சிம்பு இசையில் அனிருத் பாட்டு… நண்பனின் நன்றிக்கடன்

சிம்பு இசையில் அனிருத் பாட்டு… நண்பனின் நன்றிக்கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and anirudhபிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர் கம்போஸ் செய்யும் பாடல்களை பாடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அனிருத், சிம்பு இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தில் அவர் கம்போஸ் செய்துள்ள ஒரு அதிரடி பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இந்த பாடலின் ஒலிப்பதிவு இன்று காலை நடைபெற்றது,.
ஏற்கனவே ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது தெரிந்ததே.

தற்போது அதற்கு நன்றிக்கடனாக சிம்பு இசையில் அனிருத் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோசங்கர் உள்பட பலர் நடிக்கவுள்ள சக்க போடு போடு ராஜா’ படத்தை சேதுராமன் இயக்கவுள்ளார்.

விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor vishalதென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக செயல்பட்டு வரும் நடிகர் விஷாலுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த வித தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுன்சிலில் போட்டியிட விஷால் அளித்த மனுவை தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டதை எதிர்த்து கேயார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரியின் முடிவுகளே இறுதியானது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காமன்மேன் ப்ரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கும் கமர்ஷியல் படம் “ஐங்கரன்”

காமன்மேன் ப்ரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கும் கமர்ஷியல் படம் “ஐங்கரன்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayngaran movie pooja stillsகமர்ஷியலுக்குண்டான காதல், ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல் முறையாக ஜி.வி.க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன், காளிவெங்கட், ஹரிஷ் பெராடி, அருள்தாஸ், சுவாமிநாதன்,ரிந்து ரவி, ஐரின், பவுன்ராஜ் போன்றோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு,
ஔிப்பதிவு- சரவணன் அபிமன்யு,
இசை- ஜி.வி.பிரகாஷ்குமார்,
எடிட்டிங்-A.M.ராஜா முகமது,
கலை-G.துரைராஜ்
பாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக்,
நடனம்-ராஜு சுந்தரம், ஷோபி
ஆக்ஷன்-ராஜசேகர்,
(20.2.17) முதல் “ஐங்கரன்” படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, அதன் சுற்று புறங்களில் தொடர்ந்து நடத்தயுள்ளனர்

இணை தயாரிப்பு. சுபா கணேஷ்
தயாரிப்பு. பி.கணேஷ்

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala and Jyothikaதாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், ரம்யா வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறார்

தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், ரம்யா வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

image1தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார் அவர். தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இருக்கிறார் நடிகை ரம்யா.

“பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வது மூலம், நம்முடைய தன் நம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி தற்போது 35 கிலோ பிரிவில் நான் பங்கேற்று இருக்கிறேன். போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். இதன் மூலம் நான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, நான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகை ரம்யா.

குற்றம் 23 படத்தினை வெளியிடும் அக்ராஸ் பில்ம்ஸ்

குற்றம் 23 படத்தினை வெளியிடும் அக்ராஸ் பில்ம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMGL8492வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார், ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம். முன்னதாக வேறொரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட பிரபு வெங்கடாச்சலம், ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனத்தோடு கைக்கோர்த்து ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘கொடி’ திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, ‘பறந்து செல்ல வா’ படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

விநியோக துறையில் நல்லதொரு பெயரை சம்பாதித்து இருக்கும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தற்போது ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றனர்.

நான் திரையுலகில் அடியெடுத்து வைத்தவுடன், வர்த்தக வெற்றிக்கு தேவையான ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் நான் கற்று கொண்டேன். திரைப்பட விநியோகதிற்கு தேவையான தளவாடங்களை நன்கு தெரிந்து கொள்வது தான் ஒரு தரமான தயாரிப்பாளருக்கு அழகு. தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி கொண்டிருக்கும் நாம், தயாரிப்பு, விநியோகம் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கிய சில மூத்த திரையுலகினரை இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் கையாண்ட யுக்தியை தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் நிலை நாட்டி, தயாரிப்பு மற்றும் விநியோக துறைகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமில்லாமல், வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருக்கும் படங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றது ‘அக்ராஸ் பிலிம்ஸ்’. விநியோக துறையை பொறுத்த வரை, வெளிப்படையாக இருப்பது மிக முக்கியம். நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அதனை புரிந்து கொண்டு ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கி இருக்கும் குற்றம் 23 திரைப்படம், தரமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். ஒரு நடிகராக அருண் விஜய் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறார். ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு, அருண் விஜயின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் குற்றம் 23 என்பதால் , இந்த படம் வர்த்தக உலகில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு படத்தை உருவாக்குவதில் ஆரம்பித்து, அதனை ரசிகர்களிடத்தில் அழகாக கொண்டு போய் சேர்க்கும் வரை, இயக்குநர் அறிவழகன் பின்பற்றும் பாணி என்னை மிகவும் கவர்ந்து இருக்கின்றது. குற்றம் 23 படத்தை பார்த்த பிறகு, அவர்கள் மீது இருந்த நம்பிக்கை எனக்கு மேலும் வலு பெற்று இருக்கிறது. நிச்சயமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் குற்றம் 23 திரைப்படம் ஒவ்வொரு ரசிகரையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரபு வெங்கடாச்சலம்.

More Articles
Follows