முன்னாள் நடிகர் முதல்வர் என்டிஆர் பெயரில் மாவட்டம்..; ஜெகன்மோகன் அறிவிப்பு

முன்னாள் நடிகர் முதல்வர் என்டிஆர் பெயரில் மாவட்டம்..; ஜெகன்மோகன் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் எப்படியோ அப்படி ஆந்திராவில் அம்மாநில மக்களின் தெய்வமாக திகழ்ந்தவர் என்டி ராமராவ். (சுருக்கமாக என்டிஆர்)

அதுபோல் சினிமாவில் இருந்து எம்ஜிஆர் எப்படி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனாரோ அதுபோல் என்டிஆரும் சினிமாவில் சாதித்து ஆந்திர அரசியலுக்கு வந்து முதல்வரானார்.

எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியது போல தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி ஆந்திரா அரசியலில் போட்டியிட்டார்.

மக்களின் அமோக ஆதரவுடன் ஆந்திராவின் முதல்வராகப் பதவி வகித்து இருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சி தலைவராகி இரண்டு முறை ஆந்திரா முதல்வராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு செய்யாத ஒன்றை தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்துள்ளார்.

ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது 13 + 13 = 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வரவுள்ளது.

இதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.

என்டிஆர் மாவட்டத்தின் தலைநகராக விஜயவாடா நகரமும் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எம்பி தொகுதிகளையும் (பாராளுமன்றத் தொகுதி) ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Andhra Pradesh govt creates 13 new districts including NTR District

JUST IN பத்ம விருதுகள் : விபின் ராவத்.. சௌகார்ஜானகி.. சுந்தர்பிச்சைக்கு விருது.; தமிழகம் & புதுச்சேரியில் 8 பேர்.. மரணமடைந்த 13 பேருக்கும் விருது

JUST IN பத்ம விருதுகள் : விபின் ராவத்.. சௌகார்ஜானகி.. சுந்தர்பிச்சைக்கு விருது.; தமிழகம் & புதுச்சேரியில் 8 பேர்.. மரணமடைந்த 13 பேருக்கும் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள உயரிய விருதுகளில் பத்ம விருதுகளை சொல்லலாம்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய இந்த பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

எனவே 2022 இந்தாண்டும் 2021ஆம் ஆண்டிற்கான விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

கல்வித் துறையில் தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவத்துறை மருத்துவர் வீராசாமி, கலைத்துறையில் கே.சி.நடராஜன், ஆர்.முத்துக்கண்மணி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியில் தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

பத்ம விபூஷண் : 4 பெயர்கள்
1) உ.பி..,முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்
2) மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத்
3) பிரபா அட்ரே (மஹாராஷ்டிரா) கலை.
4) ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி)

பத்ம பூஷண்: 17 பெயர்கள்

1) சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்)
2) சத்ய நாதெல்லா
3) காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்..

இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள், 10 பேர் வெளிநாட்டவர்.

இத்துடன் 13 பேருக்கு அவர்களது மரணத்துக்குப் பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது.

Padma Awards 2022 Full list of 128 recipients named for civilian honours

ரோல்ஸ் கார்.. ரீல் ஹீரோ சர்ச்சை..; விஜய் குறித்த நெகட்டிவ் கருத்துக்களை நீக்கியது நீதிமன்றம்

ரோல்ஸ் கார்.. ரீல் ஹீரோ சர்ச்சை..; விஜய் குறித்த நெகட்டிவ் கருத்துக்களை நீக்கியது நீதிமன்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாட்டு சொகுசு கார் ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் ஜோசப் விஜய்.

இதனை அப்போது விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும் வழக்கை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். அது நன்கொடை அல்ல.. நாட்டிற்கான வரி்

அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி.

இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆதாரமாக மீம்ஸ் போட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில்…

“தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மறை (நெகட்டிவ்) விமர்சனங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் நடிகர் விஜய்.

இதனை நீதிபதிகள் சத்திய நாராயணா, முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை அவர்கள் நீக்கம் செய்வதாக அறிவித்தனர்.

Madras High Court expunges the adverse remarks made against Tamil actor Vijay

அஜித் – சிவா கூட்டணி அல்டிமேட்..; ஹாட்ரிக் ரீமேக்கில் சூப்பர் ஹிட் படங்கள்

அஜித் – சிவா கூட்டணி அல்டிமேட்..; ஹாட்ரிக் ரீமேக்கில் சூப்பர் ஹிட் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த படம் ‘வீரம்’.

கடந்த 2014ல் ரிலீசான இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

எனவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் ஆனது.

அதே போல் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வேதாளம்’ படமும் சூப்பர் ஹிட்டானது. 2015ல் வெளியானது.

இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘போலா சங்கர்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இதில் அக்ஷய்குமார் அல்லது அஜய் தேவ்கன் இருவரில் யாரேனும் ஒருவர் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

Ajith hit films to be remade in Hindi and Telugu

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’.!

நட்டி – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு த்ரில்லராக உருவாகும் ‘வெப்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.

4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ படத்தின் நாயகி ஷாஸ்வி பாலா, ‘முந்திரி காடு’ & ‘கண்ணை நம்பாதே’ படங்களில் நடித்த சுபப்ரியா மலர் மற்றும் விஜே அனன்யா மணி ஆகியோர் மற்ற 3 நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், முரளி, தீப்ஸிகா, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். காட்பாதர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய அருண் சங்கர் கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

3 பாடல்கள் உள்ள இப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவசங்கர் மாஸ்டர் மற்றும் ஹரிஷ் கார்த்திக் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். அருண் பாரதி, ஆர்ஜெ விஜய் மற்றும் ஜெகன் கவிராஜ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கும் பூச்சிகளின் போராட்டத்தை போன்று இந்த கதை உருவாகி உள்ளதால் அதற்கு பொருத்தமாக ‘வெப்’ என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் நட்டிக்கும் ஷில்பா மஞ்சுநாத் குரூப்புக்கும் நடக்கும் பூனை எலி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹாரூன்.

கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சண்டைப்பயிற்சி: ஃபயர் கார்த்திக்
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா
புரொடக்ஷன் கண்ட்ரோலர் : பவித்ரன்

#Natty’s #WEB movie shoot wrapped up

சோதனையை சாதனையா மாத்துங்க..; பிக்பாஸ் அல்டிமேட்டில் சிநேகனுடன் இணைந்த பிரபலம்

சோதனையை சாதனையா மாத்துங்க..; பிக்பாஸ் அல்டிமேட்டில் சிநேகனுடன் இணைந்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதற்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே எப்போதும் உள்ளது.

இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த லோகோவை கமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பிக்பாஸ் 5 ஃபைனல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரோமோஷன் தொடங்கியுள்ளது.

இது ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

கவிஞரும் நடிகருமான சிநேகனை முதல் போட்டியாளராக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட்டின் 2வது போட்டியாளராக நடிகை ஜூலி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த புரோமோ வீடியோவில்.. “சோதனையை சாதனையா மாத்துங்க..” என சொல்லி ஜூலி துள்ளிக் குதிக்கிறார்.

Lyricist Snehan is part of Bigg Boss ultimate

More Articles
Follows