‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

‘ஓ மை கடவுளே’ பட நடிகைக்கு வாய்ப்பளித்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadoss and Vani Bhojan team up for Web Seriesடிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

அப்பட வெற்றியால் தற்போது அவர் கைவசம் 5 படங்கள் உள்ளதாம்.

இந்த நிலையில் தற்போது வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார் வாணி போஜன்.

இந்த வெப் சீரிஸை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க அவரின் துணை இயக்குனர் இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

AR Murugadoss and Vani Bhojan team up for Web Series

மலையாளியை விட தமிழன் தாழ்ந்தவனா.? நானும் வைக்கிறேன் பாரு… – SR பிரபாகரன்

மலையாளியை விட தமிழன் தாழ்ந்தவனா.? நானும் வைக்கிறேன் பாரு… – SR பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director SR Prabhakaran slams Dulquer and advice to Prasannaஅனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.

தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.

இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் சுந்தர பாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபாகரன் கூறியுள்ளதாவது…
அன்பிற்குரிய துல்கர் சல்மான் & அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான #VaraneAvashyamund ” எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,

அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று.

உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!

“பிரபாகரன்” என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள் தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாக இருந்தால்- நாங்களும் “கேரளத்து காந்தி” என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட “மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்” பின் பெயரையும் “வக்கம் மௌலாவி” யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,

இத்துடன் நடிகர் பிரசன்னாவுக்கும் பிரபாகரன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் பிரசன்னா சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., “தலைவர்” பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்.., என தெரிவித்துள்ளார்.

Director SR Prabhakaran slams Dulquer and advice to Prasanna

மிடில் கிளாஸ் நிதி.; விஜய் தேவரகொண்டாவின் வித்தியாச கொரோனா நிதி

மிடில் கிளாஸ் நிதி.; விஜய் தேவரகொண்டாவின் வித்தியாச கொரோனா நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Devarakondas different Announcements on Corona Crisisதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.

இவர் கொரோனா நிவாரண நிதியாக வித்தியாசமான ஒரு விஷயத்தை அறிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணத்திற்காக 1.3 கோடி ருபாய் அளித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பயிர்ச்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி அளித்திருப்பதாக கூறினார் அவர்.

மேலும் இந்த கொரோனா பிரச்சனையை சமாளிக்க தான் பண ரீதியாக தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்ட அவர், தனது தயாரிப்பு நிறுவனத்தின் 30 பணியாளர்களுக்கு தொடர்ந்து சம்பளம் தர வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இவருடைய அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்டில் ஏழைகள், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஊருக்கு செல்ல முடியாத வெளியூர் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது..

விஜய் தேவரகொண்டா அறக்கட்டளையில் மொத்தம் 35 பேர் பணிபுரிகின்றனர். தற்போது என்னிடம் எந்த நிதியும் இல்லை. நான் இப்போது இரண்டு விஷயங்களை கையில் எடுத்துள்ளேன். உடனடி தேவைகள், எதிர்கால தேவைகள்.

ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு நான் ஒரு ரகசிய திட்டத்தை தொடங்கினேன். அதன் மூலம் 650 பேரை நேர்காணல் செய்து அதிலிருந்து 50 பேரை இறுதி செய்தோம்.

அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து அதிலிருந்து 2 பேரை ஏற்கெனவே தேர்வு செய்து விட்டோம். மீதமுள்ள 48 பேரும் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். வேலை வாய்ப்புக்காக ரூ. 1 கோடி வழங்குகிறேன்.

இன்னும் அதிக மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிடித்த துறையில் பயிற்சி வழங்கப்படும். வழங்கப்பட்ட மொத்த தொகையும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பயன்படும். ‘ரவுடி’ மற்றும் ‘கிங் ஆஃப் தி ஹில்’ குழுமங்களின் மூலமும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம்.

மக்களின் தற்போதைய உடனடி தேவைகளுக்காக ரூ.25 லட்சம் வழங்குகிறேன். ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள 2000 ஏழை குடும்பங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

உடனடி உதவி தேவைப்படுபவர்கள் எங்கள் thedeverakondafoundation.org இணையதளத்தை பார்க்கவும். அதில் அனைத்து தகவல்களும் உள்ளன.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் என்னுடைய படங்கள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. தற்போது நான் வேலையின்றி இருக்கிறேன். தேவையுள்ளவர்களுக்கு உதவுதற்காக என் நண்பர்களிடம் பணம் கேட்டிருக்கிறேன்.

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அவர்களுக்கு திரும்ப அந்த பணத்தை கொடுத்து விடுவேன்.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்

Vijay Devarakondas different Announcements on Corona Crisis

ஆன்லைனில் புதுப்படம் ரிலீஸ்; சூப்பர் ஐடியா தரும் மெர்சல் தயாரிப்பாளர்

ஆன்லைனில் புதுப்படம் ரிலீஸ்; சூப்பர் ஐடியா தரும் மெர்சல் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal Producer Muralis new idea for New movie release on OTTசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரிடையாக ஆன்லைனில் வெளியிட உள்ளனர்.

இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மனக்கசப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மெர்சல் பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்‌த் திரைப்படங்களை டிஜிட்டலில்‌ வெளியிடும்‌ முறைக்கு தயாரிப்பாளர்கள்‌ தள்ளப்பட்டுள்ளார்கள்‌ என்பதே நிதர்சனமான உண்மை.

கொரோனாவின்‌ கோரத் தாண்டவத்தில்‌ உலகமே சிக்கித் தவிக்கையில்‌, திரையரங்குகள்‌ மூடிக்கிடக்கும்‌ இந்தச் சூழ்நிலையில்,. தயாரிப்பாளர்கள்‌ தங்கள்‌ பணத்தை முதலீடு செய்து, படத்தைத் தயாரித்து, அதை வியாபாரம்‌ செய்ய முடியாமல்‌ தவிக்கும்‌போது. ஓடிடி (OTT) பிளாட்பார்ம்‌ என்பது காலத்தின்‌ கட்டாயம்‌ ஆகிறது.

பெரிய படங்களுக்குத் திரையரங்குகள்‌ எப்படி அதிகமாகக் கிடைக்கிறதோ அதேபோல்‌ டிஜிட்டலில்‌ வெளியிடப் பெரிய படங்களை மட்டும் தான்‌ அவுட்ரைட்‌ முறையில்‌ விற்க முடிகிறது.

ஆனால்‌, சிறு முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகளும்‌ கிடைப்பதில்லை. டிஜிட்டல்‌ மார்க்கெட்டிலும்‌ அவுட்ரைட்‌ முறையில்‌ விற்க முடிவதில்லை. இந்த நிலை மாறவேண்டும்‌.

நம்‌ சங்க உறுப்பினர்களுக்காகப் பேச வேண்டியவர்கள்‌ தங்கள்‌ பதவியை வைத்து தன்னுடைய படங்கள்‌, தன்னைச் சார்ந்தவர்களுடைய பெரிய, சிறிய, மிகச்சிறிய என எல்லா படங்களையும்‌ அவுட்‌ ரைட்டாக விற்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால்‌, ஏதாவது பிரச்சினை என்றால்‌ அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உதவி செய்ய, குரல்‌ கொடுக்க சிறு படத் தயாரிப்பாளர்கள்‌ தேவைப்படுகிறார்கள்.

அப்படிப் பட்டவர்கள்‌, இவர்கள்‌ படங்களை விற்றபோது கூடவே ஐந்து சிறு படத் தயாரிப்பாளர்களின்‌ படங்களையும்‌ விற்றுத் தர ஏற்பாடு செய்திருக்கலாம்‌. ஆனால், அப்படிச் செய்யவில்லை. இது என்ன நியாயம்‌… ? இதற்கு என்னதான்‌ முடிவு… ?

ஒரு சிலர்‌ குழுவாகச் சேர்ந்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வெளியிடும்‌ அறிக்கை, 1300 தயாரிப்பாளர்களுக்கும்‌ சாதகமாக அமைய வேண்டுமே தவிர, சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும்‌ ஏற்படுத்திவிடக் கூடாது. ஆகவே அனைத்துத் தரப்பினரையும்‌ கலந்து பேசி நாம்‌ ஒரே குரலாக ஒலித்திருக்க வேண்டும்‌.

அவசர கதியில்‌ சிறு படத் தயாரிப்பாளர்கள்‌, பெரிய படத் தயாரிப்பாளர்கள்‌ என அனைவரது கருத்தையும்‌ கேட்காமல்‌ ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துகளை அனைத்துத் தயாரிப்பாளர்களின்‌ கருத்தாக ஒலிப்பது தவறு. இப்போது எடுக்கப்படும்‌ முடிவு என்பது இனிவரும்‌ காலங்களில்‌ சிறிய படங்களை விற்பனை செய்வது என்பது சுலபமானதாக மாற வேண்டும்‌.

இந்த OTT வியாபாரத்தை வரைமுறைப்படுத்தி வியாபார ஒழுங்கைக் கொண்டு வர வேண்டும்‌. அதாவது எந்த ஒரு நிறுவனம்‌ டிஜிட்டல்‌ வெளியீட்டிற்காக, பெரிய பட்ஜெட்‌ படம்‌ ஒன்றை வாங்குகிறதோ அந்த நிறுவனம்‌ ஐந்து சிறு முதலீட்டுப் படங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும்‌.

அதனை அந்த பெரிய படத்தை விற்கும்‌ தயாரிப்பாளரும் உறுதி செய்ய வேண்டும்‌ என்று ஒரு வரைமுறையைக் கொண்டு வர வேண்டும்‌.

அதற்குப் பெரிய தயாரிப்பாளர்கள்‌ ஒத்துழைக்க வேண்டும்‌. இதனை நம்‌ சங்கத்தின்‌ மூலம்‌ நடைமுறைப்படுத்தக் கேட்டுக்கொள்ள வேண்டும்‌. இதற்கு நம்‌ தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒத்துழைப்பு அளித்தால்‌, வருடத்திற்கு 25 பெரிய படங்கள்‌ வியாபாரமானால்‌ 125 சிறிய படங்கள்‌ சிரமமில்லாமல்‌ வியாபாரமாகும்‌.

இது இப்போது மட்டுமல்லாமல்‌ வருங்காலத்திலும்‌ சிறிய படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெறச்செய்ய வழிவகுக்கும்‌.

எந்த ஒரு பிரச்சினையிலும்‌ பெரிய படத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே போராடும்‌ நாம்‌, சிறு படங்களின் தயாரிப்பாளர்களையும்‌ கருத்தில்‌ கொண்டு அவர்களும்‌ நன்மை அடையக்கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும்‌. பெரிய, சிறிய என்ற பாகுபாடு பாராமல்‌ டிஜிட்டல்‌ பிளாட்பாரத்தில்‌ வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியது காலத்தின்‌ கட்டாயம்‌ என்பதை உணர வேண்டிய தருணம்‌ இது. “நீங்களும்‌ வாழுங்கள்‌ சிறு படத்தயாரிப்பாளர்களையும்‌ வாழ விடுங்கள்‌”

இந்த நேரத்தில்‌ திரையரங்கு உரிமையாளர்களும்‌ தயாரிப்பாளர்களின்‌ சுமையைக் கருத்தில்‌ கொண்டு, தயாரிப்பாளர்களும்‌, திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும்‌ ஒன்று கூடி பேசி ஒரு சுமுகமான வியாபார சூழ்நிலை உருவாக ஒத்துழைக்க வேண்டும்‌.

மேலும், தயாரிப்பாளர்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கைகளில்‌ ஒன்றான இணைய டிக்கெட் முறையை அனைத்துத் திரையரங்குகளிலும்‌ அறிமுகப்படுத்தி வியாபாரத்தின்‌ வெளிப்படைத் தன்மையைத் திரையரங்கு உரிமையாளர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்”

இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

Mersal Producer Muralis new idea for New movie release on OTT

தெளிவான முடிவெடுக்க வலியுறுத்தி பால்கனி அரசுகள் மீது பாய்ந்த கமல்

தெளிவான முடிவெடுக்க வலியுறுத்தி பால்கனி அரசுகள் மீது பாய்ந்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal request Balcony Govts to take right decisionகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இந்திய அரசு.

இதனையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வையும் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கமாகப் பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பாதிக்கும் எதையும் செய்யக் கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன.

தொழில் முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்”

இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal request Balcony Govts to take right decision

நல்லோர் சிந்தனையை படிக்காதவர்களுக்கு அது தெரியாது.; சூடான ‘சூர்யா’

நல்லோர் சிந்தனையை படிக்காதவர்களுக்கு அது தெரியாது.; சூடான ‘சூர்யா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theatre Owners Association decides they wont release Suriya moviesகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் விழாவில் ஜோதிகா கலந்துக் கொண்டு பேசியபோது…

தஞ்சை பெரிய கோயிலை பார்த்திருக்கிறேன். அதை பரமாரிக்க பணம் கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசுகிறீர்கள். கோயில்களுக்கு செய்வது போல பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். என பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் கடுமையான எதிர்ப்பும் உருவானது.

இந்த விவகாரம் ஜோதிகாவோ அவரது கணவர் சூர்யாவோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.

ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம்.

தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள்.

முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன.

‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Humanity is beyond Religion Suriya comes out in Support of Jyothika

More Articles
Follows