தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிகுந்த பரபரப்புகளுக்கிடையில் இன்று மாலை சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’ரெமோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.
இத்துடன் ’ரெமோ என் காதலன்’ என்ற டைட்டில் பாடலும் வெளியாகிறது.
இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது..
’ரெமோ’ கேரக்டருக்கு ஒரு தீம் மியூசிக் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அதை உருவாக்க நினைத்தேன்.
பெரும்பாலும் வெறும் இன்ஸ்ட்ரூமென்ட்ஸை மட்டும் வைத்துதான் தீம் மியூசிக் இருக்கும்.
அதில் குரல் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற ஐடியாவே தோன்றவே அதை உருவாக்கினோம். தற்போது அது ஒரு பாடலாக ஆகிவிட்டது.
அதுதான் ’ரெமோ’ படத்தின் டைட்டில் பாடல். நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.