எமிஜாக்சனைத் தொடர்ந்து வெளிநாட்டு நடிகை நடிக்கும் ‘அரபு தாக்கு’

எமிஜாக்சனைத் தொடர்ந்து வெளிநாட்டு நடிகை நடிக்கும் ‘அரபு தாக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dubai heroஅரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு, அரபு தாக்கு என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே, தான் இயக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரான்ஸிஸ்.

அப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் கூறியதாவது, “துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது.

துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்…?

அரபு நாட்டுப் பெண்களை கண்கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்? இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா என்பதே கதையின் மையக்கரு.

தமிழர்களேயில்லாத ஊரில் தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமரகாவியம் தான் இந்த அரபு தாக்கு என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

இத்துடன், வேலைத் தேடி துபாய்க்கு செல்பவர்கள், அங்கு படும் துயரங்களையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம்.” என்றார்.

மேலும் அவர், “அதிதி படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற அரபு நடிகை ஒருவரை கதையின் நாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.

படத்தில் தம்பி ராமையா வித்தியாசமான காமெடி கேரக்டரிலும், ரவிமரியா ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள். படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கவிருக்கிறோம்.

துபாயின் நவீன அடையாளமான புர்ஜ் கலிபாவை வித்தியாசமான கோணத்திலும், உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கவிருக்கிறோம்.

துபாயில் மட்டுமில்லாமல் ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். ஒரு சில காட்சிகளை தமிழ்நாட்டிலும் படமாக்க எண்ணியிருக்கிறோம்.

யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். காமெடி, ஆக்சன், லவ், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது.” என்று கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

Arabian actress to play a lead role in Arabu Thakku

arabu thakku

‘நன்றி தலைவா…’ ரஜினி வாழ்த்துக்கு சச்சின் ரியாக்சன்

‘நன்றி தலைவா…’ ரஜினி வாழ்த்துக்கு சச்சின் ரியாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Opening ceremony of ISL2015ரஜினிகாந்தை கடவுளாக நினைக்கும் அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அதுபோல் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் என்று அழைக்கும் ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சச்சின் நடித்துள்ள ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ படத்தின் ட்ரைலர் வெளியானது. அதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு நன்றி தலைவா என சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற இப்படத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Rajinikanth wishes Sachin Tendulkar for biopic Sachin A Billion Dreams

Dear @sachin_rt , my best wishes for the success of ‘Sachin … a billion dreams’. God bless.
— Rajinikanth (@superstarrajini) April 18, 2017

Thank you Thalaiva. Hope you enjoy this in Tamil. @superstarrajini #TamilTrailer https://t.co/eeUpqIA8mW https://t.co/x75DK1LpmJ
— sachin tendulkar (@sachin_rt) April 18, 2017

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா-விக்ரம்… யாருடைய டீசர் செம ஹிட்டு.?

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா-விக்ரம்… யாருடைய டீசர் செம ஹிட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Which Kollywood Hero movie got highest Hits and Likesஒரு டீசர் ரிலீஸ் ஆகிறதென்றால், ஒரு மணி நேரத்தில் எவ்வளவு ஹிட்ஸ், எவ்வளவு லைக்ஸ் என் கணக்கு பார்ப்பதே தற்போது வாடிக்கையாகி விட்டது.

அதுவும் டாப் ஹீரோக்களின் படம் என்றால், இந்த எண்ணிக்கை பேச்சு இணையங்களில் பரவலாக பேசப்படும்.

எனவே, ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் பைரவா, அஜித்தின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3, விக்ரமின் ஐ ஆகிய படங்களின் ஹிட்ஸ் லைக்ஸ் படைத்த சாதனைகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.

அதிக லைக்ஸ் பெற்ற டீசர்

1. கபாலி- 463.2K
2. தெறி- 309.1k
3. பைரவா- 272.1K
4. வேதாளம்- 149.9K
5. சிங்கம் 3- 125K

அதிக ஹிட்ஸ் பெற்ற டீசர்

1. கபாலி- 32.9 மில்லியன்
2. பைரவா- 14.9 மில்லியன்
3. சிங்கம் 3- 11.89 மில்லியன்
4. ஐ- 11.39 மில்லியன்
5. தெறி- 11.2 மில்லியன்

Which Kollywood Hero movie got highest Hits and Likes

பாகுபலி 2-இல் பிரபாஸுக்கு மூன்று வேடம்.?

பாகுபலி 2-இல் பிரபாஸுக்கு மூன்று வேடம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas character in Baahubali 2 updatesஇந்த வருட கோடை விடுமுறையை எப்படி எதிர்பார்க்கிறோமோ? அதை விட அதிகமான எதிர்பார்ப்பு ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்திற்கு எழுந்துள்ளது.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் U/A சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து, தற்போது இப்படக்குழுவினர் கேரளாவில் புரோமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இப்படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் மூன்று வேடம் என கூறப்படுகிறது.

இது உண்மையா? என்ற விடை தெரிய ஏப்ரல் 28 வரை காத்திருக்கவேண்டியதுதான் போல.

Prabhas character in Baahubali 2 updates

சுரேஷ் காமாட்சியின் “மிக மிக அவசரம்” பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முருகதாஸ்

சுரேஷ் காமாட்சியின் “மிக மிக அவசரம்” பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri priyankaசமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும்.

சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல. இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மிக மிக அவசரம், இந்தப் படம் பெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை மிக மிக நுணுக்கமாகச் சொல்லும் படம். படத்தின் டீசர் பார்த்த திரையுலகினர், வியந்து போய், ‘சார் உங்களிடமிருந்து இப்படியொரு உணர்வுப் பூர்மான படத்தை எதிர்ப்பார்க்கவில்லை’ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டீசர் மற்றும் ட்ரைலரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் 19-ம் தேதி (புதன்கிழமை) வெளியாகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சுரேஷ் காமாட்சியை ஒரு இயக்குநராக முறைப்படி அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

“எனது இயக்கத்தில் வரும் முதல் படம் “மிக மிக அவசரம்”. அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறேன்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

Ace director AR Murugadass is going to release the first look of Suresh Kamatchi’s debut directorial movie Miga Miga Avasaram on April 19th at his Twitter pager.

miga miga avasaram first look

ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் மம்மூட்டி

ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini mamootyமலையாள சினிமாவில் பல படங்களுக்கு தேசிய விருதை பெற்றவர் நடிகர் மம்மூட்டி.

தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார் இவர்.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணைந்த தளபதி படம் இவர்களது ரசிகர்களால் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் ரஜினிகாந்தை இயக்குவதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு என தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பூதக்கண்ணாடி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவும், அதில் ரஜினியை நடிக்க வைக்கவும் இவர் விரும்பியுள்ளார்.

இது தொடர்பாக ரஜினியிடம் பேசியும், ரஜினி ஒன்றும் சொல்லவில்லையாம்.

எனவே, ரஜினியை வற்புறுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் மம்மூட்டி.

Mammootty wish to direct Rajini for Bhoothakkannadi  remake

More Articles
Follows