ஒரு பக்கம் கமல் – ரஜினி – அஜித்.; மறுபக்கம் அனுபமா-வுக்கு லைக்கா போட்ட ‘லாக்டவுன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் கமல் – ரஜினி – அஜித்.; மறுபக்கம் அனுபமா-வுக்கு லைக்கா போட்ட ‘லாக்டவுன்’

*லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில், அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம் “லாக்டவுன்”*

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களுடன், பல தரமான திரைப்படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “லாக்டவுன்” படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.

புதுமையான திரைக்கதையில் லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும், ஒரு அழகான படைப்பாக உருவாகும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் A R ஜீவா இயக்குகிறார்.

“பிரேமம்” படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது தில்லு ஸ்கொயர் படம் மூலம், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

N.R.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோரின் மயக்கும் இசையுடன், K.A.சக்திவேலின் அசத்தலான ஒளிப்பதிவில், “லாக்டவுன்” ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Anupama starring Lockdown produced by Lyca

ட்ரிம்மிங் செய்யப்பட்ட ‘ஹரா’..; விறுவிறுப்பை கூட்ட விஜய் ஸ்ரீ எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரிம்மிங் செய்யப்பட்ட ‘ஹரா’..; விறுவிறுப்பை கூட்ட விஜய் ஸ்ரீ எடுத்த முடிவு

*உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ‘ஹரா’

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கும் வெளியாகி உள்ள ‘ஹரா’, திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா போல ரசிகர்கள் கூடி பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் கொடுத்துள்ள ரீ-என்ட்ரியை கொண்டாடி வருவதோடு, திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் ‘ஹரா’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

‘ஹரா’ படம் தமிழகமெங்கும் 152க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், மலேசியாவில் 330 திரையரங்குகளிலும், மற்றும் ஐரோப்பா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் 220 திரையரங்குகளிலும் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

பெண்கள் விரும்பும் நாயகனாக இன்னமும் மோகன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘ஹரா’ படத்தை காண பெண்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருகின்றனர். இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்களும் படத்தை வெகுவாக ரசிக்கின்றனர்.

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளன. முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மோகன் முத்திரை பதித்துள்ளதால் இனி வரும் படங்களிலும் அவர் இதுபோன்ற பாத்திரங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘ஹரா’ படத்தில் மோகன் ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘ஹரா’ படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்.

‘ஹரா’ படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, மனோ பிரபாகரன், மோகன் குமார், விஜய் ஶ்ரீ ஜி, படத்தொகுப்பு: குணா, சண்டை பயிற்சி: விஜய் ஸ்ரீ ஜி .

இடைவேளைக்கு முன்பு வரை படம் விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு குறைந்ததாக பல விமர்சனங்கள் இருந்தது. இதனை எடுத்து யோகி பாபுவின் காட்சிகளையும் மற்ற தேவையற்ற காட்சிகளையும் ட்ரிம்மிங் செய்ய உள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

எனவே படத்திற்கு இந்த வாரம் மேலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Public appreciate Haraa for presenting good content

கோலிவுட்டில் ‘பித்தல மாத்தி’-கள்… தயாரிப்பாளருக்கு ‘ஜோரா கைய தட்டுங்க’.. – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் ‘பித்தல மாத்தி’-கள்… தயாரிப்பாளருக்கு ‘ஜோரா கைய தட்டுங்க’.. கே. ராஜன் பாராட்டு

*அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சரவணன்..

*தமிழ் சினிமாவில் நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க – தயாரிப்பாளர் கே.ராஜன்*

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் மாணிக்க வித்யா, தயாரிப்பாளர் சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காதல் சுகுமார் பேசும்போது…

தயாரிப்பாளர் கேட்டதுபோலதான். நிறைய பேரை கூப்பிட்டோம் ஆனால் திருமணம் காரணமாக வரவில்லை. உமாபதி மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் வாழ்த்துகள். திருமண வரவேற்பு அன்றே அவரது படம் வெளியாவது மிகப் பெரிய ஆசிர்வாதம் என்று சொல்லலாம்.

இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது…

“நிகழ்ச்சிக்கு வந்தால் எதோ ஒரு விஷயம் அழகாக இருக்க வேண்டும். இங்கு ஊடக நண்பர்கள் தான் அழகாக தெரிகின்றனர். தமிழ் தலைப்பாக இருக்கிறது. தமிழில் தலைப்பு வைத்ததற்கு வாழ்த்துகள். உமாபதி, ஐஸ்வர்யா தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள்.

திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம் வரும் என நினைக்கிறேன். எனக்கும் திருமணத்திற்கு பிறகு தான் முதல் படம் வெளியானது. கருடன் படத்தில் எனது நடிப்பை பாராட்டினீர்கள்… நான் நடிக்கவே இல்லை.. ஜஸ்ட் லைக் தட் என செய்தேன் இதற்கு இவ்வளவு பாராட்டா.? இதுதான் நடிப்பா என்று நானே நினைத்தேன்.

பித்தல மாத்தி படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் பார்த்தோம். இயக்குனர் மாணிக்க வித்யா ரொம்ப பிரமாதமாக செய்துள்ளார். படத்தின் தலைப்பு வித்தியாசமாகவும் அழகாகவும் தமிழ் தலைப்பாகவும் உள்ளது.

இப்போது நிறைய படங்களில் தமிழை தேட வேண்டியுள்ளது. உமாபதி இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். திரையுலகம் மீண்டு எழுந்து வருவது போல தோற்றம். கொஞ்சநாட்களாக திரைப்படம் வெளியாகும் எண்ணிக்கை அதிகமாகவும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. எதார்த்த படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. பித்தல மாத்தி படமும் நிச்சயம் டிரெண்ட் மாத்தி படமாக இருக்கும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி.

கே.ராஜன் பேசியதாவது…

நான் பலரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வட்டி வராமல் தவிக்கிறேன். இப்படி நிறைய பித்தல மாத்திகள் இருக்காங்க கவனமாக இருங்கள். இவர்களுக்கு இடையில் தங்கமான தயாரிப்பாளர் சரவணன். படப்பிடிப்பு எப்படி நடந்தது என்று கேட்டால் மிகவும் நன்றாக நடந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்.

ஒரு தயாரிப்பாளர் அப்படி சொல்றதே இல்லை. இயக்குனர் பற்றி அவ்வளவு நன்றாக சொன்னார். படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயம் பண்ணிவிட்டு வந்துள்ள தயாரிப்பாளர். தயாரிப்பாளர் இந்த படம் மட்டும் எடுக்கவில்லை யோகி பாபுவை வைத்து ஜோரா கைதட்டுங்க என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார்.

இன்னைக்கு சினிமா எவ்வளவு சிரமத்தில் இருக்கு என்று உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு படம் ஆரம்பிச்சா தயாரிப்பாளர்கள் படும் வேதனை. சினிமாவில் நிறைய பித்தலை மாத்திகள் இருக்காங்க. ஆனா சில இயக்குனர்கள் பித்தல மட்டும் மாற்றவில்லை தயாரிப்பாளரையே மாத்திவிடுகின்றனர். பணக்காரனாக வந்தவரை ஏழையாக அனுப்பி வைக்கின்றனர். எல்லாமே ஆங்கில தலைப்பு. தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் பரிசீலனை செய்து வருகின்றனர். நான் தமிழக முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தேன் கவனிப்பதாக சொல்லியுள்ளனர். 100 படங்கள் வந்தால் 80 படங்கள் காணாமல் போகிறது. பெரிய வருத்தமாக உள்ளது.. என்று பேசினார்.

கலை இயக்குனர் வீர சமர் பேசியதாவது…

இப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். இதில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் சிறு படங்களுக்கு உயிர் கொடுத்து பேசும் ஒரு அற்புதமான மனிதர்.

இவரை போன்றவர்களை நாம் பாதுகாத்து வைக்க வேண்டும். உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியிருந்தாலும் ஒரு சிறு படத்துக்கு வந்து இருக்கும் ஆர்வி உதயகுமார் அவர்களுக்கு நன்றி.

இப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தயாரிப்பாளர் மட்டுமின்றி எல்லா வேலையையும் செய்யக்கூடியவர். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு நாம் மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டும். இப்படத்தில் ஹீரோயினுக்காக அயர்ன் பாக்ஸில் ஒரு வண்டி ரெடி செய்தோம். இயக்குனர் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இயக்குனராக வருவார்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாத கதையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எடுத்துள்ளனர். தயாரிப்பாளர் தொடர்ந்து படங்கள் எடுக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி.

இயக்குனர் மாணிக்க வித்யா பேசும்போது…

ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு தெரியும். அந்த அளவுக்கு எனது தயாரிப்பாளர் நம்பிக்கை வைத்துள்ளார். உலகம் முழுவதும் 70 திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்கிறார். இப்படத்தின் தலைப்பு மீது ஆரம்பத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. நாம் எல்லோரும் வெளியே ஒரு தோற்றம் உள்ளுக்குள் வேறு தோற்றத்தில் இருப்போம்.

அதுதான் இந்த கதையிலும்.படத்தில் வில்லி கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தின் ரீ ரிலீஸ் மூலம் நீங்கள் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று பேசினார்.

தயாரிப்பாளர் சரவணன் பேசும்போது…

“ஒரு படம் குழந்தை மாதிரி.தாய் இயக்குனர் என்றால் தகப்பன் தயாரிப்பாளர் தான்.ஒரு படத்தை நடுத்தெருவில் வீசி செல்வது தயாரிப்பாளருக்கு அழகல்ல. அதனை சரி செய்யும் வேலையை தான் நான் செய்துள்ளேன்.

சத்யராஜ் நடித்த அடாவடி படத்தை டெல்லி வரை சென்று போராடி ரிலீஸ் செய்தேன். தடை என்றெல்லாம் சொன்னார்கள். ஓடாத படத்தையே ரிலீஸ் செய்தநான் ஓடும் தெரிந்த படத்தை எப்படி விடுவேன். இந்த படம் எனக்கு மிகப் பெரிய அனுபவத்தை கொடுத்தது.

இந்த படம் எடுக்கும்போது எனக்கு நெஞ்சு வலி வந்தது. வீட்டில் எல்லோரும் என்னை படம் எடுக்க வேண்டாம் என்றனர். ஆனாலும் இயக்குனருக்காக எனது முடியாத சூழலிலும் நான் வேலை செய்தேன். இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி.

Producer Saravanan speech at Pithala Maathi meet

——-

இம்மாதம் கமல் மாதம்.; மக்கள் உணர்ந்து கொள்ள ‘குணா’ சாதாரண படமல்ல.. அதையும் தாண்டி ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இம்மாதம் கமல் மாதம்.; மக்கள் உணர்ந்து கொள்ள ‘குணா’ சாதாரண படமல்ல.. அதையும் தாண்டி ரீ-ரிலீஸ்

கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் ஜூன் 21 வெளியாகிறது..

சில தினங்களுக்கு முன் ஜூன் 7ம் தேதி கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் ஆனது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

இதே ஜூன் மாதம் 27ஆம் தேதி கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கல்கி 2898 ஏ டி என்ற படமும் ரிலீஸ் ஆகிறது.. ஆக இந்த மாதம் தொடங்கியது முதல் கமலின் படங்கள் தொடர்ந்து வாரம் வாரம் வருகிறது.

மேலும் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது..

இது பற்றிய விவரம் வருமாறு…

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.

சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது.

மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இன்றைய தலைமுறை மஞ்சு மெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி.

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி,
ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,
எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் ,
எஸ். பி. பாலசுப்ரமணியம்,
சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர்.

வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். 1991 ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் தமிழ்நாடு அரசு வழங்கியசிறந்த திரைப்படத்திற்கான மூன்றாவது பரிசை குணா வென்றது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது.

தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.

Kamals Guna movie rerelease on 21st June

அம்மா பாசத்துக்காக காதலை வெறுத்த நாயகன் அட்சயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அம்மா பாசத்துக்காக காதலை வெறுத்த நாயகன் அட்சயன்

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது காதலிகள் 2 பேரையும் நிராகரித்த உலகநாதன்
———————————-

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரிக்க விருது படத்தின் நாயகன் அட்சயன் ஹீரோவாக நடிக்க ஆ. ஆதவன் இயக்கியிருக்கும் படம் உலகநாதன்.

இவரும் ஏற்கனவே விருதுப் படத்தை இயக்கியவர் ஆவார்.. ‘உலகநாதன்’ என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா – மகன் சென்டிமெண்ட்டோடு கூடிய கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்தது.

நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோக தர்ஷினி, கிரேட்டா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

ஹீரோவின் ‘அம்மாவாக விஜய் டி.வி.புகழ் சசிகலா நடித்திருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

ஏ.டி.ஆதிநாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு சண்டைப் பயிற்சி மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை ஆ. ஆதவன் கவனிக்கிறார்.

‘இப்படத்தின் அனைத்துக் கட்டப் படப்பிடிப்புகளும் முடிவடைந்தது தமிழ்நாடு முழுவதும் படத்தை விரைவில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்..

Hero Ulaganathan with mother sentiment

‘தப்பாட்டம்’ தந்த தாறுமாறு வைரல்… எலான் மஸ்க் போஸ்ட்.. குஷியில் துரை சுதாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தப்பாட்டம்’ தந்த தாறுமாறு வைரல்… எலான் மஸ்க் போஸ்ட்.. குஷியில் துரை சுதாகர்

ஜூன் 11… காலையில் இருந்தே போன்கால்ஸ் வந்து.கொண்டே இருக்கிறது.

2017ல் வெளியான ‘தப்பாட்டம்’ படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம்.

குறிப்பாக ‘தப்பாட்டம்’ என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம்.
தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது.

அதன் விளைவால் தான் ‘களவாணி 2’, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

இன்று ஜூன் 11 எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.

எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி…

Durai Sudhakar

Durai Sudhakar happy with Elan musk post of Thappattam

More Articles
Follows