விஜய்யின் குட்டி ஸ்டோரி இப்போ கொரோனா ஸ்டோரி ஆச்சே..

Anthony Daasan changed Vijays Kutty story into Corona storyலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதில் முக்கியமான பாடல் குட்டி ஸ்டோரி பாடல் தான்.

இந்த பாடல் யூடிப்பில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் குட்டி ஸ்டோரி பாடலை கொரோனா ஸ்டோரி பாடலாக பாடகர் அந்தோணி தாசன் மாற்றியுள்ளார்.

அந்தோணி தாசன் அவரது நண்பர்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு வரிகளாக மாற்றி பாடியுள்ளனர்.

இந்த பாடலில் நடிகர் அப்புக்குட்டியும் இடம் பெற்றுள்ளார்.

வீட்டுல இருப்போம் அது தான் பெஸ்ட், வெளியில போனா கொரோனா மஸ்ட் போன்ற வார்த்தைகள் பாடலில் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இப்பாடலை வரி மாற்றி எழுதி மொபைல் போனில் எடிட் செய்தவர் சிகா. பாடியிருப்பவர் நவ்பால் ராஜா.

நாங்கள் அனைவரும் அரசு சொல்லுக்கு இணங்க தனிமையிலிருந்து இப்பாடலை பண்ணியிருக்கிறோம் நன்றி. என அந்தோணி தாசன் பதிவிட்டுள்ளார்.

Anthony Daasan changed Vijays Kutty story into Corona story

https://www.facebook.com/anthonydaasan/videos/3289673827728069/

Overall Rating : Not available

Latest Post