கதிரின் ‘ஜடா’ படத்திற்காக சாம் இசையில் அனிருத் பாட்டு

கதிரின் ‘ஜடா’ படத்திற்காக சாம் இசையில் அனிருத் பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh croons for Kathir in Jada movie Sam CS Musicஇசையமைப்பாளர் அனிருத் பாடும் பாடல்களுக்கு வரவேற்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

அவர் பாடிய “யாஞ்சி” மற்றும் “கண்ணம்மா” பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது …… அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் சாம் CS இசையில் ” ஜடா” படத்திற்காக பாடியிருக்கிறார்.

கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கும் படத்தை பொயட் ஸ்டூடியோ தயாரித்திருக்கிறது. கால்பந்தாட்ட வீரனைப் பற்றிய படத்திற்கு இசையமைத்திருப்பவர் சாம் CS.

இந்தப்படத்தில் முக்கியமான ஒரு பாடலை அனிருத் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனிருத்தை அணுகியிருக்கிறார்கள்.

அனிருத்தும் பாடலின் டியூனைக்கேட்டு உற்சாகமாகி பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.

பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் இசையமைப்பாளர் சாம்CS உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தில் சிறப்பான இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் CS அடுத்து வெளிவரவிருக்கும் “ஜடா” படத்திற்கும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார்

விரைவில் வெளியாகவிருக்கும் ஜடா படத்தின் குழுவினர் உற்சாகத்தில் உள்ளனராம்.

Anirudh croons for Kathir in Jada movie with Sam CS Music

ஒரே நாளில் மோதும் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் படங்கள்

ஒரே நாளில் மோதும் சூர்யா கார்த்தி சிவகார்த்திகேயன் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Karthi and Sivakarthikeyan movies clash on December 2019சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

இப்படத்தை இறுதிச் சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்க ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்டில் தயாரித்துள்ளார்.

சூர்யாவுடன் அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி, ஜாக்கி ஷ்ரோஃப், மோகன் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக் நவ.11ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த படம் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர்.20ம் தேதி ரிலீசாக வாய்ப்புள்ளது.

இதே தேதியில் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி, இவானா நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

இத்துடன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடித்துள்ள படமும் வெளியாகிறது.

இவர்களுடன் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Suriya Karthi and Sivakarthikeyan movies clash on December 2019

அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாகிய மக்கள் செல்வன்

அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாகிய மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi play the baddie in Allu Arjuns filmமுன்னணி நடிகராக இருந்தபோதே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் உப்பெண்ணா படத்தில் வில்லன் வேடம் ஏற்று இருக்கிறாராம் மக்கள் செல்வன்.

இந்த நிலையில் அல்லுஅர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்திலும் வில்லனாக கமிட் ஆகியுள்ளார்.

ராஷ்மிகா நாயகியாக நடிக்க ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படம் தெலுங்கில் விஜய்சேதுபதியின் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi play the baddie in Allu Arjuns film

சிபிராஜின் ‘கபடதாரி’யில் இணைந்தார் விஸ்வரூப நாயகி

சிபிராஜின் ‘கபடதாரி’யில் இணைந்தார் விஸ்வரூப நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswaroopam heroine Pooja Kumar joins with Sibiraj in Kabadathari பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் கபடதாரி.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படம் கன்னடத்தில் வெளியான கவலுதாரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினெர்ஸ் மற்றும் டிஸ்டிபூயூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

மேலும் இயக்குநர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர்.

சைமன் கே.கிங் இசையமைக்க, ரசமதி ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் ‘கபடதாரி’ படத்தில் ‘விஸ்வரூபம்’ பட நாயகி பூஜா குமார் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.

Viswaroopam heroine Pooja Kumar joins with Sibiraj in Kabadathari

வைகை புயல் வடிவேலுக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

வைகை புயல் வடிவேலுக்கு வாய்ப்பளிக்கும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu team up with Kamal in Thalaivan Irukkindranதமிழ் சினிமாவே மறக்க முடியாத காமெடியன்களில் மிக முக்கியமானவர் வடிவேலு.

இன்றைய படங்களில் இவர் இடம் பெறாவிட்டாலும் இவர் இல்லாத இண்டர்நெட் இல்லை. மீம்ஸ் இல்லை.

காமெடி சேனல்கள் இல்லை என்னுமளவுக்கு வடிவேலுவின் படங்கள் தான் ஹைலைட்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சினையால் புதிய படங்களில் நடிக்கவில்லை.

சக்தி சிதம்பரம் இயக்கவுள்ள பேய் மாமா படத்திலும் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு தான் நடிக்கிறார்.

இந்த நிலையில் கமல் நடிப்பில் உருவாகவுள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vadivelu team up with Kamal in Thalaivan Irukkindran

ரஜினியின் ‘பாபா’ வழியில் நஷ்டத்தை ஈடு கட்டும் சிரஞ்சீவி

ரஜினியின் ‘பாபா’ வழியில் நஷ்டத்தை ஈடு கட்டும் சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiranjeevi going to give back money for Syeraa lossஉலக சினிமா வரலாற்றிலேயே தன்னுடைய பாபா படம் தோல்வியை தழுவியதால் தியேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தவர் ரஜினிகாந்த்.

வேறு எந்த தயாரிப்பாளரும் நடிகரும் நஷ்டத்தை இதுபோல் ஈடுகட்டியதாக வரலாறு இல்லை.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவியும் தன்னுடை சைரா நரசிம்ம ரெட்டி படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி தரவிருக்கிறாராம்.

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதி, அமிதாப்பச்சன், சுதீப் ஆகியோர் நடித்த ‘சைரா’ படம் தெலுங்கில் வெற்றி பெற்றாலும் மற்ற மாநிலங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.

மற்ற மாநிலங்களில் படத்தை வெளியிட்டவர்கள் நஷ்டம் அடைந்ததால் அவர்களுக்கு தயாரிப்பாளர் ராம்சரண் பணத்தை திருப்பி தரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Chiranjeevi going to give back money for Syeraa loss

More Articles
Follows