தந்தையின் ஆசையை நிறைவேற்ற *அரளி* எடுத்த மகன் சுப்பாராஜு

தந்தையின் ஆசையை நிறைவேற்ற *அரளி* எடுத்த மகன் சுப்பாராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ARALI An unconventional film that wins phenomenal acclaims from celebritiesகதைதான் எப்போதும் ராஜா என தமிழ் சினிமாவில் பலமுறை நிரூபணமாகி இருக்கிறது. அரளி படமும் அந்தப்பட்டியலில் இடம் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது.

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு நகர்கிறது அரளி.

சினிமாவில் எப்போதும் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தைதான், கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார் ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜோ சற்று வித்தியாசமானவர் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக மதுசூதனும், நாயகியாக மஞ்சுளாவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை அண்ணாமலை மற்றும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார்.

ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு எம்.எஸ்.ஜான் மற்றும் அனில் முத்துக்குமார் இசையமைத்துள்ளார். விசாகன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

படம் பழிவாங்கும் த்ரில்லராக உருவாகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த ராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறும்போது,

“எப்போதுமே நான் இப்படிப்பட்ட படங்களை பார்க்கும்போது பேப்பரும் பேணவும் கையில் வைத்துக்கொண்டு அதில் உள்ள குறைநிறைகளை சொல்வதற்காக அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆனால் அரளி படம் பார்த்தபோது என்னால் கடைசிவரை குறிப்பெடுக்க முடியவில்லை. காரணம் படம் அவ்வளவு வேகத்தில் செல்கிறது” என்றார்.

நடிகர் நாசர் படத்தை பற்றி சிலாகித்து கூறியதாவது…

“இந்தப்படத்தின் மையக்கதை இதுவரை தமிழ்சினிமாவில் பார்த்திராத ஒன்று என சொல்லலாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் மைய கதாபாத்திரமாக குழந்தைகள் நல காப்பாளராக நடித்துள்ள அருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

இடைவேளைக்குப்பின் கதை எப்படி போகும் என்பதை அனுமானிக்கவே முடியவில்லை” என்றார்.

நடிகர் ராதாரவி படத்தை பற்றி பாராட்டி கூறும்போது,

“திருக்குறளில் இரண்டு அடியில் விஷயத்தை சுருக்கமாக சொல்வது போல இந்தப்படத்தில் கதையை சொல்லியிருக்கிறார்கள்.

கதை நம்மை கலங்க வைக்குது…மது நன்றாக நடித்துள்ளார். வயதான கேரக்டரில் நடித்துள்ளவரின் நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்.. என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகை காப்பாற்றவேண்டும் என்றால் இதுமாதிரி படங்கள் வெளிவர்றதுக்கு நாம துணையா நிக்கணும்” என்கிறார்.

இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறும்போது,

“அரளிங்கிற டைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.. பின்னணியில் ஒரு வலுவான கதையை எடுத்துக்கொண்டு அதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனரும் நடிகருமான சந்தான பராதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’ அதாவது ஆன் விபச்சாரம் என்கிற புது விஷயத்தை கூறியுள்ளார்கள்.. நம் கலாச்சாரத்துக்கு புதுசு என்றாலும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படி இதில் சிக்கி மீள்கிறான் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்க” என பாராட்டியுள்ளார்.

நடிகர் கரிகாலன் கூறும்போது, “மகனுக்காக படம் எடுக்க சினிமாவுக்குள் வரும் அப்பாக்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம் எடுக்கவந்து, அவரையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் என்பது தமிழ்சினிமாவுக்கு புதிய முயற்சி” என்றார்.

நடிகர் அழகு கூறும்போது,
“பொது ஒரு படத்தை பார்க்கும்போது க்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான் விறுவிறுப்பு கூடும்.

ஆனா இந்தப்படத்தில் இடைவேளையில் இருந்தே நம்மளை அப்படியே தூக்கிட்டு போகுது” என பாராட்டியுள்ளார்.

ARALI  An unconventional film that wins phenomenal acclaims from celebrities 

 

 

https://www.youtube.com/watch?v=evGta4lDBt8&feature=youtu.be

https://www.youtube.com/watch?v=5X8KxNnt5fA&feature=youtu.be

அக்‌ஷய்குமார் படத்துடன் ரஜினியின் 2.0 பட டீசரை வெளியிட திட்டம்

அக்‌ஷய்குமார் படத்துடன் ரஜினியின் 2.0 பட டீசரை வெளியிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 Point 0 teaser release on 15th August along with Gold movieலைகா தயாரிப்பில் ஷங்கர் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள 3டி படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வருகிற நவம்பர் 29ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ளது.

இதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் லீக்கானது.

எனவே புதிய டீசரை உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15-ந்தேதி 2.0 படத்தின் டீசர் வெளியிட இருக்கிறார்களாம்.

அதே நாளில்தான் அக்சய்குமார் நடித்துள்ள கோல்டு (ஹிந்திப்படமும்) ரிலீஸாகிறது.

எனவே கோல்டு படத்துடன் 2.0 ஹிந்தி டீசரை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

2 Point 0 teaser release on 15th August along with Gold movie

akshay kumar gold movie

மீண்டும் காமெடி நாயகன்களுக்கு ஜோடியாகும் திஷா பாண்டே

மீண்டும் காமெடி நாயகன்களுக்கு ஜோடியாகும் திஷா பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Disha Pandey to romance with Jeeva in Kombuசிவா நடித்த தமிழ்ப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திஷா பாண்டே.

அதன்பின்னர் மயங்கினேன் தயங்கினேன், கீரிப்புள்ள சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அண்மையில் வெளியான தமிழ்ப்படம் 2வில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இப்போது காமெடி ஹீரோ லொள்ளுசபா ஜீவாவுடன் கொம்பு படத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, காயத்ரி, அஷ்மிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவ்குரு இசை அமைக்கிறார், சுதீப் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்ராஹிம் இயக்குகிறார் ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:

இது ஒரு காமெடி திகில் படம். வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹீரோவுக்கான தகுதி அனைத்தும் உடையவர் ஜீவா. அவரை சரியாக இதில் பயன்படுத்தியிருக்கிறோம்.

திஷா பாண்டே அழகும், திறமையும் இருந்தும் அதை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. அதை இந்த கொம்பு படத்தில் அமைத்து கொடுத்திருக்கிறோம்” என்றார்.

Disha Pandey to romance with Jeeva in Kombu

*காற்றின் மொழி* ஷூட்டிங்கை முடித்துவிட்டு அன்பளிப்பு வழங்கிய ஜோதிகா

*காற்றின் மொழி* ஷூட்டிங்கை முடித்துவிட்டு அன்பளிப்பு வழங்கிய ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaatrin mozhiகாற்றின் மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யுலில் முடித்தார் நாயகி ஜோதிகா.

ஜூன் 4ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஜூலை 25 ஆம் தேதியோடு தன்னுடைய பகுதி படப்பிடிப்பை முடித்துக்கொண்டார் ஜோதிகா.

தும்ஹாரி சுலு என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி.

ஹிந்தியில் தேசிய விருது பெற்ற வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார்.

ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ மொழி “ திரைப்படத்தின் இயக்குனர் ராதாமோகன் தமிழுக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா , விதார்த் , லட்சுமி மஞ்சு , மனோபாலா , குமரவேல் , உமா பத்மநாபன் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று படக்குழுவினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் எல்லோருக்கும் பட்டு சேலை மற்றும் வேஷ்டியை பரிசாக வழங்கிவிட்டு எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சிறப்பாக செயல்பட்ட இயக்குனர் குழுவுக்கு ஸ்பெஷல் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் ஜோதிகா.

பரிசுகளை பெற்ற படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி.

கடைசி நாள் படப்பிடிப்பன்று கேக் வெட்டும் போது நாயகி ஜோதிகா இதுவரை நான் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனங்களில் இதுவும் சிறந்த யூனிட் .

மீண்டும் இயக்குனர் ராதா மோகன் யூனிட்டோடு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை இப்படம் தந்துள்ளது. மிகச்சிறந்த கதை , கதாபாத்திரம் என்று அனைத்தும் இப்படத்தில் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளது சந்தோசம்.

பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை தரும் படமாக இது இருக்கும். அந்த அளவுக்கு இப்படத்தில் பெண்களை உயர்வாக காட்டியுள்ளார்கள் என்றார்.

ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தந்த ஜோதிகாவுக்கு தயாரிப்பாளர் தனஞ்சயனும் , இயக்குனர் ராதாமோகனும் நன்றி கூறினார்கள்.
மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடைபெறும்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்றது.

படத்தை ஆன் லைன் முறையில் எடிட் செய்ததால் உடனுக்குடன் படம் தயாராகி தற்போது டப்பிங்க்கு தயாராக உள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் டப்பிங் துவங்கும்.

அதே போல் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வருகிற செப்டெம்பர் மத்தியில் சென்சார் செய்யப்பட்டு அக்டோபர் மாதம் பூஜை விடுமுறைக்கு வெளியாகும் என்கிறது படக்குழு.

மலையாள நடிகை ஸ்ரீதா சிவதாஸ் உடன் சந்தானம் டூயட்

மலையாள நடிகை ஸ்ரீதா சிவதாஸ் உடன் சந்தானம் டூயட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Actress Shritha Sivadas to romance with Santhanam for Dhillukku Dhuddu 2சந்தானம் நாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் பேய் ஹிட்டானது.

எனவே அதன் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை டைரக்டு செய்த ராம்பாலாவே இந்த பாகத்தையும் இயக்கி செய்கிறார்.

தில்லுக்கு துட்டு-2 படத்தை பற்றி டைரக்டர் ராம்பாலா :-

இந்த பாகம் ஜாலியான படைப்பாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன.

இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.

மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதா சிவதாஸ்தான் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம்.

மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Kerala Actress Shritha Sivadas to romance with Santhanam for Dhillukku Dhuddu 2

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same timeவிஜய் நடித்த மெர்சல், தற்போது நடித்து வரும் சர்கார் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர். ரஹ்மான் தான் இசை.

இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற/பெறும் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

மேலும் ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறார்.

இதை அவரே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறாராம்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா தயாரித்த 36 வயதினிலே படம் தனக்கு திருப்புமுனையாக அமைந்த்து. தற்போது முதன்முறையாக சூர்யா படத்திற்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளதாக விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same time

Vivek Lyricist‏ @Lyricist_Vivek

Great to b penning for d Inspiring @Suriya_offl Sir for the 1st time.
Part of #Suriya38 2D s 36V gave me my 1st big break. Its always exciting 2 associate with @2D_ENTPVTLTD @gvprakash bro has given me a lovely tune.
Tks 2 him n #Sudha mam for dis movie. Wish She achieves Big

More Articles
Follows