அஜித் படத்திற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் இதன் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் தல 58 படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும், அப்படத்தை அமிதாப்பச்சன் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தல 58 படத்தை தான் தயாரிக்கவில்லை என திட்டவட்டமாக ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தல 58 படத்தின் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

அஞ்சல் துறையையும் விட்டு வைக்காத ‘கபாலி’ காய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தமிழ் படத்தை தமிழர்கள் கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ரஜினி நடித்துள்ள கபாலி உலக சினிமாவே கொண்டாடும் திருவிழாவாக மாறியிருப்பதுதான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு விமானம் முதல் வெள்ளி நாணயம் வரை புரோமோஷன் செய்யப்பட்டு வருவதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இந்நிலையில், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் மற்றும் கர்நாடக அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து கபாலி சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.

தற்போது சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக பொது இடங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுநாள் வரை தனியார் நிறுவனங்களே இதன் விளம்பரங்கள் ஈடுபட்டன. தற்போது அரசு துறையும் இதில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பூகம்பத்தை பொய்யாக்கிய தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள முடிஞ்சா இவன புடி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் நாயகன் நான் ஈ புகழ் சுதீப் கலந்து கொண்டார். இவருடன் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது….

முதலில் இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் அவர் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே கேஎஸ் ரவிக்குமாரிடன் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் வருவார்கள் என்றார்.

ஆனால் அவங்கள வருவாங்களா? அவர்களுக்குள் பிரச்சினை இருப்பது போல பேசிக் கொள்கிறார்களே என்றேன்.

அவர்கள் மூவரும் சேர்வது பூகம்பம்தான் என்றனர். ஆனால் இங்கே அவர்கள் மூவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒன்றாக வந்து அந்த வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி” எனப் பேசினார்.

‘சூப்பர் பிகர் ஜி நீங்க…’ சிவகார்த்திகேயனிடம் கூறிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப், நித்யா மேனன், சதீஷ், டெல்லி கணேஷ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் முடிஞ்சா இவன புடி.

தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூரப்பா பாபு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தனுஷ் தலைமையில் பாடல்களை விஜய் சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது… என்னோட ரெமோ கெட்டப்பை பார்த்து சூப்பர் பிகர் ஜி நீங்க அப்படின்னு விஜய்சேதுபதி சொன்னாரு” என்று குறிப்பிட்டார்.

எம்ஜிஆர் பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என அனைத்திலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டு பாடல் காட்சிகளை சமீபத்தில் மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

அதில் ஒரு பாடலில்… எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இதில் இவருடன் நிக்கி கல்ராணி ஆடியிருக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், சதீஷ், வம்சி கிருஷ்ணா, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சாய் ரமணி இயக்கி வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர் பி சௌத்ரி தயாரித்து வருகிறார். இசை அம்ரேஷ் கணேஷ்.

தெலுங்கு திரையுலகம் செல்லும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடரி மற்றும் கொடி ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையில் தமன் இசையமைப்பில் உருவாகிவரும் திக்கா என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம் தனுஷ்.

இதில் நாயகனாக சாய் தரம் தேஜா நடிக்கிறார். சுனில் ரெட்டி இயக்க, டாக்டர் ரோகின் ரெட்டி தயாரிக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows