ரஜினிக்கு ஏஆர் முருகதாஸ் எழுதிய கதையில்தான் விஜய் நடிக்கிறாரா.?

AR Murugadoss Vijay and Rajini Karthik Subbaraj movie story updatesகபாலி படத்தை முடித்து விட்டு மீண்டும் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடித்தார் ரஜினிகாந்த்.

இதனிடையில் பல இயக்குனர்களிடம் கதை கேட்டாராம் ரஜினி.

வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், ஏஆர். முருகதாஸ், அட்லி ஆகியோரிடம் கதை கேட்ட ரஜினி, கார்த்திக் சுப்பராஜ்க்கு முதலில் ஓகே சொல்லிவிட்டார்.

வெற்றிமாறன் கதையில் நடிக்க விருப்பம் இருந்தாலும், அதை வெயிட்டிங்கில் வைக்க சொல்லிவிட்டாராம்.

அதுபோல் முருகதாஸ் சொன்ன கதை ரஜினியை ரொம்பவே கவர்ந்து விட்டதாம்.

டெஃபனேட்டா நாம சேர்ந்து வொர்க் பண்றோம்’ என்று நெகிழ்ச்சியோடு கூறியிருந்தாராம்.

ஆனால் அதற்குள் காலா, கார்த்திக் சுப்பராஜ் என்று தாவியிருக்கிறார்.

எனவே ரஜினிக்கு சொன்ன கதையில் விஜய்யை நடிக்க வைக்க தயாராகிவிட்டார் ஏஆர். முருகதாஸ் என கிசுகிசுப்படுகிறது.

அந்த ஆக்ஷன் கலந்த அரசியல் கதையில் தான் தற்போது தளபதி நடித்து வருகிறார்.

ரஜினி தற்போது டார்ஜிலிங்கில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த இரு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடக்கத்தக்கது.

AR Murugadoss Vijay and Rajini Karthik Subbaraj movie story updates

Overall Rating : Not available

Latest Post