ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்; தெறிக்க விடுவாரா அர்ஜெய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழனி மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகர் அர்ஜெய்.

இவர் வில்லனாக நடித்துள்ள பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ ஆகிய இரண்டு படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஆக்ஷன் த்ரில்லரான பண்டிகையில் கிருஷ்ணா மற்றும் ஆனந்தியும், அரசியல்-குடும்ப படமான திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியும் நடித்துள்ளனர்.

இது குறித்து அர்ஜெய் பேசுகையில்…

”நடிப்பதிற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன்.

எனது பெயர் ‘அர்ஜெய்’ என்பதற்கு குறிக்கோள், சமாதானம் என்று பொருள். எனது பெயரின் அர்த்தங்களே எனக்கு முன்னேற்றத்தியும் பொறுமையும் தருவதாக நம்புகிறேன்.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு ‘எமன்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன்.

அதன் பிறகு ‘தெறி’ படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.

திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகை ஒரு சட்டவிரோத நிலத்தடி சண்டைகள் பற்றிய படம் என்பதால், ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராக நடித்துள்ளேன்.

பண்டிகையின் இயக்குனர் பெரோஸ் அவர்களின் தேவைக்கேற்ப இணங்க ‘ Mixed Martial Arts’ பயின்றேன்.இப்படத்திற்காக அன்பு மற்றும் அறிவு மாஸ்டரின் சண்டை காட்சியமைப்பு அற்புதமாக வந்துள்ளது.

ஹீரோ கிருஷ்ணா அவர்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் ஒத்துழைப்பும் மிக பெரியது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன்.

இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்கள் செய்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசை படுகிறேன்.

எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். நான் கெட்டவனாக நடித்திருந்தாலும், எனது வாழ்வில் ஊக்கத்திற்கு ‘திரி’யும் , கொண்டாடுவதற்கு ‘பண்டிகை’யும் மிக அவசியம்.

இவ்விரண்டு படங்களிலும் கிருஷ்ணா மற்றும் அஸ்வினுக்கு வில்லனாக நடித்திருந்தாலும் , நிஜ வாழ்வில் அவர்கள் இருவரும் தான் என்னை கிண்டல் செய்து விளையாடுவார்கள்.

இருவரும் எனக்கு அவ்வுளவு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். என்றார் அர்ஜெய்.

அர்ஜெயின் இரண்டு படங்களும் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.

Arjai starring Pandigai and Thiri releasing on 14th July 2017

பாவனா கடத்தலில் கைதான திலீபுக்கு கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாவனாவின் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் சில தினங்களுக்கு முன் கைதானார் நடிகர் திலீப்.

அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இவர் மீது புதிய குற்றச்சாட்டாக கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கலாபவன்மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் பேசியதாவது…

தனது சகோதரர் மரணம் தொடர்பான விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், நடிகர் திலீபுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலாபவன்மணி மரணத்தில் திலீபுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஒரு பெண் தொலைபேசியில் தெரிவித்ததாக இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா தெரிவித்துள்ளார்.

எனவே, கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Bhavana Kidnap case arrested Dileep in connection with Kalabhavan Manis death

விவேகம் படத்தின் 3வது பாடல் சீக்ரெட்டை அவிழ்த்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கி, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்வைவா மற்றும் தல விடுதலை ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகிவிட்டன.

இவை இரண்டும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், 3வது பாடல் எப்படியிருக்கும் என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் 3வது பாடலானது கர்நாடிக் மியூசிக் போல நல்ல இதமான ராகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இதை அனிருத்தே தெரிவித்து இருக்கிறார்.

மேலும், விவேகம் படத்தில் அஜித் கலக்கி இருக்கிறார்.

படத்தை பார்க்கும் ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள்.

இயக்குனர் முழு சுதந்திரம் கொடுத்துவிட்டதால்,  தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Anirudh revealed the secrets of Vivegam 3rd Song

லட்சுமி ராமகிருஷ்ணனின் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையாக பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

‘அம்மணி’ படத்தை இயக்கியத்தை தொடர்ந்து தற்போது அடுத்தபடத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த ‘இந்தி மீடியம்’ என்ற படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கிறாராம்.

Lakshmy Ramakrishnan teamsup with Aishwarya Rajesh for Hindi Medium Remake

விஜய்யுடன் செல்ஃபி எடுத்ததால் நாசர் மகன் செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் நாசரின் மகன் ஃபைசல் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அப்போது விஜய் நடித்த எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்ற பாடலை கேட்டு, பைசல் தனக்குள்ளே தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக நாசர் பேட்டிகளில் தெரிவித்து இருந்தார்.

இதனிடையில், நாசர் வீட்டில் பைசலை சந்தித்து விஜய் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் என்பதை பார்த்தோம்.

எனவே தனது காரின் பின்புறத்தில் மெர்சல் படத்தின் பெயர் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளாராம் பைசல்.

Nassar son Faizal pasted Mersal Vijay sticker in his car

சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு முப்பெரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளில் வெளியிட உள்ளனர்.

இத்துடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ் விருந்தை ரசிகர்களுக்கு அளிக்கப் போவதாக இப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு 3வது விருந்தாக சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக சூர்யா படம் திரையிடப்பட உள்ளதாம்.

அதன் முதற்கட்டமாக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ஜீலை 22ஆம் தேதி காலை 11மணிக்கு சிங்கம்3 படம் திரையிட உள்ளனர்.

More Articles
Follows