.ஜானகி பாடிய ஒன் உசிரு காத்துல.. ; நெகிழும் பண்ணாடி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஸ்பிரியாகணேசன், ரேவதிபழநிவேலன் தயாரிப்பில் “பண்ணாடி” என்கிற படம் உருவாகிறது.

மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள “பண்ணாடி” படத்தின் இரண்டு பாடல்கள் எஸ்.ஜானகி அம்மா பாடியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் க.ரமேஸ்பிரியாகணேசன் இது பற்றிக் கூறும்போது,

அந்தப் பாடல் இப்போது லிரிகல் வீடியோவாக வெளியாகி ஹிட் களை அள்ளி வருகிறது.

அப்பாடல் “ஒன் உசிரு காத்துல காத்தாடியா பறக்குறேன். ஒன் முகத்த முகத்த வியந்து பார்க்குறேன்.

என் உசுர உனக்கு எழுதிக் கொடுக்குறேன்” என்று நாயகன் பாட நாயகியோ” நீ பேசும் பேச்சுல புதுசா நான் பொறக்குறேன், என் மனசு முழுக்க ஒன்னை நெனக்கிறேன் ,அந்த நெனப்பில் ஒறஞ்சி உறங்க மறுக்கிறேன்” என்று பாடுகிறாள்.

இதில் ஆண் குரலுக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் ராமலிங்கம் பாட பெண்குரலுக்கு எஸ்.ஜானகி பாடியுள்ளார். இப்பாடலை இயக்குநர் டி.ஆர்.பழனிவேலன் எழுதியுள்ளார்.

“இந்தப்படம் முழுக்க முழுக்க கிராமப்புற மக்கள் அவர்களது வாழ்வியலை அடிப்படைவாகக் கொண்டது.

நேர்மை ,உண்மை, பாசம், காதல், பண்பு கலாச்சாரம் ,விவசாயம், இவை அனைத்தும்”பண்ணாடி” குடும்பத்தில் வாழ்ந்த முன்னோடிகளின் வாழ்வியல்தான் கதை.

இப்போதைய சூழலில் அக்குடும்பத்தில் வந்த நாயகன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் எவ்வாறு நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தின் சிறப்பம்சமே எஸ்.ஜானகி அம்மா பாடல் தான் ஜானகி அம்மாவை சந்திக்க வாய்ப்பு சேகர் மூலமாக கிடைத்தது. இரண்டு பாடல்களும் மிக அற்புதமாக வந்துள்ளன.

“பண்ணாடி” படத்தில் ரிஷி ரித்விக், சுப்ரஜா, வேல ராமமூர்த்தி, ஆர் வி உதயகுமார். மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தை நானும் டைரக்டர் டி.ஆர்.பழநிவேலன் இருவரும் இணைந்து தயாரிக்கிறோம். படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிட உள்ளோம்.” என்கிறார்.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி டி.ஆர். பழனிவேலன் இயக்கி வருகிறார். பார்த்தசாரதி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் ராமலிங்கம் இசையமைத்துள்ளார்.

படத்தொகுப்பு – ஜான் ஆப்ரகாம்

சண்டைப்பயிற்சி – KNIFE நரேன்

தயாரிப்பு – க. ரமேஸ்பிரியாகணேசன், ரேவதி பழநிவேலன்.

More Articles
Follows