கமல்-ஷங்கர் இணையும் இந்தியன்2 படத்திற்கு அனிருத் இசை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல், ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார் ஏஎம். ரத்னம்.

கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி இப்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படம் ஜனவரியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் வெளியாகவில்லை)

ஆனால் இதை அனிருத் தரப்பு மறுத்துள்ளது. இதுவரை அப்படி எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Anirudh will not compose music for Indian2

விஜய் இல்லாமல் நானில்லை; அஜித் ரசிகர் ஜெய் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், ரீமாசென் நடிப்பில் உருவான படம் பகவதி.

இப்படத்தில் விஜய் தம்பியாக ஜெய் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இப்படம் ரிலீஸாகி 15 வருடங்களை கடந்துவிட்டது.

இதுகுறித்து ஜெய் கூறியுள்ளதாவது..

‘எனது சினிமா வாழ்வில் 15 வருடங்களை நிறைவு செய்துள்ளேன்.

இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது.

என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தில் தம்பியாக நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இப்போது இங்கே இல்லை’ என விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெய்.

அஜித்தின் தீவிர ரசிகர் ஜெய் என்பதும் அஜித்தைப் போலவே பைக் ரேசில் கலந்துக் கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Without Vijay i will not be here says Jai on 15 years of Bagavathi

கமல்ஹாசன் பிறந்தநாளில் விஸ்வரூபம் 2 பட டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்த படம் `விஸ்வரூபம்’.

இவருடன் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடித்த இப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாவது பாகமும் முன்பே தயாராகி வந்தது.

ஆனால் இடையில் சில எழுந்த சிக்கல்களால் `விஸ்வரூபம் 2′ படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையில் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கமல்ஹாசன்.

அதன்பின்னர் சபாஷ் நாயுடு படத்தை இயக்கி நடித்தார் கமல்.

இதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் மீதமுள்ள காட்சிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கமல் ஒரு பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

வருகிற டிசம்பர் மாதம் `விஸ்வரூபம்-2′ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishwaroopam 2 trailer release on Kamal Birthday

சூர்யா-கார்த்தி கூட்டணியில் இணையும் சாயிஷா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து விரைவில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

இப்படத்தை சூர்யா தயாரிக்கவிருக்கிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இதில் நாயகியாக சாயிஷா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இவர் பிரபுதேவா இயக்கத்தில் பாதியிலேயே கைவிடப்பட்ட ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்திலும் நாயகியாக நடிக்கவிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sayyesha teams up with Karthi for Suriya production movie

ஸ்பைடர் தோல்வியால் விஜய்-62 படத்தில் முருகதாஸ் செய்யும் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நடிகரின் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ? அதுபோன்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஏஆர். முருகதாஸ்.

இவர் இயக்கிய ஸ்பைடர் படம் அண்மையில் வெளியானது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மகேஷ்பாபு, ரகுல் பிரித்தி சிங் ஜோடியாக நடித்திருந்தனர்.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள அவரின் 62 படத்தை இயக்கவிருக்கிறார் ஏஆர். முருகதாஸ்.

இதில் நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஸ்பைடர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால், அப்பட இசையமைப்பாளர் மற்றும் நாயகியை விஜய் 62 படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம் முருகதாஸ்.

மேலும், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்கா, தோனி படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக, சாக்‌ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

AR Murugadoss directorial Vijay 62 movie heroines updates

அரசுப் பணியாளர்களை கேலி செய்யாமல் உதவுங்கள்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் இணைந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.

வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார், சாக்கடை அடைப்பை வெறும் கையால் அகற்றிய புகைப்படம் வைரலாக வருகிறது

இந்நிலையில் இதுபோன்ற ஒரு படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்…

தங்கள் பணியையும் தாண்டிச் செல்வோருக்கு நன்றி. சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள். மேலும் பல தமிழர்களும் இதுபோல வேலையையும் தாண்டிய பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு டிவிட்டில் கமல் கூறியுள்ளார்.

Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan’s should report to duty pic.twitter.com/54StA3CEq0 — Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017

மேலும் மற்றொரு பதிவில் “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை” என தெரிவித்துள்ளார்.

Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescue

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 38m38 minutes ago
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.

 

More Articles
Follows