தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.
இதனை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.
தற்போது முதல் பாகம் உருவாகி வருகிறது. இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஜய்சேதுபதியின் மனைவியாக நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.
மேலும் தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் நட்சத்திர பட்டாளங்கள் இதில் இணையும் என எதிர்பார்க்கலாம்.