புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக
அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ரவ்னக் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.

என் பாட்ட கேட்டுதானே வாழ்றீங்க..; இளையராஜாவின் ஆணவ பேச்சு

என் பாட்ட கேட்டுதானே வாழ்றீங்க..; இளையராஜாவின் ஆணவ பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Director Ilayaraaj controversy speech again in his Concert தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நேற்று நள்ளிரவை நடத்தினார் இளையராஜா.

6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக 8 மணிக்கே தொடங்கியது.

நிகழ்ச்சி அரங்கில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பலரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.

இந்நிலையில் ஒருவர் மேடை அருகே வந்து ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து சென்றார். அவரை பார்த்த இளையராஜா பாடலை நிறுத்தி விட்டு அவரை கூப்பிட்டு கண்டித்தார்.

அப்போது பேசும்போது… இதுபோன்ற இடைஞ்சல்களை செய்யாதீர். நான் 5 மணி நேரம் நின்றுகொண்டு இசை கச்சேரி செய்கிறேன். என் பாட்டை கேட்டுதானே நீங்கள் வாழ்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் தானே என் பாடல்களே தானே உள்ளது என பேசினார் இளையராஜா.

இவரின் இசையில்லாமல் நாம் வாழ முடியாதா? எனவும் சிலர் விவாதிக்க ஆரம்பித்தனர். அவரின் இந்த பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

Music Director Ilayaraaj controversy speech again in his Concert

நீர் இல்ல; 2 லிட்டர் 7UP ரூ. 500; செம லேட்…. இளையராஜா விழா இம்சைகள்

நீர் இல்ல; 2 லிட்டர் 7UP ரூ. 500; செம லேட்…. இளையராஜா விழா இம்சைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraaja Concert controversy happened on his birthdayஇந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இளையராஜாவின் 76வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு அவரின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்பிபி மற்றும் யேசுதாஸ் அங்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அவர்கள் வரவே 8 மணி ஆனது. 8.30 மணி போல கமல்ஹாசன் வந்தார்.

இளையராஜா 7.45மணிக்கு விழாவை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்தனர்.

மேலும் விழா தொடங்கும்போதே தண்ணீர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வகைகள் விற்பவர்கள் கூட தண்ணீர் பாட்டில் வைத்திருக்கவில்லை.

இதனால் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. 2 லிட்டர் 7அப் கூல் ட்ரிங் ரூ. 500க்கு விற்கப்பட்டது. இதனால் பலரும் கோபம் அடைந்தனர்.

தண்ணீர் இல்லை. குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது? எதையாவது வாங்க வேண்டும் என மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.

மேலும் காவல் துறையினரும் போதுமான அளவு இல்லை. ரூ. 1000 டிக்கெட் வாங்கியவர்கள் ரூ. 5000 சீட்களில் அமர்ந்தனர். இதனால் அவர்களுக்கு உட்கார சேர்கள் இல்லாமல் போனது.

மேலும் பலரும் நிற்க ஆரம்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி தொடங்கி 2 மணி நேரத்திற்கு மெலோடி மற்றும் சோக பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது. இதனால் 10 மணிக்கே நிறைய பேர் கலைந்து சென்றனர்.

ஆக.. இசையை கேட்க வந்தவர்களுக்கு இந்த இளையராஜாவின் இசை விழா இம்சை ஆனது.

Ilayaraaja Concert controversy happened on his birthday

தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தன்மானம் காத்த தமிழன்..; ஹிந்தியில் மீண்டும் காஞ்சனாவை இயக்கும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.

பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.

தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

Raghava Lawrence is back to direct the Hindi version of Kanchana

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

‘காட்டுப்பய காளி’ ஜெய்வந்த்தின் நல்ல மனசு; போலீசுக்கு கூலிங் கிளாஸ் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actor Jaivanth sponsored Cooling Glass to Police departmentநேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது.
அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது.

நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படா வண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், முதற்கட்டமாக எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு தலா ஒரு கூலிங்கிளாஸ் வழங்கியிருக்கிறார் நடிகர் ஜெய்வந்த்.

ஜெய்வந்த் ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய திரைப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். தற்போது ‘அசால்ட்’ எனும் அதிரடி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை தனக்கு ஏற்படுத்தித் தந்த காவல் துறையினருக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்தார் ஜெய்வந்த்.

Actor Jaivanth sponsored Cooling Glass to Police department

சென்னைவாசிகளே… அடுத்த தலைமுறைக்கு நல்லது செய்ய ஓர் அரிய வாய்ப்பு

சென்னைவாசிகளே… அடுத்த தலைமுறைக்கு நல்லது செய்ய ஓர் அரிய வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A great opportunity to do good thing for Namma Chennai சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தவறான பிளாஸ்டிக பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும் , சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்துகிறது.

சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்படுகிறது.

நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம் ?

வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா? எதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச் செல்ல வேண்டுமா?

வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால் மட்டும் போதுமா?

ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா ?

நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த ‘இயற்கையோடு இணைவோம்’ இயக்கம்.

ஜூன் 5ல் நம்ம சென்னை முன்னெடுக்கும் செயல்பாடுகள் பலவற்றில் ஒன்றாக பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள குப்பைகளை காலை 6 மணி முதல் 8 மணி வரை அகற்றும் பணியை செய்கிறார்கள் .இந்த தூய்மைப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கு பெறுகிறார்கள் .

அக்னி தொழில்நுட்பக் கல்லூரி, தாழம்பூரில் காலை 10 மணி முதல் 8 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அப்போது சுழல் ஆர்வலர்கள் சுற்றுச்சூழலை செழுமையாக வளர்க்கும் சாத்தியங்களையும் விவசாயத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் வருங்கால சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளை மேம்படுத்தும் திட்டங்களையும் ஆராய்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்.

மாலை 4 மணி முதல் 8 மணி வரை பசுமை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழலை வளர்ப்பது பற்றியும் நம்ம சென்னையைப் பசுமை நகரமாக மாற்றுவது பற்றியும் விவசாய உற்பத்தி ஊக்குவிப்புகள் பற்றியும் பேசப்படும் .அதுமட்டுமல்ல ஏற்கெனவே பசுமைப் பணிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்களில் தன்னலம் கருதாது இயங்கி வரும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் நாயகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படும்.

சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா இயக்கமும் அக்னி கல்லூரியில் நூறு மரங்களை நட்டு தொடங்கி வைக்கப்படும் .

உயிர் வாழும் ஒரே கிரகம் பூமி மட்டும்தான். இருக்கிற ஒரு பூமியை மரங்கள் வளர்த்துப் பசுமை போர்த்திக் காப்பாற்றுவோம். ஏனென்றால் நம் பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .

இந்த இயக்கத்தில் பல பிரபலங்களும் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களும் இணைந்து “இயற்கையோடு இணைவோம்” என்கிற முழக்கத்தின் குரலை உரத்து ஒலிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறார்கள் நம்ம சென்னை இயக்கத்தினர்.

மேலும் விவரங்களுக்கு:
8220865671, 8110996026

A great opportunity to do good thing for Namma Chennai

More Articles
Follows