இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:நடிகர் அப்புக்குட்டி கலகல பேச்சு!

இனி முன்னணி நடிகைகள் எனக்கு ஜோடியாக நடிப்பார்கள்:நடிகர் அப்புக்குட்டி கலகல பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Appu Kuttyகதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன், நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி,நடிகை ஸ்ரீ கல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த் , பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’ கதிரேசன் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகையில்,

“விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து மீம்ஸ்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் வாழ்க விவசாயி என்று ஏன் படமெடுக்கவேண்டும் என்று தோன்றியது என்றால்,நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.என்னுடைய தந்தையார் குள்ளமான உருவம் தான். ஆனால் பன்னிரண்டு அடிக்கு மேல் இருக்கும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு கம்பீரமாக நடப்பார். எங்கம்மா காளைமாட்டை பிடித்துக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து செல்வார்கள். எங்களுடைய தெருவில் உள்ள விவசாயிகள் இது போல் நடந்து செல்வது திருவிழா போல் இருக்கும். ஆறு மைல் தொலைவு நடந்து சென்று வயலில் வேலை செய்வார்கள். நான் அந்த கலப்பையைத் தூக்க முயன்றிருக்கிறேன். என்னால் முடியாது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. அதே போல்காளை மாட்டின் அருகே செல்லக்கூட முடியாது. ஆனால் என்னுடைய அம்மா அதனை வசப்படுத்தி வைத்திருந்தார். அதனால் என்னுடைய சிறியவயதில் ஹீரோ ஹீரோயினாக தெரிந்தவர்கள் விவசாயிகள் தான். அதனால் விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்கவேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய கிராமத்தில் விவசாயிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்த வீட்டிலுள்ள பெண் விவசாயியான அவரது மனைவி அந்த கலப்பையை சுமந்து செல்வதையும், விவசாயத்திற்கு உதவி புரிவதையும் பார்த்திருக்கிறேன். நமக்கு அத்தியாவசியமான உணவைத் தயாரிக்கும் விவசாயிகளைப் பற்றி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டு வந்தார்கள்.

நடிகர் அப்புக்குட்டியும், வசுந்தராவும். இதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். இந்த மருத நிலத்தின் படம், அனைவரின் மனதில் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில்,

“அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும் போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் நன்றாக இருக்கும். நீண்ட நாளிற்கு பிறகு அப்புக்குட்டி யதார்த்தமாக திரையில் தோன்றியிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டி நடிக்கும் போது, அவருக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். நடிகை வசுந்தரா சிறந்த நடிகைஎன்பதை பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்திருக்கிறார். முதல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைவது கடினம். இந்தப் படத்தின் இயக்குநருக்கு அது அமைந்திருக்கிறது. அதற்காகப் பாராட்டுகள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது படத்தின் டீஸர் மற்றும் இசையை பார்க்கும் போது உணர முடிகிறது. தற்போதைய சூழலில் ‘வாழ்க விவசாயி ‘ என்கிற டைட்டிலில் படம் வெளியாகியிருக்கிறது என்றால் இதைத் திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பவர்களின் கூட்டம் குறைவு தான். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

ஒரு தயாரிப்பாளர் என்பவர் இயக்குநருக்கு அப்பா அம்மாவிற்குச் சமம். ஏனெனில் அப்பா அம்மாவிற்குப் பிறகு ஒரு இயக்குநரை நம்பி பணத்தை முதலீடுசெய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். விவசாயத்தை மையமாகக்கொண்ட இந்தக் கதையையும், அப்புக்குட்டி போன்ற நடிகர்களையும் நம்பி படத்தைத் தயாரித்த இந்தத் தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தை வெற்றி பெறவைக்கவேண்டும் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் ‘லிப்ரா ‘ரவீந்திரன் சந்திரசேகரன் பேசுகையில்,“இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.

தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார். அவருக்கு வணிகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை பார்த்த பின்னர் தான் இந்த படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்டும் எனக்கு பிடித்திருக்கிறது.

இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்த படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் , இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.
வாழ்த்துகள்”என்றார்.

நடிகை வசுந்தரா பேசுகையில்,“ இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார், அதற்காகஇயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. ”என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

கடனை திருப்பி தராத கமல்..; ஞானவேல் ராஜா பகிரங்க புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavel Raja complaints against Kamalhaasanநடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்த படம் உத்தம வில்லன் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் இப்படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஞானவேல் ராஜாவிடம் இது தொடர்பாக தாங்கள் எதுவும் பேசவில்லை எனவும் லிங்குசாமியிடமே அப்போது அனுகியதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Producer Gnanavel Raja complaints against Kamalhaasan

என் பிணத்தை ரஜினி-கமல் எட்டி பாக்குறாங்க… நடிகை ரேகா வேதனை

என் பிணத்தை ரஜினி-கமல் எட்டி பாக்குறாங்க… நடிகை ரேகா வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Rekha emotional speech on 100 percent Kaadhal press meetஎம்.எம். சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்துள்ள படம் ‛100% காதல்’.

இப்படம் அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் படத்துடன் வெளியாகவுள்ளது.

இதில் ஜிவி. பிரகாஷின் அம்மாவாக நடிகை ரேகா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை ரேகா பேசியதாவது…

‛உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு, கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனு இருந்தால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என நடிகர் விஜய் சொன்னார்.

அதுபோல் தான் என் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கிறது.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு யூ-டியூப் தளத்தில் நான் இறந்து போய் விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

என்னை புதைத்து அருகில் ரஜினி, கமல் எட்டி பார்ப்பது போன்றும் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே எனக்கு பாடை கட்டி, கற்பூரம் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே பல முறை அவர் மரணமடைந்துவிட்டதாக செய்திகளை சிலர் வெளியிட்டனர்.

சினிமா பிரபலங்களான கே.ஆர்.விஜயா, மோகன் போன்றவர்களை இப்படி சாகடித்து, அதை யு-டியூப் மூலம் பரபரப்பை உண்டு பண்ணி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இது நன்றாகவா இருக்கிறது. இது போன்ற அதிகாரப்பூர்வமற்ற யு-டியூப் தளங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். என வேதனையுடன் பேசினார் ரேகா.

இறுதியில் நான் ஜம்முன்னு இருக்கேனா.. சொல்லுங்க.. நான் ஜம்முன்னு தானே இருக்கேன் என பேசி விடைபெற்றார்.

Actress Rekha emotional speech on 100 percent Kaadhal press meet

தீபாவளிக்கு விஜய்; பொங்கலுக்கு ரஜினி… மோத ரெடியான கார்த்தி

தீபாவளிக்கு விஜய்; பொங்கலுக்கு ரஜினி… மோத ரெடியான கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi movies clash with Darbar and Bigilலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.

இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் தான் விஜய் நடித்துள்ள பிகில் படமும் திரைக்கு வருகிறது.

இதனையடுத்து ஜீத்துஜோசப் இயக்கும் படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பு இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இதே நாளில் தான் ரஜினி நடித்துள்ள தர்பார் படமும் திரைக்கு வருகிறது.

தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

Actor Karthi movies clash with Darbar and Bigil

குட் டச் பேட் டச்-சை பாடமாக வைக்கனும்..; அரசுக்கு ஆர்.வி. உதயகுமார் வேண்டுகோள்

குட் டச் பேட் டச்-சை பாடமாக வைக்கனும்..; அரசுக்கு ஆர்.வி. உதயகுமார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar12 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாக்லெட் குறும்படம் படமல்ல பாடம் என்று செய்தி மற்றும் தகவல் தொடர்த்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் கவிதா தயாரித்திருக்கும் குறும்படம் சாக்லேட். இதில் நட்டி என்கிற நட்ராஜ், காயத்ரி,தேஜஸ்வினி, தீக்ஷளா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் லாவண்யா நான்சி இயக்கியிருக்கிறார். பாடல்களை மீரான் எழுத, பவதாரிணி பாடியிருக்கிறார். குறும்படம் ஒன்றிற்கு பவதாரிணி பின்னணி பாடியிருப்பது இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறும்படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது.

அவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு, விருகம்பாக்கம் தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் விருகை வி என் ரவி, விளாத்திகுளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், தயாரிப்பாளரும் கல்வியாளருமான ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சாய் தன்ஷிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான கவிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர்,“இந்த குறும்படத்தை நான் பார்த்துவிட்டேன்.

சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பின்னணியாக வைத்து பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது படமல்ல பாடமாக எடுத்துக கொள்ளவேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் இந்த குறும்படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.

படத்தில் நடித்த அந்த குழந்தையின் நடிப்பை நான் பாராட்டுகிறேன். இதனை உருவாக்கிய படக்குழுவினருக்கும், இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் சங்க நிர்வாகியும் இயக்குநருமான ஆர் வி உதயகுமார் பேசுகையில்,

“ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் வகையில்,ஆன்லைன் மூலம் மட்டும் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவேண்டும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக தமிழ் திரைப்பட துறையினர் அரசிற்கு நன்றி தெரிவித்துக கொண்டிருக்கிறார்கள். சாக்லேட் குறும்படம் படமல்ல. பாடம் என்று அமைச்சர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.

இந்த குறும்படம் பேசும் விசயமான குட் டச் பேட் டச்சை எல் கே ஜி, மற்றும் யூ கே ஜி குழந்தைகளுக்கான பாடதிட்டத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிகிறேன்.

அரசு இதில் ஆவணசெய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு பிறகு குழந்தைக்கு தெரிந்துவிடும். ஒரு பெண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால் அது பெண்களுக்கு மிகப்பெரும் பெருமையை அளிக்கும். ஒரு ஆண் குழந்தையை ஒழுக்கமாக வளர்த்தால்.. அது மனித சமுதாயத்திற்கே பெருமை. இந்த ஒழுக்கம் எங்கே விதைக்கப்படுகிறது?

பள்ளியில் தான் என்பதால் இதனை பாடமாக வைத்துவிட்டால் அனைத்து குழந்தைகளுக்கும் எங்கே தொட்டால் நல்லது என்பதும், எங்கே தொட்டால் கெட்டது என்பதும் தெரிந்துவிடும். இது போன்ற ஒரு குறும்படத்தை தயாரித்த கவிதா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகர் நட்ராஜ் பேசுகையில்,“ ஆண் பெண் என இருவருக்கும் பாலியல் பற்றிய புரிதல் தேவை. பெண்கள் பூப்பெய்திய பிறகு அவர்கள் வீட்டு பெரியவர்கள் சில விசயங்களில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

ஆனால் ஆண்களுக்கு இது போன்ற வழிகாட்டிகள் அமைவது கடினம். இயக்குநர் ஆர் வி உதயகுமார் வலியுறுத்தியதைப் போல் பாலியல் பற்றிய புரிதலை பள்ளியில் பாடமாக வைத்துவிட்டால் ஆண் குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும்.இந்த குறும்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள். ” என்றார்.

நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில்,

“பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து இது போன்ற சமூகத்திற்கு தேவையான குறும்படத்தை உருவாக்கியதற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குறும்படத்தின் தயாரிப்பாளர் கவிதா ஊடகவியலாளர் என்பதைக் கடந்து சிறந்த சமூக சேவகி, சமூக வலைதளத்தில் செல்ஃபியை பதிவிடுவதை விட சமூகத்திற்கு தேவையான விசயத்தை பதிவிடலாம் என்பதற்காக என்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் குட் டச் பேட் டக் குறித்து யூட்யூபில் பதிவிடப்பட்டிருந்த ஏராளமான வீடியோவில் பெற்றோர்கள் சொல்லிய சில வீடியோக்களை எடுத்து பதிவிட்டிருக்கிறேன்.

பொதுவாக தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் முழுமையாக கவனிப்பதில்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த குறும்படம் பெற்றோர்களையும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து சாக்லேட் குறும்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் கவிதா நன்றி தெரிவித்தார்.

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar

Good Touch and Bad Touch should be a lesson for kids says RV Udhayakumar

சிவகார்த்திகேயனின் குடும்ப படத்துடன் மோதும் போதை படம் ‘கோலா’

சிவகார்த்திகேயனின் குடும்ப படத்துடன் மோதும் போதை படம் ‘கோலா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kola movie clash with Sivakarthikeyans Namma veetu Pillaiபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

இப்படத்தில் சிவாவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் நாளை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. இத்துடன் போதை வகைகளை சொல்லும் கோலா என்ற படமும் வெளியாகிறது. அதன் விவரம் வருமாறு…

மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் “கோலா“.

மோத்தி.பா இயக்கியுள்ள இப்படத்தில் விக்கி ஆத்தியா, வைசாக் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக ஹரிணி நடித்துள்ளார்.

இவர்களுடன் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி மோத்தி.பா ஒரு பேட்டியில் கூறியதாவது:-

போதை தான் இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

அதில் பல வகை உண்டு பணக்கார போதை, அதிகார போதை, பெண் போதை, மது போதை, கடைசியாக புகழ் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ் போதைக்கு ஆசைப்படுகிறான்.

விளக்கின் வெளிச்சத்தை தேடிச்சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். இவ்வாறு அவர் கூறினார்.

ஒளிப்பதிவு – கமில் ஜே.அலெக்ஸ்; இசை – கண்மணி ராஜா; பின்னணி இசை – எஸ்.எம்.பிரஷாந்த்; பாடல்கள் – காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா; கலை – ராம்ஜி; எடிட்டிங் – தீபக்; நடனம் – ராதிகா; தயாரிப்பு மேற்பார்வை – லினா மோத்தி, எம்.எல்.பிஸ்மி; தயாரிப்பு – மோத்தி முகமது; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோத்தி.பா.

Kola movie clash with Sivakarthikeyans Namma veetu Pillai

kola movie poster

More Articles
Follows