தனுஷ்-சிம்புவை பின்னுக்கு தள்ளிய அனிருத்-சிவகார்த்திகேயன்

anirudh and SKசென்னை டைம்ஸ் பத்திரிகை 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பை நடத்தியது.

அந்த பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோருக்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர 30 ஆண்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரான அனிருத் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

2வது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். 3வது இடத்தில் ஹரிஷ் கல்யாண்.

4வது இடம் பிடித்த நடிகர்தான் மிக வியப்பாக உள்ளது. ஏனென்றால் அவர் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அவர்தான் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

5வது இடத்தில் துல்கர் சல்மான், 6வது இடத்தில் ராணா உள்ளார்.

தனுஷுக்கு 7வது இடமும், பிக் பாஸ் புகழ் ஆரவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி 9வது இடத்திலும், அதர்வா 10வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 11வது இடத்திலும், சிம்பு 12வது இடத்திலும் உள்ளார்கள்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post