ஜனவரி 2021ல் வீராட் கோலி-அனுஷ்கா ஷர்மா வீட்டில் 3வது நபர்

ஜனவரி 2021ல் வீராட் கோலி-அனுஷ்கா ஷர்மா வீட்டில் 3வது நபர்

virat kohli and anushka sharmaகிரிக்கெட் வீரர் வீராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது.

தற்போது தன் மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார்

இவர்களது குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வருவதை விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 2021-ல் அனுஷ்கா ஷர்மா குழந்தையை பிரசவிக்க இருப்பதாக வீராட் கோலி மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

இன்று (27 August) நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையிலும், திருநெல்வேலியில் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையிலும், நாகர்கோவிலில் திரு.சதீஷ்ராஜா அவர்கள் தலைமையிலும் சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் சார்பாக திரு. ஆதீஸ்வரன் தலைமையிலும் இன்று கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர்.

நாகர்கோவிலில் திரு.சதீஷ்ராஜா அவர்கள் தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் திரு.சதீஷ்ராஜா மதிய உணவும் வழங்கினார்.

தருமபுரி, கரூர் மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் மூலம் இரத்த தானம் வழங்கினர்.

கடலூர்,தருமபுரி மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் நற்பணி இயக்கம் சார்பாக ஆதரவற்றோருக்கு இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டன.

மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் நற்பணி இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன

நடிகர் சூரி அவர்களுடைய சகோதரர் திரு.லட்சுமணன் அவர்களுக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது

soori Stills

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மகளை மணந்தார் அதர்வா தம்பி ஆகாஷ்

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மகளை மணந்தார் அதர்வா தம்பி ஆகாஷ்

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ.

இவருக்கும் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆகாஷ் முரளி – சினேகா பிரிட்டோ திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்ததும் நண்பர்கள் & திரையுலகினர் என அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

atharvaa brother aakash marriage

முருகதாஸ்-அட்லி பார்முலாவில் மீண்டும் லோகேஷுடன் இணையும் விஜய்

முருகதாஸ்-அட்லி பார்முலாவில் மீண்டும் லோகேஷுடன் இணையும் விஜய்

lokesh kanagaraj vijayநடிகர் விஜய் நடித்து வெளியான கடந்த 8-10 படங்களை பார்த்தால் இயக்குனர் பெயர்களில் முருகதாஸ் மற்றும் அட்லி பெயரே அதிகளவில் இடம் பிடித்திருக்கும்.

இவர்கள் இருவருக்கும் மாறி மாறி பட வாய்ப்புகளை வழங்கி வந்தார் விஜய்.

தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கியிருந்தார்.

துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தளபதி 65 படத்தையும் முருகதாஸே இயக்கவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் முருகதாஸ் அட்லி பார்முலாவை போல மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜீக்கு வாய்ப்பு வழங்கவிருக்கிறாராம் விஜய்.

முருகதாஸின் தளபதி 65 படத்தை முடித்துவிட்டு தளபதி 66 படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

கௌதம் மேனன் பட நாயகியை மணக்கும் ஓவியாவின் எக்ஸ் லவ்வர்

கௌதம் மேனன் பட நாயகியை மணக்கும் ஓவியாவின் எக்ஸ் லவ்வர்

joshua heroineபிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போதே அதில் பங்கேற்ற ஓவியா ஆரவ் இருவரின் காதல் பற்றி ஊரே பேசியது.

ஆரவ்விடம் ஓவியா தன் காதலை ஓபனாக அறிவித்தார். பின்னர் அந்த பேச்சு அப்படியே ஓய்ந்து போனது.

தற்போது இருவரும் அவரவர் திசைகளில் பிரிந்து சென்றுவிட்டனர்.

‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆரவ்.

இந்த நிலையில் ராஹீ என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம் ஆரவ்.

கௌதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தில் வருண்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஹீ.

ஆரவ் மற்றும் ராஹீ இருவரது திருமணம் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தியின் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் முடிவு..?

கார்த்தியின் ‘சுல்தான்’ படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் முடிவு..?

karthi in sultanசிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன்.

இவர் தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் தெலுங்கு சினிமாவின் ஹாட் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை கைதி பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் சுல்தான் பட ரிலீஸ் குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில்…

“சுல்தான்’ 90 சதவீதம் படப்பிடிப்பு எடிட்டிங் முடிந்துவிட்டது.

கொரோனா பிரச்சினை இடையில் மீதமுள்ள படப்பிடிப்பை எப்படி முடிப்பது என்று பார்க்கிறோம்.

எங்களது தயாரிப்பில் மிகப்பெரும் தயாரிப்பாகவும், என்டெர்டெயின்மென்ட் படமாகவும் இருக்கும்.

இந்த படத்தின் வெளியீடு பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை,” என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More Articles
Follows