ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி அறிவிப்பை 10000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெளியிட்டனர்.!

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி அறிவிப்பை 10000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெளியிட்டனர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக அரங்கில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரது இசைக்கென்று உலகெங்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

இந்த நிலையில் மிகப்பிரமாண்டமான இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார் ரஹ்மான்.

7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துகிறது.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation chairman Dato Mohamed Yusoff அவர்களே 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிஃகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும்.

இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.

இரு மொழி நாயகர்கள் கூட்டணியில் மஹிந்திரா பிக்சர்ஸ் மகத்தான ஆரம்பம்

இரு மொழி நாயகர்கள் கூட்டணியில் மஹிந்திரா பிக்சர்ஸ் மகத்தான ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது.

இந்த நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.

படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது…

‘வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்’ என்றார்.

இதுகுறித்து சாய் கார்த்திக் கூறியதாவது..

‘புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன.

புதிய இயக்குனர் சின்னாவை பல OTT நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசைக்கு ஏற்ப இந்தப் படத்தை பெரிய படமாக உருவாக்குகிறோம்.

அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்’ என்றார்.

Mahindra pictures

யார் எதிரின்னே தெரியல.; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற பாக்யராஜ் பேச்சு

யார் எதிரின்னே தெரியல.; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக பதவியேற்ற பாக்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இந்த தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செப்.14ல் நடைபெற்றது.

நிர்வாகிகள் உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்ட இவ்விழாவினில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும் இயக்குனருமான கே. பாக்கியராஜ் பதவி ஏற்று கொண்டார்.

இவ்விழாவினில் தமிழ் திரைப்பட பிரபலங்கள், இயக்குநர் சங்க உறுப்பினர்கள், பெப்சி உறுப்பினர்கள் பலர் கலந்து வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.

தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட இயக்குநர் கே பாக்யராஜ் பேசியதாவது…

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெற்றி

இந்த தேர்தல் மிக முக்கியமானது இதுவரை நடந்தது போராட்டம் இல்லை இனிமேல் தான் போராட்டம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாவது எதிரி யாரென்று தெரியும் ஆனால் இப்போது யாரெல்லாம் எதிரி என்பதே தெரியவில்லை.

இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எனக்கு கிடைக்கும் பாராட்டு எதிர் அணியினருக்கும் உரித்தானது. சங்கம் சிறக்க அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன்.

அளவோட பேசுபவர்கள் உலகம் பாராட்டும் அதனால் அளவோடு பேசுகிறேன். சாமி என்பது உனக்குள்ளே இருக்கும் மனசாட்சி தான் சாமி, அந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள் தான். கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்களது கடமை, எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது எங்களது உரிமையை கேட்போம்.

நான் பெரிதாக எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை.. இருப்பினும் என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். இனி அவர்களுக்காக பாடுபடுவேன்.

எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணி தான். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன் என்றார்.

2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhagyaraj

ஜவானை சந்தித்த ஜாம்பவான் ரஜினிகாந்த்.; ஷாக்கான ஷாரூக்.!

ஜவானை சந்தித்த ஜாம்பவான் ரஜினிகாந்த்.; ஷாக்கான ஷாரூக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் சூட்டிங் ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

அதே ஸ்டுடியோவில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ பட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

அட்லி இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜவான்’ ஸ்பாட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியை கண்டதும் ஷாக்கான ஷாருக்கான் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார்.

அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஷாருக்கின் ரா ஒன் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல ரஜினியை தலைவா என வாழ்த்தி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் ஆட்டம் போட்டவர் ஷாரூக் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rajinikanth and Sharukhan met at shooting spot

நாம எல்லோரும் ‘விக்ரம்’ படம் பார்த்திருப்போம்.; ஒருத்தருக்கு மட்டும் உலக சாதனை விருது ஏன்.?

நாம எல்லோரும் ‘விக்ரம்’ படம் பார்த்திருப்போம்.; ஒருத்தருக்கு மட்டும் உலக சாதனை விருது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’.

இந்த படம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி ரிலீசாகி மாபெரும் சாதனை படைத்தது.

உலகளவில் ரூ.400 கோடியை இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்தப் படத்தை பார்த்த கமல் ரசிகர் உதயபாரதி என்பவருக்கு உலக சாதனையாளர் விருது கிடைத்துள்ளது.

விக்ரம்

இவர் விக்ரம் படத்தை திரையரங்குகளில் 50 முறை பார்த்திருக்கிறார்.

இதனையடுத்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.

இதனையடுத்து உதய பாரதிக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விக்ரம்

படம் ரிலீசான முதல் நாள் முதல் அவர் பார்த்த அனைத்து டிக்கெட்டுகளையும் சேமித்து வைத்து புகைப்படம் எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விக்ரம்

Created WORLD RECORD by Watching VIKRAM more than 50 TIMES. Thanks a lot for ‘Lincoln Book of Records’ for Honouring me❤?My One & only Relaxation is Ulaganaayagan ? @ikamalhaasan @RKFI @Udhaystalin @KamalHaasanTeam #VikramRoaringSuccess #VikramAllTimeRecord #Vikram100Days https://t.co/LCutu8sAsO

விக்ரம்

மகேஷ்பாபு – பூஜா ஹெக்டே இணையும் ‘SSMB 28’ படத்தின் சூப்பர் அப்டேட்

மகேஷ்பாபு – பூஜா ஹெக்டே இணையும் ‘SSMB 28’ படத்தின் சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் நடிக்கும் படத்திற்கு டைட்டில் வைப்பதற்கு முன்பாக அந்த நடிகர்களின் படத்தின் எண்ணிக்கையை சேர்த்து சொல்வது வழக்கம்.

தற்போது இது டிரெண்டாக உள்ளது.

(ஆனால் ரஜினி கமல் உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் படத்தின் டைட்டில் அறிவித்துவிட்டே அவர்களின் ஷூட்டிங்கை தொடங்குகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 28 வது பட தகவல்களை இப்போது பார்க்கலாம்.

SSMB 28 என்ற படத்தை த்ரீ விக்ரம் சீனிவாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ராதாகிருஷ்ணன் என்பவர் தயாரிக்க தமன் இசையமைக்க வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு என்ற இரட்டையர்கள் இணைந்துள்ளனர்.

இந்த தகவலை அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த 2023 ஏப்ரல் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Mahesh Babu – Pooja Hegde starring ‘SSMB 28’ movie update

More Articles
Follows