கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ ட்ரைலர்; விமானத்தை டூவிலரில் தோற்கடித்த எம்ஜிஆர்

prabu devaஎம்.ஜி.ஆர், லதா, மஞ்சுளா, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் 1972ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’உலகம் சுற்றும் வாலிபன்’.

இதன் இரண்டாம் பாகமாக ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற படத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார் எம்.ஜி.ஆர்.

ஆனால் எம்.ஜி.ஆர், அரசியலில் தீவிரமாக இறங்கி முதலமைச்சராக ஆனதால் அந்த படம் கை விடப்பட்டது!

தற்போது எம்.ஜிஆரின் கனவை நிறைவேற்றும் விதத்தில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படமாக உருவாகி உள்ளது.

இதில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை அருள் மூர்த்தி இயக்கியிருக்கிறார், பிரபு தேவா – ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த மிகப் பெரிய மாநாட்டில், ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது.

கல்வியாளர் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் இருவரும் இசைத்தகட்டினை வெளியிட, பிரபுதேவாவும், இயக்குநர் விஜய்யும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது படத்தை பற்றியும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றியும் பேசினார்கள்.

“இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர்தான். ஒன்று எம்.ஜி.ஆர். அவர்தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ்.

அவர் கொடுத்த முழு சுதந்திரம்தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது.

வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார் இயக்குநர் அருள் மூர்த்தி.

விழாவில் பிரபுதேவா பேசுகையில்..

“எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன.

என் அப்பா, எம்.ஜி.ஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மெய் மறந்தேன்” என்றார்.

விழாவில் ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்.ஜே. விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ பட ட்ரைலர் இதோ…

Animation MGR Jayalalitha starring Kizhakku Africavil Raju Teaser launch event

Overall Rating : Not available

Related News

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர்…
...Read More

Latest Post