தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.,
புதுமுகம் அர்ஜுமன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
அர்ஜுமன் நடிகர் விக்ரமின் உடன் பிறந்த சகோதரி அனிதாவின் மகன் ஆவார்.
இந்த ஜோடியுடன் பிக்பாஸ் ஜுலி, அனித்ரா, ரித்திகா சரண், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், கதிர், KPY யோகி என பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அர்ஜுமனின் பிறந்தநாளை முன்னிட்டு PUBG படத்தில் இவரது 5 விதமான தோற்றங்களை அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதில் ஒன்று பெண் வேடம் என தெரிய வந்துள்ளது.
கந்தசாமி படத்தில் நடிகர் விக்ரம் பெண் வேடம் ஏற்று நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
